Header Logo

வணிகம்
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

Apr 6, 2026 - 01:28 PM -

0

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

டேவிட் பீரிஸ் (David Pieris) குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவும், இலங்கையில் BAIC வாகனங்களின் தனித்துவமான விநியோகஸ்தருமான David Pieris Automobiles (Private) Limited (DPA) நிறுவனம், அண்மையில் தனது 1,000 வது BAIC X55 வாகனத்தை சந்தைக்கு விடுவித்துள்ளதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை கொண்டாடியது. இந்தச் சாதனையானது, உள்நாட்டில் பெறுமதி சேர்த்தல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் அதேவேளை, உயர்தர வாகனங்களை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. 

இந்த மைல்கல்லானது, உள்ளூர் சந்தையில் BAIC X55 ரக வாகனங்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பை பிரதிபலிப்பதோடு, உள்நாட்டு உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறது. 

நவீன வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் மிக்க செயல்திறனுக்காக புகழ்பெற்று விளங்கும் BAIC X55, இலங்கை வாகன பயன்பாட்டாளர்களிடையே பாரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட மாதிரியில் 1,000 வாகன விற்பனையை எட்டியிருப்பதானது, இவ்வாகனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒரு சான்றாக அமைவதுடன், வாகன ஒன்றிணைப்பு (Assembly), தர உறுதிப்பாடு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள குழுவினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் காட்டுகிறது. 

இந்த சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த DPA நிறுவனத்தின் பணிப்பாளர் மஹேஷ் குணதிலக்க, இலங்கையில் ஒரு நிலைபேறான மற்றும் மீளெழுச்சிமிக்க வாகனத் கைத்தொழில்துறையை உருவாக்குவதில், உள்நாட்டு பெறுமதி சேர்த்தல் வகித்துள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரன்ன பகுதியில் அமைந்துள்ள டேவிட் பீரிஸ் குழும உற்பத்தி வளாகமானது, உள்ளூர் வாகன ஒன்றிணைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதிலும் தொடர்ச்சியாக முக்கியப் பங்கு வகித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த முக்கிய மைல்கல், புத்தாக்கம், தரம், வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் DPA நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், சர்வதேச தரத்திலான வாகனங்களை வழங்கும் அதேவேளை, தனது உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதிலும் உள்ளூர் சந்தையில் தனது தடத்தை மேலும் வலுப்படுத்துவதிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. 

DPA இன் முதன்மை BAIC விற்பனை நிலையம் பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்லையில் அமைந்துள்ளதுடன் குருணாகல், மாத்தறை, இரத்தினபுரி, கண்டி ஆகிய இடங்களிலும் அதன் விற்பனை நிலையங்கள் உள்ளன. கொழும்பு ஹைட் பார்க் கோர்னர், மடபாத்த, மாத்தறை ஆகிய இடங்களில் பிரத்தியேகமான விற்பனைக்கு பின்னரான சேவை வசதிகள் கிடைக்கின்றன. அத்துடன் பராமரிப்பு மற்றும் சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள நாடளாவிய ரீதியில் சேவை முகவர்களின் வலையமைப்பும் காணப்படுகிறது. 

BAIC வாகனங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் 0114 700 678 எனும் இலக்கத்தின் ஊடாக DPA நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title