Header Logo

வணிகம்
புரட்சிகமான ''அக்யுவாசேப்'' பிரச்சாரத்திற்காக எப்பி விருதுகளில் வெற்றிபெற்ற ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே

Mar 26, 2026 - 03:07 PM -

0

புரட்சிகமான ''அக்யுவாசேப்'' பிரச்சாரத்திற்காக எப்பி விருதுகளில் வெற்றிபெற்ற ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே

இலங்கை நிறப்பூச்சு துறையில் தலைவனான, ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே, “அக்யுவாசேப்“ திறன்பராமரிப்பின் தாக்கமிக்க சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திற்காக பெருமைமிகு எப்பி விருதுகளில் அதன் வகைப்பாட்டிற்கான உயரிய விருதினை தக்கவைத்துள்ளது. “மழை நின்றுவிட்டது, ஆனால் வீடு மங்கிவிட்டது” என்பதனை மையமாகக் கொண்ட பிரச்சாரமானது இலங்கையின் வாட்டர்ப்ருப்பிங் சந்தையினை மீள்வரையறுத்த அதனது புத்தாக்க சிறப்பு மற்றும் வினைதிறனிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இக்கௌரவமானது ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையின் மொனார்க் இம்பீரியலில் சமீபத்தில் இடம்பெற்ற எப்பி விருதுகள் இலங்கை 2026 இல் வைத்து வழங்கப்பட்டுள்ளது. வினைத்திறனான சந்தைப்படுத்தலிற்கான பூகோள தங்கத் தரநியமமாக, எப்பி விருதுகளானது நிச்சயமான பெறுபேறுகளை வழங்கும் சிந்தனைகளை கௌரவிக்கின்றது. இப்போட்டித்தன்மைமிக்க புலத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் வெற்றியானது சந்தை தலைமைத்துவ செயலாற்றுகைகளை முன்னோக்கி செலுத்தக்கூடிய ஆழமான நுகர்வோர் சிந்தனையாக்கங்களுடன் தொழிநுட்ப புத்தாக்கங்களை கலக்கச்செய்யும் கம்பெனியின் திறனை வெளிப்படுத்துகின்றது. 

விருது வென்ற பிரச்சாரமானது இலங்கையின் வீட்டுரிமையாளர்களது நீண்டகால வலிப்புள்ளியினை - மந்தகாசநிலை மற்றும் கட்டமைப்பு ஈரப்பதன் பாதிப்பிற்கு எதிரான பருவகால சிரமங்களை விளக்குவதாக காணப்பட்டது. பிரயோகம் மற்றும் அழகியல் மட்டுப்பாடுகளில் மாத்திரம் பாரம்பரிய வாட்டர்ப்ருப் தீர்வுகள் கவனம்செலுத்திய சமயத்தில், “வாட்டர்ப்ருப்பிங் உடனான அக்யுவாசேப் வெளிப்புற பாதுகாப்பு“ பிரச்சாரமானது இக்கதையாடல்களை நிர்மூலமாக்கியுள்ளது. இது இவ்வுற்பத்தியினை 2 மடங்கு உயர்தர நீடிப்பு மற்றும் வீட்டின் கட்புல நுட்பங்களுடன் சமரசம் செய்துகொள்ளாது பாசி மற்றும் பங்கசுகளுக்கான வலுவான எதிர்ப்பினையும் வழங்கும் முன்னணி எமல்சனாக நிலைப்படுத்தியுள்ளது. 

இவ்வெற்றி குறித்து கருத்துரைக்கையில், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் நாட்டிற்கான தலைவர் திரு. வைத்திலிங்கம் கிரிதரன் அவர்கள், ”ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயில், எமது புத்தாக்கமானது எமது வாடிக்கையாளர்கள் குறித்த ஆழமான, தன்னுணர்வான புரிந்துணர்வுகளுடன் முற்செலுத்தப்படுகின்றது. நாம் இலங்கை வீடுகளது விசேட தேவைகளை பிரதிபலிக்கும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகின்றோம். வாட்டர்ப்ருப்பிங்கின் செயற்பாட்டுத் தேவைப்பாடுகளை வெளியிடுவதற்கும் அப்பால் எமது வாடிக்கையாளர்கள் எவ்வாறு சிந்திக்கின்றார்கள் மற்றும் அவர்கள் என்ன எதிர்ப்பாரக்கின்றார்கள் என்பதனை புரிந்துக்கொண்டமையே இப்பிரச்சாரத்தின் வெற்றியை சாத்தியமாகியது. எமது தொடர்பாடல்களை அவர்களது விருப்பங்களான சமரசமற்ற பாதுகாப்பு மற்றும் அழகியல் பெருமை எனவிரண்டுடனும் ஒருங்கிணைத்தமையினால், உண்மையான தனிப்பட்ட மட்டத்தில அவர்களுடன் இணைவதனை சாத்தியமாக்கியது.” என்றார். 

இம்மூலோபாயம் குறித்து கருத்துரைக்கையில், சந்தைப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல் துறை தலைவர், அனுராதா எதிரிசிங்க அவர்கள், ”இப்பிரச்சாரத்தின் வெற்றியானது சிக்கலான தொழிநுட்ப ஆளுமைகளை எளிமையான, உணர்ச்சிரீதியில் நியாயமான உத்தரவாதங்களுக்குள் பரிமாற்றுவதில் தங்கியிருந்தது. இவ்வங்கிகாரமானது எமது தரவு மைய அணுகுமுறையை மதிப்பிற்குள்ளாக்குவதுடன் கண்ணியமான உற்பத்தி வினைத்திறனுடன் புத்தாக்கமான கதையாடல்களை ஒருங்கிணைத்தலானது சந்தை நோக்கினை மடைமாற்றுவதுடன் அளவிடத்தக்க வளர்ச்சியினையும் முன்னோக்கிச் செலுத்துகின்றது என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது” எனக்கூறினார். 

தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் அடிமட்ட செயற்படுத்தல் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரமானது அக்யுவாசேப்பின் மழையிலிருந்தான பாதுகாப்பு தொழிநுட்பத்தினை காட்சிப்படுத்த தொடர்புடைய இல்ல காட்சியமைப்புக்களை உட்படுத்தியிருந்தது. ”புதிதாக நிறப்பூச்சு பூசப்பட்டவாறான” பிரகாசத்தினை பேணியவாறே 3 அடிமட்ட நீர் அழுத்தத்தினை தாங்கும் உற்பத்தியின் இயலுமையை காட்சிப்படுத்தியதனால், இப்பிரச்சாரமானது வரலாற்று சாதனைமிக்க விற்பனையை முன்னோக்கி செலுத்தியதுடன் முன்னணி வெளிப்புற பகுதிகளிலான வர்த்தகநாமத்தின் கால்தடத்தை குறிப்பிடத்தக்களவில் விரிவும்படுத்தியது. 

இச்சமீபத்திய அங்கீகாரமானது இலங்கை கட்டிடக்கலை நிறுவக (SLIA) விருதுகளில் அக்யுவாசேப் கட்டிடக்கலைக்கான தேசத்தின் அதியுயர் தொழிற்சார் அங்கத்தினால் வழங்கப்படும் உயரிய கௌரவமான அதியுன்னததிற்கான விருதினை பெற்ற, வர்த்தகநாமத்தின் வெற்றியினை தொடர்ந்து கிடைக்கப்பெற்றுள்ளது. இது துறைசார் தொழிற்சார்பாளர்கள் மற்றும் வீட்டுரிமையாளர்கள் என இருவராலும் விரும்பப்படும் தெரிவாக உற்பத்தியின் நிலையினை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே என்பது உலகின் முன்னணி நிறப்பூச்சு கம்பெனிகளில் ஒன்றான ஏசியன் பெயிண்ட்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இலங்கை சந்தைக்கு சர்வதேச R&D மற்றும் தொழிநுட்ப நிபுணத்துவத்தினை கொணரும் அர்ப்பணிப்புடன், கம்பெனியானது நவீனமாக கட்டமைக்கப்பட்ட சூழல்களுக்கான நீடித்ததன்மை மற்றும் அழகியலை மறுவரையறுத்த நீடித்ததும் புத்தாக்கமானதுமான நிறப்பூச்சு தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்தும் முன்னோடியாகத் திகழும்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title