Header Logo

இந்தியா
ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின் - விஜய்

Mar 30, 2026 - 12:45 PM -

0

ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின் - விஜய்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23 ஆம் திகதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (30) தொடங்கியது. 

சென்னை, கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4 ஆவது முறை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாளை (31) முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். 

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

இதேபோல் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். 

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

title