Header Logo

வணிகம்
கொமர்ஷல் வங்கியானது UNGC இலங்கை வலையமைப்பின் இரண்டு செயற்குழுக்களின் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது

Mar 30, 2026 - 01:57 PM -

0

கொமர்ஷல் வங்கியானது UNGC இலங்கை வலையமைப்பின் இரண்டு செயற்குழுக்களின் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது

கொமர்ஷல் வங்கியானது, UNGC இலங்கை வலையமைப்பின் (UN Global Compact Network Sri Lanka) பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் மற்றும் நீர் மற்றும் பெருங்கடல் பாதுகாப்பு செயற்குழுக்களின் காப்பாளராக இணைவதன் மூலம், அதன் முக்கிய நிலைபெறுதகுதன்மை முன்னுரிமைகளை முன்னெடுப்பதில் ஒரு தலைமைத்துவப்பங்கை ஏற்றுள்ளது. 

கொமர்ஷல் வங்கி மற்றும் UNGC இலங்கை வலையமைப்பு ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்திடப்பட்ட இரண்டு ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், வங்கி இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக, குறித்த இரண்டு செயற்குழுக்களுக்கும் வங்கி தனது காப்பாளர் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளதுடன், நிலைபேறான நீர் முகாமைத்துவம் மற்றும் உள்ளடக்கப்பட்ட வணிக நடைமுறைகளை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு வழிகாட்டும் பங்கையும் ஏற்றுள்ளது. 

இதற்கிணங்க கொமர்ஷல் வங்கியானது, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் மற்றும் நீர் மற்றும் பெருங்கடல் பாதுகாப்பு செயற்குழுக்களின் நோக்கங்களை முன்னேற்றுவதற்கு தலைமைத்துவத்தையும் ஆதரவையும் வழங்கவுள்ளது. மேலும் வங்கியானது, இந்த வலையமைப்புடன் இணைந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், கலந்துரையாடல்கள் மற்றும் பங்குடைமைகளை எளிதாக்கவும், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) நடைமுறைகளை வலுப்படுத்த விரும்பும் நிறுவனங்களின் அதிகமான பங்கேற்பை ஊக்குவிக்கவும் செயற்படும்.மேலும், இந்த இணைப்பானது, UNGCயின் பத்து கொள்கைகள் மற்றும் ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) நோக்கி முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தும். குறிப்பாக, நிலையான நீர் முகாமைத்துவம்,பெருங்கடல் பாதுகாப்பு, பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார பங்கேற்பு போன்ற துறைகளில் முன்னேற்றத்தை அடைவது வங்கியின் குறிக்கோளாக இருக்கும். 

இந்த முன்னெடுப்பு தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கருத்துத் தெரிவிக்கையில்: 

UNGC இலங்கை வலையமைப்புடன் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ள நீண்டகாலத் தொடர்பு, நிலைபெறுதகு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பொறுப்புமிக்க வர்த்தக மையங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற எமது நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ஷபன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்| மற்றும் ஷநீர் மற்றும் பெருங்கடல் பாதுகாப்பு| ஆகிய செயற்குழுக்களின் காப்பாளராக இணைந்திருப்பதன் மூலம், எமது வங்கியின் உள்ளக நிலைபெறுதகு நடைமுறைகளைத் தாண்டி, ஏனைய நிறுவனங்களின் நிலைபெறுதகு பயணங்களுக்கும் தீவிரமாக ஆதரவளிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் நாம் எமது ஈடுபாட்டை விரிவுபடுத்துகிறோம். இலங்கையின் சூழலியல் மீள்திறன், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீண்டகால பொருளாதார நிலைபெறுதகுதன்மைக்கு முக்கியமான துறைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு பங்களிக்க இந்த கூட்டாண்மை எமக்கு உதவுகிறது என்று கூறினார். 

கொமர்ஷல் வங்கியானது காப்பாளராக இலங்கை வலையமைப்புடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, நிறுவனங்களுக்கு உயர் தரமான நீர்முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் உள்ளடக்கிய பணியிட நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள வழிகாட்டும், அதேவேளை நிலைபெறுதகுதன்மை கருத்துக்களை அவர்களது வர்த்தகக் காட்சிகளில் ஒருங்கிணைக்க உதவும். நீர் மற்றும் பெருங்கடல் பாதுகாப்பு செயற்குழுவானது, நீர் வளங்களின் நீண்டகால கிடைப்பும் தரமும் பாதுகாக்கப்பட்டு, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையான நீர் முகாமைத்துவ நடைமுறைகளை ஊக்குவிப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் செயற்குழு, பாலினம், பின்னணி அல்லது அடையாளத்தை பொருட்படுத்தாமல் நபர்களை மதிக்கும் சமநிலை பணியிடங்களை உருவாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. மேலும், பாலின சமத்துவத்தை முன்னேற்றும், வேறுபாடுகளை நீக்கும், வேலைவாய்ப்பு, தலைமைத்துவம் மற்றும் பணியிட கலாசாரத்தில் சம வாய்ப்புகளை உருவாக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. வங்கியின் பங்களிப்பு, பெண்கள் முயற்சியாளர்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களை ஊக்குவிப்பது போன்ற பாலின சமநிலை மற்றும் பொருளாதார பங்கேற்பை வலுப்படுத்தும் முயற்சிகளையும் ஆதரிக்கும். இதன் மூலம், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சம வாய்ப்புகள், சேவைகள் மற்றும் நிதி ஆதரவு கிடைக்க உறுதி செய்யப்படும். 

இந்த முயற்சிகளில் வங்கியின் பங்கேற்பானது, நிறுவனத் துறை, நிலைபெறுதகுதன்மை நிபுணர்கள் மற்றும் மேம்பாட்டு அமைப்புகளுடன் பங்குடைமைக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம், பொதுத்-தனியார் பங்குடைமைகள் பலப்படுத்தப்பட்டு, பகிரப்பட்ட நிலைபெறுதகுதன்மை இலக்குகளுக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்க முடியும். 

காப்பாளர் என்ற அந்தஸ்து, அதன் செயற்குழுக்களின் முன்னுரிமைகளை முன்னேற்றுவதில் வலுவான தலைமையினை வெளிப்படுத்தும் தற்போதைய பங்கேற்பாளர் நிறுவனங்களுக்கு வலையமைப்பு மூலம் வழங்கப்படுகிறது. இது, UNGC இன் பத்து கொள்கைகளையும் தங்களது வணிக நடைமுறைகளில் செயல்படுத்தி, மேலும் பிற நிறுவனங்கள் தங்களது நிலைபெறுதகுதன்மை பயணங்களில் முன்னேற உதவும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. 

UNGC வலையமைப்பு, தமது செயற்குழுக்களின் முன்னுரிமைகளை மேம்படுத்துவதில் வலுவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும், ஏற்கனவே உள்ள பங்களிப்பு நிறுவனங்களுக்கு காப்பாளர் அந்தஸ்தை வழங்குகிறது. இது, ஐநா ஒப்பந்தத்தின் 10 கொள்கைகளைத் தமது வர்த்தகத்தில் சேர்த்து, நிலைபெறுதகுதன்மை பயணத்தில் மற்றைய நிறுவனங்களை ஆதரிக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. 

நீர் மற்றும் பெருங்கடல் பாதுகாப்புத் துறையில் கொமர்ஷல் வங்கியின் சுற்றுச்சூழல் முகாமைத்துவம் பலதரப்பட்டதாகும். இதில், கடற்கரை சுத்தம் மற்றும் பராமரிப்பு திட்டங்கள், பவளப்பாறைகள் மீட்பு, கடல் சரணாலய முகாமைத்துவம் மற்றும் மீட்பு, கண்டல் தாவரங்கள் மற்றும் கடல் சூழலியல் உயிரினங்கள் பாதுகாப்பு ஆகிய உயர்தர நடவடிக்கைகள் அடங்கும்.இந்த முயற்சிகள் அரசாங்க மற்றும் அரசாங்கம் அல்லாத அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதுடன் மற்றும் சுற்றுச்சூழல் மீட்பை சமூக-பொருளாதார மீள்திறனுடன்; ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டவை. 

தேசியப் பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமான, முறைப்படியான வங்கி என நியமிக்கப்பட்டுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையின் உறுதியான வங்கியாக உள்ளடக்கிய நிதியை தனது முக்கிய வங்கிச் சேவையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. இதற்காக, அவர்கள் முறைசார் வங்கிச் சேவைகளில் உள்ள பௌதிக, டிஜிட்டல் மற்றும் சேவை தொடர்பான தடைகளைக் குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிதியியல் ஆழத்தையும் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். பங்கேற்பை விரிவுபடுத்த குறிக்கோள் நடைமுறைகள், குறைவான சேவையளிக்கப்படும் பகுதிகளை முன்னுரிமையாக கையாளுவதன் மூலம், வங்கியின் வாடிக்கையாளர் அடிப்படையை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன, நிதி நடுவர் செயல்பாட்டை ஆழப்படுத்தியுள்ளன மற்றும் தகவல் பூர்வமற்ற செயல்பாட்டை குறைத்துள்ளன.வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரம் மிகுந்த நிறுவனங்கள் மற்றும் பெண்கள் போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது. இங்கு கட்டமைப்புத் தடைகள் முக்கியமானவை, மேலும் மூல வங்கி செயல்பாட்டின் மூலம் உள்ளடக்கமான பங்கேற்பு நிலைத்தன்மையான பங்களிப்பை உறுதிசெய்கிறது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது கொமர்ஷல் வங்கியை திரு சனத் மனத்துங்க, முகாமைத்துவப்பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு ஹஸ்ரத் முனசிங்க, பிரதிப் பொது முகாமையாளர் – பெருநிறுவன வங்கிப்பிரிவு மற்றும் திருமதி அஷாணி செனரத்ன, உதவி பொது முகாமையாளர் – சந்தைப்படுத்தல் ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்தனர். இலங்கை வலையமைப்பினை திரு தில்ஹான்ஃபெர்னாண்டோ,-தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்றதிகாரி Dilmah Tea மற்றும் UNGC இலங்கை வலையமைப்பின் தலைவர் பிரதிநிதித்துவம் செய்தார். 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

title