Mar 31, 2026 - 02:00 PM -
0
கொமர்ஷல் வங்கியானது, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டீ சொய்சா (De Soysa Hospital) பெண்கள் மருத்துவமனையில் உள்ள 03ஆம் பிரிவை புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளது.வங்கியானது இந்தப் பணியின் மூலம் பெண்களை வலுப்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது. இந்த திட்டமானது, கொமர்ஷல் வங்கியின் சமூக பொறுப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற இது குறித்த அடையாள விழாவில், வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரியான சனத் மனதுங்க அவர்கள், மருத்துவமனை முகாமைத்துவத்தினருடன் ஒப்பந்தக் கடிதங்களை பரிமாறிக் கொண்டார். இந்த நிகழ்வானது புனரமைப்பு பணியின் அதிகாரப்பூர்வ அங்குரார்பணத்தை குறிப்பதாக அமைந்திருந்தது.இந்நிகழ்வில் மருத்துவமனை சார்பில், அதன் பணிப்பாளரான வைத்தியர்;. அஜித் மற்றும் பிரிவின் பொறுப்பாளரான சிரேஷ்ட பேராசிரியர் அத்துல களுவாராய்ச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வங்கியின் பெண்கள் மாத முன்முயற்சிகளுடன் மூலோபாய ரீதியாக இணைக்கப்பட்ட இந்த திட்டமானது, கொமர்ஷல் வங்கியானது தாய்மை சுகாதாரத்தை வலுப்படுத்தவும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தவும் கொண்டுள்ள உறுதியை வலியுறுத்துகிறது. 1879ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெண்களுக்கான டீ சொய்சா மருத்துவமனையானது, இலங்கையின் முதலாவது மகப்பேறு மருத்துவமனையும் ஆசியாவின் இரண்டாவது பழமையான மருத்துவமனையுமாகும். சார்ள்ஸ் ஹென்றி டீ.சொய்சா அவர்களின் பரோபகாரத்தின் மூலம் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனையானது நாட்டில் தாய்மை மற்றும் பெண்கள் சுகாதார முன்னேற்றத்தில் சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக முன்னோடியான பங்காற்றி வருகிறது.இன்றைக்கு, இந்த மருத்துவமனை ஆண்டுதோறும் 6,000 முதல் 8,000 வரை பிரசவங்களை பதிவு செய்கிறது மேலும் ஆண்டுக்கு சுமார் 25,000 நோயாளிகள் இம்மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.
மருத்துவமனையின் 03ஆம் பிரிவானது, வங்கியின் புனரமைப்பு முயற்சியின் முக்கிய மையமாக திகழும் நிலையில் இது மொத்த நோயாளர் சுமையில் குறிப்பிடத்தக்க பகுதியை கையாள்கிறது. இது ஆண்டுதோறும் சுமார் 2,500 முதல் 3,000 வரை பிரசவங்களையும், 4,000 முதல் 5,000 வரை நோயாளர் அனுமதிகளையும் பதிவு செய்கிறது.திட்டமிடப்பட்டுள்ள இந்த புனரமைப்பு பணிகள், நோயாளர் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் வசதிகளை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் நேரடியாக பயன்பெறுவதுடன், நாட்டின் மொத்த தாய்மை சுகாதார தரநிலைகளையும் மேம்படுத்த உதவுகிறது.
கொமர்ஷல் வங்கியின் சமூகப்பொறுப்பு அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், சமூகத்திற்கு நிலைபெறுதகுதன்மை மற்றும் தாக்கமுமுள்ள முன்முயற்சிகளை வழங்குவதற்கான வங்கியின் முக்கிய கருவியாக செயல்படுகிறது.கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்கும் தெளிவான நோக்கங்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்த அறக்கட்டளை தனது வளங்களின் பெரும்பகுதியை கல்விக்காக ஒதுக்குகிறது. அதேவேளை, பிற துறைகளிலும் பல்வகை திட்டங்களை ஆதரித்து வருகிறது.
கொமர்ஷல் வங்கியின் சமூகப்பொறுப்பு அறக்கட்டளையானது சுகாதார துறையில் 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை வழங்கி ஆதரவு அளித்துள்ளது. மேலும், அம்புலன்ஸ் ஒன்றினை பொறுப்பேற்றல் முன்முயற்சியின் மூலம் அவசர மருத்துவ சேவைகளுக்கு பங்களித்து, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீர் சேமிப்பு தீர்வுகள் போன்ற சமூக சுகாதார முயற்சிகளையும் செயல்படுத்தியுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
