Header Logo

வணிகம்
கொமர்ஷல் வங்கி அட்டைகள், நாடு முழுவதும் உள்ள மிகப் பரந்த வர்த்தக நிலையங்களில் புத்தாண்டு சலுகையாக 70% வரை விலைக்கழிவுகளை வழங்குகின்றன

Mar 25, 2026 - 02:36 PM -

0

கொமர்ஷல் வங்கி அட்டைகள், நாடு முழுவதும் உள்ள மிகப் பரந்த வர்த்தக நிலையங்களில் புத்தாண்டு சலுகையாக 70% வரை விலைக்கழிவுகளை வழங்குகின்றன

கொமர்ஷல் வங்கி, சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது பண்டிகைக்கால சிறப்பு சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கிணங்க கடன் மற்றும் வரவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் உள்ள பரந்த வர்த்தக நிலையங்களின் வலையமைப்பில் 70% வரை விலைக்கழிவுகள் வழங்கப்படுகின்றன. 

2026 ஏப்ரல் 30 வரை இடம்பெறவுள்ள இந்த ஆண்டுக்கான சிறப்பு சலுகைகள், வங்கியின் அட்டை நாட்காட்டியில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் 579-க்கும் மேற்பட்ட வர்த்தகப் பங்குதாரர்கள் மற்றும் 4,000-க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்கள் இணைந்துள்ளன. இதன் மூலம், பல்வேறு வாழ்க்கை முறைப் பிரிவுகளில் வாடிக்கையாளர்கள் பெருமளவில் சேமிப்புகளை அனுபவிக்க முடியும்.வங்கியின் முக்கியமான மற்றும் மிகவும் வரவேற்கப்படும் ஆண்டு திட்டங்களில் ஒன்றாகிய இந்த சலுகைத்திட்டமானது, குடும்பங்களையும் சமூகங்களையும் மேலும் நெருக்கமாக இணைத்து, புத்தாண்டுகால உற்சாகத்தை பரப்பும் கொமர்ஷல் வங்கியின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன், எளிதாகவும், பெருந்தன்மையுடனும் பண்டிகையை கொண்டாட முடியும்;. மேலும், பண்டிகைத் தயாரிப்புகளின் அனைத்து அம்சங்களிலும் அர்த்தமுள்ள சேமிப்புகளின் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள முடியும். 

இந்த சலுகை திட்டம், புத்தாண்டு ஷொப்பிங் மற்றும் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய பல்வேறு சில்லறைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதில் 221 ஆடை, ஃபேஷன் மற்றும் அணிகலன் விற்பனையாளர்கள், 20 காலணி மற்றும் தோல் பொருட்கள் வழங்குநர்கள், 17 நகை விற்பனையாளர்கள், 69 வாழ்க்கை முறை வர்த்தக நிலையங்கள், 11 சலூன், ஸ்பா மற்றும் அழகு சாதன சேவை வழங்குநர்கள், 5 கடிகாரம் மற்றும் அணிகலன் விற்பனையாளர்கள், மேலும் 80 இணைய ஷொப்பிங் பங்குதாரர்கள் அடங்குகின்றனர்.இதனுடன், 4 சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள், 17 சுகாதார சேவை பங்குதாரர்கள், 38 உணவகங்கள், 6 வாகனத் தொடர்புடைய வர்த்தகர்கள், 90 ஹோட்டல்பங்குதாரர்கள் மற்றும் ஒரு புத்தகக் விற்பனை நிலையமும் இந்த சலுகை திட்டத்தில் பங்கேற்கின்றன. 

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பங்கேற்கும் வர்த்தகப் பங்குதாரரும், ஆறு வார காலப்பகுதியில் குறிப்பிட்ட நாள்களில் கொமர்ஷல் வங்கியின் கடன் மற்றும் வரவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு தனிப்பட்ட விலைக்கழிவுகளை வழங்குவார்கள். இந்த சலுகைகளை விற்பனை நிலையங்கள் மற்றும் இணையதளம் ஆகிய இரு வழிகளிலும் பெற்றுக்கொள்ளலாம். அதனால், வாடிக்கையாளர்கள் நேரடியாக விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்தாலும் அல்லது டிஜிட்டல் தளங்கள் மூலம் கொள்வனவு செய்தாலும் பண்டிகை சலுகைகளை எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும். 

கொமர்ஷல் வங்கியின் அட்டை நிலையத்தின் பிரதம முகாமையாளர் சீவலி விக்ரமசிங்க தெரிவிக்கையில் புத்தாண்டு சிறப்பு சலுகை திட்டம் வங்கியின் மிகப்பெரிய பண்டிகைக்கால பிரசாரமாகத் தொடர்ந்து வருகிறது என்றும், இலங்கையில் மிகவும் முக்கியமான பண்டிகை காலங்களில் ஒன்றான இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள சேமிப்புகளையும் வசதியையும் வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த ஆண்டின் பிரசாரம் கொமர்ஷல் வங்கி கடன் மற்றும் வரவு; அட்டை வைத்திருப்பவர்களுக்கு இதுவரை காணப்பட்ட மிகப்பெரிய பண்டிகைக்கால சலுகைகளின் தொகுப்பை கொண்டுள்ளதாகவும், வர்த்தக பங்குடைமைகளை விரிவுபடுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு அதிக பெறுமதியை வழங்கவும் வங்கி மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை இது பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title