Mar 31, 2026 - 02:35 PM -
0
செலிங்கோ லைஃப் நிறுவனம், SLIM Kantar மக்கள் விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து 20வது ஆண்டாக ஷஆண்டின் சிறந்த மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் (People’s Life Insurance Service Provider of the Year) என்ற விருதைப் பெற்று, இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இரண்டு தசாப்தங்களை நிறைவு செய்துள்ளது என்ற குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது.
இந்த அபூர்வமான சாதனை, விருதுகள் தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நுகர்வோர் அடிப்படையிலான முக்கிய விருதை தொடர்ந்து வென்ற ஒரே ஆயுள் காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப் திகழ்வதை உறுதிப்படுத்துகிறது. மேலும், இது இலங்கை மக்களுடன் நிறுவனத்தின் நிலைத்த நம்பிக்கை மற்றும் உறவை பிரதிபலிக்கிறது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) மற்றும் உலகப் புகழ்பெற்ற சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Kantar இணைந்து நடத்தும் மக்கள் விருதுகள், நாடு முழுவதும் நடத்தப்படும் சுயாதீன கருத்துக்கணிப்பின் முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. முழுமையாக நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இந்த விருதுகள், நாட்டின் பொதுமக்களின் உணர்வுகளை மிக நம்பகமாக பிரதிபலிக்கும் விருதுகளாக பரவலாக கருதப்படுகின்றன.
செலிங்கோ லைஃப் நிறுவனமானது 20 ஆண்டுகள் தொடர்ந்து பொதுமக்களின் ஆதரவை பெற்ற சாதனையானது, அதன் வலுவான நிதி செயல்திறன் கொண்ட இன்னொரு ஆண்டைத் தொடர வழிவகுக்கிறது. இதன் மூலம், இலங்கையின் ஆயுள் காப்புறுதி சந்தையில் தொடர்ந்து 22வது ஆண்டாக தனது முன்னணி நிலையை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 2025 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்காக, நிறுவனம் ரூ. 44.18 பில்லியன் எழுதப்பட்ட காப்புறுதி கட்டுப்பண வருவாயையும், ரூ. 72.43 பில்லியன் மொத்த வருமானத்தையும் பதிவு செய்துள்ளது. மேலும், அதன்ஆயுள் நிதி ரூ. 200 பில்லியன் என்ற முக்கிய நிலையை கடந்துள்ளது.அதேவேளை, அந்த ஆண்டில்காப்புறுதியாளர்களுக்கு ரூ. 31.07 பில்லியன் பெறுமதியான நிகரக் கோரிக்கைகள் மற்றும் நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த முக்கியமான சாதனைதொடர்பாக செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர், ஆர். ரெங்கநாதன் தெரிவிக்கையில் 20 ஆண்டுகள் தொடர்ந்து இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக தெரிவு செய்யப்படுவது மிக உயர்ந்த கௌரவமாகும். இதை நாம் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறோம். இந்த சாதனை, எமது காப்புறுதிதாரர்கள் எம்மிடம் வைத்துள்ள நிலையான நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்; அவர்களின் நம்பிக்கையேஎமது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஊக்கமாக உள்ளது. எமது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டகாப்புறுதிதரர்கள், அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள், வர்த்தக பங்குதாரர்கள் மற்றும் இந்த பயணத்தில் பங்களித்த அனைத்து பங்குதாரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: எமது வெற்றி எப்போதும் எளியதாயினும் சக்திவாய்ந்ததாகும். நம்பகமான, மதிப்புவாய்ந்த ஆயுள்காப்புறுதி தீர்வுகளின் மூலம் எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையையும் கனவுகளையும் பாதுகாக்கவும் இடர்களை குறைக்கவும் சேவையாற்றுகிறோம். இலங்கை மக்களிடமிருந்து கிடைக்கும் இந்த அங்கீகாரம், நேர்மை, பரிவு மற்றும் நீண்டகால பெறுமதியை உருவாக்கும் எமது அர்ப்பணிப்பு மேலும் வலுவடைகிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
