Header Logo

வணிகம்
கிராமிய விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக SARP உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் SDB வங்கி கைச்சாத்திட்டுள்ளது

Mar 31, 2026 - 02:27 PM -

0

கிராமிய விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக SARP உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் SDB வங்கி கைச்சாத்திட்டுள்ளது

இலங்கையில் நிலைபேற்றியல் கொண்ட விவசாய அபிவிருத்தி மற்றும் நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைப்பதில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், Smallholder Agribusiness and Resilience Project (SARP) உடன் மூலோபாயக் கூட்டாண்மையொன்றை SDB வங்கி ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியம் (International Fund for Agricultural Development - IFAD), இலங்கை அரசாங்கம், மற்றும் ஏனைய தரப்பினரின் இணை நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படுகின்ற ஆறு ஆண்டு கால (2022-2027) செயற்திட்டமாக SARP உள்ளதுடன், சுமார் 82 மில்லியன் அமெரிக்க டொலர் உத்தேச செயற்திட்டத் தொகையையும் கொண்டது. மல்வத்து ஓயா, மீ ஓயா, மற்றும் தெதுரு ஓயா ஆகியவற்றின் ஆற்றுப்படுகைகளை அண்டியுள்ள அனுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட, காலநிலையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் வசிக்கின்ற கிராமப்புற குடும்பங்கள் மத்தியில் மீள்திறன் மற்றும் சந்தையில் பங்கேற்கும் வாய்ப்புக்களை வலுப்படுத்துவதில் இச்செயற்திட்டம் கவனம் செலுத்தியுள்ளது. 

IFAD நிதியுதவி வழிகாட்டல்களின் கீழ் இச்செயற்திட்டதத் தொகையில் 45% வரை மானியமாக வழங்கப்பட முடியும் என்பதுடன், இதன் பயனாளிகள் எஞ்சிய 55% தொகையை பங்கு வடிவில் இதற்குப் பங்களிக்க முடியும். சிறு அளவிலான விவசாய வணிகங்கள் பலவும் இத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நிதியில் ரீதியான முட்டுக்கட்டைகளுக்கு முகங்கொடுக்க நேரும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிதி இடைவெளியை நிரப்புவதற்காக தகைமை கொண்ட பயனாளிகளுக்கு சிக்கனமான கடன் வசதிகளை SDB வங்கி வழங்கும். கிராமிய தொழில் முயற்சியாளர்கள் பங்காக இடும் தமது பங்களிப்புக்களை நிறைவேற்றி, நிலைபேற்றியல் கொண்ட விவசாய வணிக முயற்சிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஒத்துழைப்பு இடமளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

வங்கியால் ஏற்படுத்தப்பட்டுள்ள தீர்வுகள் குறித்த அம்சங்கள் மற்றும் வழக்கமான கடன் ஒப்புறுதி வகையறாக்களுக்கு அமைவாக, SDB வங்கியின் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் கூட்டுறவுப் பிரிவுகளினூடாக இம்முயற்சி முன்னெடுக்கப்படும். அங்கீகரிக்கப்பட்டுள்ள செயற்திட்ட முன்மொழிவுகள் கொண்டுள்ள நிதித்தேவைப்பாட்டு இடைவெளிகளுக்கு வங்கியின் சொந்த வளங்கள் மற்றும் கிடைக்கப்பெறுகின்ற கடன் வசதிகளினூடாக நிதி வசதி அளிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட மற்றும் பொறுப்புள்ள கடன் வழங்கல் நடைமுறைகள் உறுதி செய்யப்படும். 

பத்தரமுல்லையிலுள்ள கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு. டி. பீ விக்கிரமசிங்க அவர்கள் SARP ன் சார்பிலும், நிறைவேற்றுப் பணிப்பாளரும்/தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. கபில ஆரியத்ன ஆகியோரும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். லதீஷா பீ. லியனகே, மேலதிக செயலாளர் - அபிவிருத்தி (கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு) மற்றும் SDB வங்கியின் சார்பில் திரு. மனோஜ் அக்மீமன, பிரதி தலைமை நிர்வாக அதிகாரி, திரு. சித்ரால் டி சில்வா, தலைமை வணிக அதிகாரி, மற்றும் காஞ்சனா சீ. ஹிரிமுத்துகொட, முகாமையாளர் - வழங்கல் சங்கிலி நிதி மற்றும் விவசாய தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் SARP ன் சார்பில் திரு. அனுர திசாநாயக்க, கிராமிய நிதி வழங்கல் நிபுணர் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 

திரு. ஆரியரத்ன அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து வெளியிடுகையில், “மிகவுறுதியான மற்றும் மிகத் தெளிவான விவசாய மூலோபாயத்துடன் தேசிய அபிவிருத்தியை வலுப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ள ஒரு வங்கி என்ற ரீதியில், விவசாய சமூகத்திற்கு ஆதரவளிக்கும் எமது அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதற்கு SARP உடனான கூட்டாண்மை எமக்கு உதவும். நிதி சாராத உதவிகளுடன் இணைந்து சிக்கனமான நிதித் தீர்வுகளை வழங்குவதன் மூலமாக, விவசாயத் துறையில் நிலைபேற்றியல் கொண்ட வளர்ச்சியை உறுதிசெய்யும் அதேசமயம், காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களின் மீள்திறனை மேம்படுத்துவதே எமது நோக்கம்.” 

SARP ன் கிராமிய நிதி வழங்கல் நிபுணர் அனுர திசாநாயக்க அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “விவசாயம் சார்ந்த நிதி வழங்கலில் தனித்துவமான மூலோபாயத்தைக் கொண்டுள்ள SDB வங்கி போன்ற வங்கி ஒன்றுடன் ஒத்துழைப்பது என்பது, சிறு அளவிலான விவசாய வணிகங்களுக்கு நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வலுப்படுத்த எமக்கு இடமளிப்பதுடன், இதற்குத் தகைமை கொண்ட பயனாளிகள் தமது பங்கு நிதித் தேவைகளை பூர்த்தி செய்து, வழங்கல் சங்கிலிகளில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதை உறுதி செய்கின்றது. நீண்ட கால மீள்திறனைக் கட்டியெழுப்பி, அனைவரையும் அரவணைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு இக்கூட்டாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.” 

மூலோபாய முக்கியத்துவம் மிக்க இந்த ஒத்துழைப்பினூடாக, வளர்ச்சி வாய்ப்புக்களை இன்னமும் முழுமையான பயன்படுத்திக் கொள்ளாத விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சந்தைப் பிரிவுகளுக்கான தனது சமூக நலன் சார்ந்த முயற்சிகளை SDB வங்கியானது தொடர்ந்தும் விரிவுபடுத்தி வருகின்றது. அதன் மூலமாக, கிராமிய தொழில் முயற்சியாண்மையை ஊக்குவித்தல், நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைப்பதை வலுப்படுத்தல், மற்றும் இலங்கையின் விவசாயத் துறையின் நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்திக்கு ஆற்றும் தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

SDB வங்கி குறித்த விபரங்கள்: 

ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட, வாடிக்கையாளரை மையப்படுத்திய மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ள வங்கியான SDB வங்கி, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தலுடன், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகத் திகழ்வதுடன், BB +(lka) என்ற Fitch Rating கடன் தர மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. நாடளாவியரீதியிலுள்ள 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, நாடெங்கிலுமுள்ள தனது தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வர்த்தக வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை இவ்வங்கி வழங்கி வருகின்றது. சூழல், சமூகம், மற்றும் நிர்வாக ஆட்சி (Environmental, Social, and Governance - ESG) கோட்பாடுகள் SDB வங்கியின் பண்பாடுகளில் ஆழமாக உட்பொதிந்துள்ளதுடன், நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் மூலமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வர்த்தகங்களை மேம்படுத்துவதில் மிகவுறுதியான கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையை புதிய உச்சங்களுக்கு இட்டுச்செல்லும் நோக்குடன், குறிப்பாக பெண்களுக்கு வலுவூட்டல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் நிலைபேணத்தக்க அபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து வாய்ப்பளித்தல் ஆகியவற்றில் இவ்வங்கி அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

title