Mar 30, 2026 - 07:05 PM -
0
மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (31) மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று (30) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது வளிமண்டலத்தின் மேலடுக்கு நிலைமையால் ஏற்பட்டதல்ல என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைத்தளங்களில் பணியாற்றும் போது போதுமான அளவு நீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக சோர்வு தரக்கூடிய வேலைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும், வெள்ளை அல்லது மெல்லிய நிறத்திலான இலகுவான ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
