Apr 6, 2026 - 01:33 PM -
0
நெஷனல் டெவெலொப்மெண்ட் பேங்க் பிஎல்சி (NDB), 2025 டிசம்பர் 31-ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதி முடிவுகள் மற்றும் ஆண்டு அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, மார்ச் 17 அன்று பகுப்பாய்வாளர்களுடனான வருவாய் அழைப்பை (Analysts Earnings Call) நடத்தியது.
இந்த அமர்வு, NDB வங்கியின்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கெலும் எதிரிசிங்க தலைமையில், வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ குழுவுடன் இணைந்து Zoom மூலம் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இந்த அழைப்பின் போது, பிரதம நிறைவேற்றதிகாரி அவர்கள் FY 2025ற்கான வங்கியின் நிதி செயல்திறனை விரிவாக விளக்கி, முக்கிய மூலோபாய முன்னுரிமைகள், செயல்பாட்டு முக்கிய அம்சங்கள் மற்றும் வங்கியின் எதிர்கால திட்டங்களை எடுத்துரைத்தார். அவரின் விளக்கத்திற்குப் பின்னர், பரஸ்பர கலந்துரையாடலுடன் கூடிய கேள்வி-பதில் அமர்வு நடைபெற்றது; இதன் மூலம், பகுப்பாய்வாளர்கள் NDB வங்கியின் செயல்திறன் மற்றும் எதிர்கால நோக்கினைப் பற்றி ஆழமான புரிதலைப் பெற்றனர்.
இந்த கலந்துரையாடல் ஆனது, ஆய்வு பகுப்பாய்வாளர்கள், பங்குச் சந்தை நடுவர்கள் நிதி முகாமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களை ஈர்த்தது. இது வங்கியின் முன்னேற்றத்திலும் மூலோபாய திசையிலும் தொடர்ச்சியான ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. NDB வங்கியின் முதலீட்டாளர் உறவுகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமர்வு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் பங்குதாரர்களுடன் முன்முயற்சியுடன் ஈடுபடுவதற்கான வங்கியின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியது. 2014 ஆம் ஆண்டு முதல், NDB தொடர்ந்து தனது காலாண்டு மற்றும் ஆண்டு வருவாய் அழைப்புகளை நடத்தி வருகிறது; இது திறந்த மனப்பான்மை மற்றும் நம்பிக்கை கலாசாரத்தை வலுப்படுத்துகிறது. இந்த அழைப்பின் உரைநகல்கள் மற்றும் பதிவுகள் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்படும்; இதன் மூலம் முக்கிய தகவல்களுக்கு தொடர்ச்சியான அணுகல் உறுதி செய்யப்படுகிறது.
பிரதம நிறைவேற்றதிகாரி தனது விளக்கவுரையின்போது 2025 ஆம் ஆண்டிற்கான வங்கியின் செயல்திறனை எடுத்துக்காட்டினார். இது மைய வங்கி செயல்பாடுகளை வலுப்படுத்துதல், பிரிவுகளுக்கான தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான, நீண்டகால வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஒழுங்குமுறை மூலோபாய அணுகுமுறையால் வடிவமைக்கப்பட்டது. டிஜிட்டல் மாற்றத்தில் தொடர்ந்து செய்யப்பட்ட முதலீடுகள், பரந்த அடிப்படையிலான கடன் புத்தக வளர்ச்சி, குறிப்பாக SME கடன் பிரிவில் காணப்பட்ட முக்கிய விரிவாக்கம் (அந்த துறைக்கு வழங்கப்பட்ட ஆதரவின் பிரதிபலிப்பு), மேலும் பரிவர்த்தனை வங்கி சேவைகள் மற்றும் கட்டண அடிப்படையிலான வருவாய் வாயில்கள் மீது வலுவான கவனம் செலுத்தப்பட்டதும் முக்கிய அம்சங்களாகும். இந்த கலந்துரையாடலில், வைப்புகள் மற்றும் CASA வளர்ச்சி, மூலதனம் மற்றும் பணப்புழக்கம், மேலும் கடன் தேவையின் முன்னோக்கு மற்றும் வட்டி விகித நகர்வுகள் போன்ற முக்கிய துறைள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. கேள்வி-பதில் அமர்வின் போது, பங்கேற்பாளர்கள் வங்கியின் வளர்ச்சி இயக்கிகள் மற்றும் செயல்திறன் அம்சங்கள் குறித்து ஆழமான மற்றும் பயனுள்ள உரையாடலில் ஈடுபட்டனர்.
மெதுவாக நிலைநிறுத்தம் அடையும் பொருளாதார சூழ்நிலையிலும், NDB தனது வலுவான இடர் முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர் மைய அணுகுமுறையின் ஆதரவுடன் தன்னம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் தொடர்ந்து வெளிப்படுத்தியது. உலகளாவிய அரசியல் பதற்றங்களால் உருவாகும் இடர்கள் மற்றும் அவை இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் தாக்கங்களை முழுமையாக கருத்தில் கொண்டு, வங்கி தனது வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சந்தை நிலையை மேலும் வலுப்படுத்தி, அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையானபெறுமதியை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
பகுப்பாய்வு வருமான அழைப்பு, NDB வங்கிக்கான ஒரு முக்கிய தளமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; இது முதலீட்டாளர் சமூகத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், நீண்டகால உறவுகளை உருவாக்குவதற்கும் வங்கியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.எதிர்காலத்தை நோக்கி நகரும் போது, புதுமையான மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நிதி தீர்வுகள் மூலம் சமூகங்களை வலுப்படுத்தவும், தேசிய பொருளாதார முன்னேற்றத்தை ஆதரிக்கவும் வங்கி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இலங்கையில் பட்டியலிடப்பட்ட நான்காவது பெரிய வணிக வங்கி NDB வங்கியாகும். 2025 ஆம் ஆண்டுக்கான யூரோமணி விருதுகளுக்கான சிறப்பு விருதுகளில், SME-களுக்கான இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாக NDB பெயரிடப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய வங்கி மற்றும் நிதி இதழ் (சிங்கப்பூர்) விருதுகளால் ஆண்டின் உள்நாட்டு சில்லறை வங்கி - இலங்கை மற்றும் இலங்கை உள்நாட்டு திட்ட நிதி வங்கி விருதை வென்றது. NDBஆனது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும், இதில் மூலதன சந்தை துணை நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு தனித்துவமான வங்கி மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகின்றன. டிஜிட்டல் வங்கி தீர்வுகளால் இயக்கப்படும் அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்த வங்கி உறுதிபூண்டுள்ளது.
