Mar 27, 2026 - 03:25 PM -
0
சென்சோடைன் பற்தூரிகை உற்பத்தியாளர்களான Haleon Lanka Pvt Ltd, 2026ஆம் ஆண்டு உலக வாய் சுகாதார தினத்தைக் கொண்டாடும் விதமாக நாடெங்கிலும் தாக்கம் ஏற்படுத்திய தொடர் வாய் சுகாதார நிகழ்வுகளை வெற்றிகரமாக நடாத்தியது. இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) இணைந்து நடாத்தப்பட்ட இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச பல் பரிசோதனைகள் ஊடாக இலட்சக்கணக்கான இலங்கையர்கள் பயனடைந்தனர். Haleon இன் முன்னணி பல் கூச்ச நிவாரண பற்பசை மற்றும் பற்தூரிகை வர்த்தக நாமமான சென்சோடைன், உலகளவில் பல் கூச்சப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. SLDA உடனான ஒத்துழைப்பின் ஊடாக இலங்கையில் வாய் சுகாதாரக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் அதன் அர்ப்பணிப்பை Haleon மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
#BeSensitivetoOralHealth: Take the First Step என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந் நாடு தழுவிய முன்னெடுப்பு, வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதையும், சிறந்த வாய் சுகாதாரப் பழக்கவழக்கங்களை நோக்கி இலங்கையர்களை முதல் அடியை எடுத்து வைக்கத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இத் திட்டம், சனத்தொகையின் குறிப்பிடத்தக்க பகுதியினரைப் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையான பல் கூச்சத்திற்கு தீர்வு வழங்குவதை இலக்காகக் கொண்டது. இவ் விரிவான பிரச்சாரத்தின் போது SLDA உறுப்பினர்களால் கல்வி அமர்வுகள் நடாத்தப்பட்டன. இதன் போது சரியான பல் துலக்கும் நுட்பங்கள், முறையான பல் பரிசோதனைகளின் முக்கியத்துவம் மற்றும் கூச்சம் உள்ள பற்களைக் கையாள்வதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பல இடங்களில் நடாத்தப்பட்ட இலவச பல் பரிசோதனை முகாம்களில் 10,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் தொழில்முறை மதிப்பீடுகளையும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் தலைவர் Dr. ஆனந்த ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், “இந்த முக்கியமான தேசிய முன்னெடுப்பிற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் Haleon Sri Lanka இற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆர்வமான ஈடுபாடும் பரந்த வள ஆதரவும், 2026 உலக வாய் சுகாதார தின நடவடிக்கைகளின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன. இது பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் நிறுவனத் துறைக்கும் பல் மருத்துவத் துறைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மைகளின் மதிப்பைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.” என்றார்.
Haleon Lanka Pvt Ltd இன் வர்த்தகப் பணிப்பாளர் மஞ்சுல வீரகோன் மேலும் கூறுகையில், வாய் சுகாதாரம் என்பது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும் இலங்கையில் அது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இலங்கை பல் மருத்துவ சங்கத்துடனான (SLDA) எமது நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் நாடெங்கிலும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ஒரு முன்னணிப் பங்கை வகிப்பதில் Haleon பெருமை கொள்கிறது. நாங்கள் ஒன்றாக, விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூகங்களுக்கு கல்வி புகட்டி, வாய்ப் பராமரிப்பை ஒரு நாளாந்தப் பழக்கமாக மாற்றிக்கொள்ள மக்களை ஊக்குவித்து வருகிறோம். இந் நோக்கத்திற்கு ஆதரவாக, Haleon இன் முதன்மை வாய் சுகாதார வர்த்தக நாமமான சென்சோடைன், பல் கூச்சத்திற்கான நம்பகமான தீர்வுகளை வழங்கி, இலங்கையர்கள் சௌகரியத்துடன் ஆரோக்கியமான புன்னகையைப் பெற உதவுகிறது. என்றார்.
வாய் சுகாதார தினத்திற்குப் பிறகும் அதனை நோக்கிய பயணம் தொடர்வதை உறுதிசெய்யும் வகையில், இப் பிரச்சாரத்தின் வெற்றியை ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் ஊடாக தொடர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Haleon தொடர்பாக:
Haleon, அன்றாட ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு நுகர்வோர் நிறுவனமாகும். எங்கள் ஊழியர்கள், வர்த்தக நாமங்கள், ஆய்வு, முதலீடு மற்றும் புத்தாக்கம் ஆகியவை நுகர்வோரின் அன்றாட ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இலங்கையில் எங்கள் தயாரிப்புக்கள் வாய்வழி ஆரோக்கியம், செரிமான ஆரோக்கியம், வலி நிவாரணம் மற்றும் சுவாச ஆரோக்கியம் (PRS) உள்ளிட்ட முக்கிய பிரிவுகளை உள்ளடக்குவதுடன் பனடோல், குழந்தைகளுக்கான பனடோல் (திரவம்), பனடீன், அயோடெக்ஸ், சென்சோடைன், ஈனோ, வோல்டரன் ஜெல், பிரிட்டன் மற்றும் கோர்சோடைல் போன்ற உயர்தர வர்த்தக நாமங்களையும் கொண்டுள்ளது.
