Header Logo

செய்திகள்
மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகள் நிராகரிப்பு

Mar 30, 2026 - 08:40 PM -

0

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகள் நிராகரிப்பு

அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை நிராகரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பணிமனைகளுக்கு விநியோகிப்பதற்காக 'சதொச' நிறுவனம் ஊடாக 14,000 கரம்போர்ட்கள் மற்றும் 11,000 தாயக்கட்டைகளை இறக்குமதி செய்து விநியோகித்ததன் மூலம் 39 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த விளையாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி, சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் ஒரு முக்கிய விடயத்தை முன்வைத்திருந்தனர். 

அதாவது, இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கில் தமது கட்சிக்காரர்கள் இருவரும் ஏற்கனவே குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், ஒரே குற்றச்சாட்டிற்கு மீண்டும் வழக்குத் தொடர முடியாது என அவர்கள் வாதிட்டனர். 

இந்த ஆட்சேபனைகளை நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் வழக்கு, இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய வழக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

இரண்டு சட்டங்களின் கீழும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் கூறுகள் வெவ்வேறானவை என்பதால், இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நீதிபதி தீர்ப்பளித்தார். 

அதன்படி, இந்த வழக்கை ஜூன் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

இன்றைய தினம் சிறைச்சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் இருவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

title