Header Logo

செய்திகள்
மாயமான மாணிக்கக்கல் வர்த்தகர் சுரங்கக் குழிக்குள் சடலமாக மீட்பு!

Mar 30, 2026 - 11:57 PM -

0

மாயமான மாணிக்கக்கல் வர்த்தகர் சுரங்கக் குழிக்குள் சடலமாக மீட்பு!

கஹவத்தை, நீலகம பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போயிருந்த மாணிக்கக்கல் வர்த்தகரின் சடலம், இன்று (30) சுரங்கக் குழி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

கஹவத்தை - நீலகம வீதியில் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் மாயமானமை தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

கஹவத்தை, கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயிருந்தார். 

கடந்த 28ஆம் திகதி பகல் வேளையில், குறித்த வர்த்தகர் கஹவத்தை - நீலகம வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

பின்னர், அவரது மோட்டார் சைக்கிள் அவ்வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டறியப்பட்டதுடன், நேற்றைய தினம் (29) அவரது கைபேசியும் அதே வீதிக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

Comments
0

MOST READ

காணொளி
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

title