Header Logo

வணிகம்
விரிவாக்கத்தை முன்னெடுக்கவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் JXG குழுமம் ஆரம்பப் பொது வழங்கல் (IPO) நடவடிக்கையை அறிவித்துள்ளது

Mar 25, 2026 - 02:39 PM -

0

விரிவாக்கத்தை முன்னெடுக்கவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் JXG குழுமம் ஆரம்பப் பொது வழங்கல் (IPO) நடவடிக்கையை அறிவித்துள்ளது

இலங்கையின் வளர்ந்து வரும் பன்முக நிதிக் குழுமமும் ஜனசக்தி குழுமத்தின் பிரதான நிறுவனமுமான JXG, ரூ.5 பில்லியன் பெறுமதியான தனது ஆரம்பப் பொது வழங்கல் (IPO) நடவடிக்கையை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இக் குழுமம் First Capital Holdings பிஎல்சி, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி மற்றும் ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

JXG, பங்கொன்றுக்கு தலா ரூ.10.00 வீதம் 500 மில்லியன் சாதாரண பங்குகளை வழங்குகிறது. இது IPOக்கு பின்னர் 21.74% பங்கினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மதிப்பீட்டின் அடிப்படையில் JXGஇன் பங்கொன்றின் பெறுமதி ரூ.15.92 ஆக உள்ளது. நிறுவன மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் இவ் IPO பெறுமதி 37.18% சலுகையில் வழங்கப்பட்டுள்ளது. 

‘Breaking Barriers, Forging Futures’ என்ற தொலைநோக்குப் பார்வையை வழிகாட்டியாகக் கொண்டு JXG, செல்வத்தை தனிநபர்களையும் வணிகங்களையும் முன்னேற்றும் சக்தியாக கருதுவதுடன் தங்களின் எதிர்காலத்தை தாங்களே உருவாக்க உதவுகிறது. உறுதியான நம்பிக்கையும் நிதித்துறை நிபுணத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, குழுமம் தனது நிதிச் சேவைகளை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தி நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்க எண்ணியுள்ளது. 

JXG நிறுவனம், IPOஇன் ஒரு பகுதியான ரூ.3.5 பில்லியனை பொதுக் காப்புறுதி, நுண்நிதி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFI) ஆகிய துறைகளில் மூலோபாய நுழைவு மற்றும் விரிவாக்கத்திற்காக ஒதுக்கி தனது நிதிச் சேவைகளை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் உத்தேசித்துள்ளது. மேலும் ரூ.500 மில்லியனை இலங்கைக்கு வெளியே, முதலீட்டு வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி ஆகிய அதன் தற்போதைய முக்கிய மூன்று துறைகளுக்குள் பிராந்திய விரிவாக்க முயற்சிகளுக்கு பயன்படுத்தவுள்ளது. அத்துடன் ரூ.1 பில்லியனானது கடனைத் திருப்பிச் செலுத்தவும், மூலதனக் கட்டமைப்பை மேம்படுத்தவும் நிதி நெகிழ்வுத்தன்மைக்கும் பயன்படுத்தப்படும். 

IPO, 2026 ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டிற்கு First Capital Advisory Services (Pvt) Ltd முகாமையாளராகவும் நிதி ஆலோசகராகவும் செயல்படுகிறது. 

JXG குழுமத்தின் தலைவரான சந்தன டி சில்வா இது தொடர்பாக கூறுகையில், JXGஇன் பயணத்தில் இந்த IPO வெளியீடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க படியாகும். இது எங்களின் நிதிச் சேவைகளை விரிவுபடுத்தவும், சர்வதேச அரங்கில் செயல்படவும், நிதிநிலைக் கணக்கை வலுப்படுத்தவும் தேவையான மூலதனத்தை வழங்குகிறது. முக்கியமாக, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்துகிறது. இது அனைத்து பங்குதாரர்களிடமும் நம்பிக்கையை உருவாக்கும் நல்ல நிர்வாகத்தை உறுதி செய்கிறது. இந்த வெளியீடு, இலங்கையின் எதிர்காலத்தின் மீது JXG வைத்துள்ள நம்பிக்கையையும், தனிநபர்களையும் வணிகங்களையும் முன்னேற்றுவதற்காக செல்வத்தை மறுவடிவமைக்கும் எங்களின் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. என்றார். 

JXG இன் முகாமைத்துவப் பணிப்பாளர்/குழுமப் பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஷாஃப்டர் மேலும் கூறுகையில், JXGஇல், நாங்கள் காப்புறுதி, முதலீட்டு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி ஆகியவற்றை ஒரே அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைத்து, எதிர்காலத்திற்கு ஏற்ற நிதிக் குழுமத்தை உருவாக்குகிறோம். பிரதான நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது புதிய வளர்ச்சிப் பயணத்தின் ஆரம்பமாகும். இது எங்களை சர்வதேச ரீதியாக விரிவடையவும், நிதிச் சேவைகளை விரிவாக்கவும், சந்தையில் எங்கள் நிலையை வலுப்படுத்தவும் உதவும். முதலீட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகங்கள் முன்னேறவும், நீடித்த மதிப்பை உருவாக்குவதற்குமான வாய்ப்பை வழங்குகிறது. என்றார். 

பட்டியலிடப்பட்ட நிறுவனமாக JXG, ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பொறுப்புடன் பதிலளிக்கும் உயர்ந்த வெளிப்படைத்தன்மைக்கு தன்னை அர்ப்பணிக்கின்றது. மேலும் ஐந்து சுயாதீன, நிர்வாகமற்ற பணிப்பாளர்களுடன் வலுவான சுயாதீன மேற்பார்வை ஏற்கனவே அதன் பணிப்பாளர் சபைக்கு ஆதரவாக உள்ளது. 

JXG தொடர்பாக (ஜனசக்தி குழுமம்) 

JXG (ஜனசக்தி குழுமம்) இலங்கையில் காப்புறுதி, நிதியியல் மற்றும் லீசிங் மற்றும் முதலீட்டு வங்கியியல் துறைகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ள இலங்கையின் பன்முக நிதிக் குழுமம் ஆகும். குழுமத்தின் ஒவ்வொரு வணிகமும், அவற்றின் துறைகளில் ஒப்பற்ற முன்னோடியாக திகழ்கின்றது. JXG, ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் தொண்டு நிறுவனமான ஜனசக்தி அறக்கட்டளை ஆகியவற்றை உள்ளடக்கியது. 

JXGஇன் செயற்பாடுகள் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறுவனரும் முன்னாள் தலைவருமான திரு.C.T.A.ஷாப்டர் அவர்களால் இலங்கையின் முதலாவது விசேடத்துவம் வாய்ந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தொழிற்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்தது. கடந்த தசாப்த காலங்களில், மூலோபாய ஒன்றிணைவுகள் மற்றும் கையகப்படுத்தல்களினூடாக, ஜனசக்தி குழுமம் விரிவாக்கமடைந்துள்ளது. 

வர்த்தக நாமத்தில் காணப்படும் X என்பதனூடாக, வாய்ப்புகள், விரிவாக்கம் மற்றும் சிறந்த வளர்ச்சி ஆகியன வெளிப்படுத்தப்படுகின்றன. இது ஒருங்கிணைந்த நிறுவனமாக ஒன்றிணைந்த வாய்ப்புகளை உணர்த்துகின்றது. ‘Breaking Barriers, Forging Futures’ என்ற தனது நோக்கத்தின் வழிகாட்டுதலுடன், JXG இலங்கையின் நிதித் துறையின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title