Header Logo
SLIC
மலையகம்
ஹட்டனில் புதிதாகத் திறக்கப்பட்ட சுப்பர் மார்க்கெட் மீது தாக்குதல்: நால்வர் கைது

Jan 29, 2026 - 12:01 PM

ஹட்டனில் புதிதாகத் திறக்கப்பட்ட சுப்பர் மார்க்கெட் மீது தாக்குதல்: நால்வர் கைது
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டன் நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாமையில், சுற்றுவட்ட வீதியில் நேற்று (28) புதிதாகத் திறக்கப்பட்ட சுப்பர் மார்க்கெட் (Supermarket) ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

முறையான அனுமதியின்றி இந்தச் சுப்பர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டதால் ஹட்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

குறித்த விற்பனை நிலையத்தில் மீன் மற்றும் கோழி இறைச்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஹட்டன் நகர மீன் மற்றும் கோழி இறைச்சி வியாபாரிகளும், அங்கு பணிபுரியும் ஊழியர்களும் கடையைத் திறக்கக் கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த சுப்பர் மார்க்கெட்டைத் திறப்பதற்கான அனுமதி கோரப்பட்டபோது, கடந்த நகர சபைக் கூட்டத்தில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே நேற்று சுப்பர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த நகர சபைத் தலைவர், "தற்போதைய சட்ட விதிகளின்படி குறித்த இடத்தில் மீன் மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்ய அனுமதி வழங்க முடியாது. 

எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நகர சபைக் கூட்டத்தில், நகரின் மத்தியில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொது சுகாதாரப் பரிசோதகர்களும் வருமான வரி அதிகாரிகளும், அடுத்த நகர சபைக் கூட்டம் நடைபெறும் வரை கடையை மூடி வைக்குமாறு உத்தரவிட்டனர். 

இந்நிலையில், நேற்று மாலை குறித்த சுப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த குளிரூட்டி (Freezer) மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 

சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஹட்டன் கோட்ட கைரேகை அடையாளப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278