Apr 1, 2026 - 12:51 PM -
0
இலங்கை மற்றும் மாலைதீவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நீண்ட கால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில், DIMO மற்றும் MTU நிறுவனங்கள் புதிய தலைமுறை Propulsion மற்றும் power தீர்வுகளை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் நடைபெற்ற DIMO-MTU தொழில்நுட்ப மாநாட்டின் ஊடாக அவதானம் செலுத்தியிருந்தன. கடல்சார், புகையிரதம், மின்னுற்பத்தி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இக்கூட்டாண்மையின் கீழ், தற்போது 400 இற்கும் மேற்பட்ட MTU கட்டமைப்புத் தொகுதிகள் இப்பிராந்தியம் முழுவதும் செயற்பாட்டில் உள்ளன. இதன் மூலம் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன், Data centers மற்றும் integrated engineering solutions போன்ற புதிய துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த DIMO-MTU தொழில்நுட்ப மாநாட்டில் முப்படையினர், பொலிஸார், இலங்கை புகையிரத திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் அரச, தனியார் துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். MTU பிரதிநிதிகளால் சமீபத்திய சந்தை போக்குகள் மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் முன்வைக்கப்பட்டதுடன், MTU இன் பிராந்திய அங்கீகாரம் பெற்ற சேவை முகவராக DIMO மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. DIMO நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பண்டிதகே மற்றும் MTU நிறுவனத்தின் APAC சேவைப் பிரிவின் உப தலைவர் சூன் ஹொக் யெப் ஆகியோர், பொறியியல் நிபுணத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட தீர்வுகளின் ஊடாக உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இந்நிகழ்வின் போது, IoT தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு Real-time engine monitoring, Diagnostics மற்றும் Fleet management வசதிகளை வழங்கும் MTU Go! டிஜிட்டல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. தரவு அடிப்படையிலான முடிவெடுத்தல் மற்றும் Predictive maintenance மூலம், இத்தகைய புத்தாக்கமான தீர்வுகள் வினைத்திறன், நம்பகத்தன்மை மற்றும் உபகரணங்களின் ஆயுட்காலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவில் கடல்சார் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகரித்து வரும் தேவைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, DIMO மற்றும் MTU நிறுவனங்கள் தொடர்ச்சியாக புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் இணைந்து பணியாற்றி வருகின்றன.
