Mar 31, 2026 - 04:11 PM -
0
இலங்கையில் ‘JAC T9 Owners Club’ அங்குரார்ப்பண நிகழ்வான 'T9 Hunters Rally' இனை Euro Motors நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. வலிமைமிக்க இந்த பிக்கப் ரக வாகனத்தின் பெருமைமிக்க உரிமையாளர்களை ஒன்றிணைத்த இந்த நிகழ்வானது, வாகனத்தின் செயல்திறனையும் ஆச்சரியமூட்டும் சாகசத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமைந்தது. இலங்கையில் JAC T9 உரிமையாளர்களின் வேகமாக அதிகரித்து வரும் வலையமைப்பில் இந்த பேரணி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததோடு, இலங்கைச் சந்தையில் இந்த வாகனம் அடைந்துள்ள முக்கிய வெற்றியையும் வெளிப்படுத்தியது.
இலங்கையில் JAC T9 வாகனத்திற்கு கிடைத்துள்ள பாரிய வரவேற்பையும் புகழையும் தொடர்ந்து, செயல்திறன், ஆராயும் பயணம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட ஒரே சிந்தனையுடைய நபர்களை இணைப்பதற்கான ஒரு தளம் தேவை என, பல உரிமையாளர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர். அதிகரித்து வரும் இந்த ஆர்வத்திற்குப் பதிலளிக்கும் வகையில், Euro Motors நிறுவனம் T9 உரிமையாளர்களிடையே நட்புறவு, சாகச பயணம் மற்றும் அனுபவங்களை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு துடிப்புமிக்க சமூகமாக, ‘T9 Hunters Club’ இனை நிறுவியது.
இந்த முயற்சி குறித்து Euro Motors நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரவீந்திர சேனாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் JAC T9 வாகனத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. T9 Hunters Club இன் உருவாக்கமானது, எமது வாடிக்கையாளர்கள் வாகனத்துடன் மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள வலுவான பிணைப்பைப் பிரதிபலிக்கிறது. Euro Motors நிறுவனமாகிய நாம் வாகனங்களை உருவாக்குவதை விட சமூகங்கள், அனுபவங்கள் மற்றும் நீண்டகால உறவுகளை உருவாக்குவதில் எதிர்பார்ப்பை கொண்டுள்ளோம். இதேவேளை எதிர்காலத்தில் அமையவுள்ள பல அற்புதமான பயணங்களின் தொடக்கமாகவே இந்த T9 Hunters Rally அமைகிறது.” என்றார்.
கொழும்பிலுள்ள Euro Motors காட்சியறையிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணியில் பங்கேற்ற JAC T9 பிக்கப் வாகனங்களின் அணிவகுப்பானது மெரைன் டிரைவ், காலி முகத்திடல், தாமரைக் கோபுரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர சதுக்கம் உள்ளிட்ட நகரின் சில முக்கிய அடையாளச் சின்னங்களை கடந்து பயணித்து, Water’s Edge வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு பங்கேற்புடன் கூடிய பல்வேறு செயற்பாடுகள், நட்பு ரீதியான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஒரு மதியப் பொழுதை பங்கேற்பாளர்கள் அனுபவித்தனர். இது T9 உரிமையாளர்களிடையே நட்புறவை வலுப்படுத்தியது.
இதில் பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளும் வழங்கப்பட்டன. படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தைப் பாராட்டும் ‘Best Modification’ விருது மற்றும் வாகன ஓட்டும் திறன் மற்றும் துல்லியத்தை வெளிப்படுத்திய ‘Best Timing Challenge’ விருது ஆகியனவும் இதில் உள்ளடங்கும். இந்நிகழ்வு முழுவதும் வெளிப்பட்ட ஆற்றல், உற்சாகம் மற்றும் பெருமை ஆகியன இலங்கையில் T9 உரிமையாளர் சமூகத்தின் அதிகரித்து வரும் பலத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலித்தன.
எதிர்வரும் மாதங்களில், யால தேசிய பூங்காவிற்கான சாகசப் பயணம் மற்றும் பிரத்தியேக ‘4x4 off-road’ போட்டிகள் சார்ந்த அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு இலட்சியத் திட்டங்களை T9 Hunters Club கொண்டுள்ளது. வலுவான அடித்தளம் மற்றும் ஆர்வமுள்ள உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்தக் கழகம், T9 உரிமையாளர்களுக்கு தமது வாகனங்களின் முழுத் திறனையும் கண்டறியும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்கும் அதேவேளையில் சமூக உணர்வை வலுப்படுத்தும் வகையில் சீராக வளர்ச்சியடையத் தயாராக உள்ளது.
T9 Hunters Rally இன் வெற்றியானது இலங்கையின் வாகனத் துறையில் Euro Motors கொண்டுள்ள நீண்டகால பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது. சந்தையில் நம்பகமான ஒரு நாமமாகத் திகழும் Euro Motors, இலங்கை வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் புத்தாக்கமான போக்குவரத்து தீர்வுகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
JAC வர்த்தக நாமம் வலிமை, நீடித்த உழைப்பு மற்றும் பொறியியல் விசேடத்துவம் ஆகியவற்றின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலான உலகளாவிய உற்பத்தி நிபுணத்துவம் மற்றும் இலங்கையில் 22 ஆண்டுகளுக்கும் மேலான பிரசன்னத்தை கொண்டுள்ள JAC, நாட்டின் மிகவும் உறுதியான மற்றும் நம்பகமான சீன வாகன வர்த்தக நாமங்களில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதுடன், வணிக நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் வென்றுள்ளது.
இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், Euro Motors தற்போது JAC T9 வாகனத்தை ரூ. 17.95 மில்லியன் எனும் வழக்கமான விலைக்குப் பதிலாக, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ. 16.95 மில்லியன் எனும் விசேட விலையில் வழங்குகிறது. அத்துடன் வாகன கொள்வனவு அனுமதிப்பத்திரம் (Permit) வைத்திருப்பவர்களுக்கு ரூ. 14,950,000 எனும் மற்றுமொரு விசேட சலுகையும் கிடைக்கிறது. இந்தச் சலுகைகள், JAC T9 வழங்கும் வலு, திறன் மற்றும் வாழ்க்கை முறையை அனுபவிக்கவும், அதிகரித்து வரும் T9 Hunters சமூகத்தின் ஒரு அங்கமாக மாறவும் எதிர்கால கொள்வனவாளர்களுக்கு ஒரு ஒப்பற்ற வாய்ப்பை வழங்குகின்றது.
