Apr 6, 2026 - 01:37 PM -
0
Vector Agents தனது மேம்படுத்தப்பட்ட Digital Worker Platform ஐ அறிமுகம் செய்துள்ளது. இது அடுத்தகட்ட மாற்றமான டிஜிட்டல் ஊழியர்களின் யுகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்றாட வணிகச் செயற்பாடுகளின் மையப்பகுதிக்கு AI-வலுவூட்டப்பட்ட டிஜிட்டல் சகாக்களைக் கொண்டுவரும் நோக்கில், ஒரு புதிய வகை நிறுவன மென்பொருளாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளம் ஏற்கனவே ஆரம்பகால வாடிக்கையாளர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், இந்த அறிவிப்பு Vector Agents நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பொது அறிமுகத்தையும் அதன் நீண்டகால தொலைநோக்குப் பார்வையின் பிரகடனத்தையும் குறிக்கின்றது. அதாவது, ஒவ்வொரு துறையும் மனித நிபுணர்களுடன் இணைந்து ஆற்றல்மிக்க AI டிஜிட்டல் பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு எதிர்காலத்தை இது நோக்காகக் கொண்டுள்ளது. இது நிறுவனங்கள் இயங்கும் விதம், வளர்ச்சியை விரிவுபடுத்தும் முறை மற்றும் போட்டியிடும் திறன் ஆகியவற்றின் அடிப்படை அங்கமாக அமையும்.
Vector Agents வணிகத்தின் சூழலைப் புரிந்துகொண்டு, வேலைத்திட்டங்களை பின்பற்றி, நடைமுறையிலுள்ள கட்டமைப்புக்களுக்குள் செயற்படக்கூடிய வகையிலான பணி-சார்ந்த டிஜிட்டல் ஊழியர்களை உருவாக்குகின்றது. சாதாரண Automation tools அல்லது Chatbots போலன்றி, இவை விற்பனை, நிதி, வாடிக்கையாளர் வெற்றி மற்றும் மனிதவள மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் பல கட்டங்களைக் கொண்ட முழுமையான பணிகளைச் செய்து முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு குழுவின் அங்கமாகத் தொடர்ச்சியாகவும் நம்பகத்தன்மையுடனும் பணியாற்றுகின்றன. இவை வெறும் உதவியாளர்களாக மாத்திரம் இருக்காமல், நவீன நிறுவனங்களின் ஒரு புதிய மற்றும் நம்பகமான பணிப்படையாக செயற்பட்டு, உண்மையான வணிகப் பணிகளுக்குள் செயற்பாட்டுப் பொறுப்புகளை முன்னெடுக்கின்றன.
Vector Agents பிரதம நிறைவேற்று அதிகாரி ஜீவன் ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் சொந்த AI சகா இருக்கும் என்பதில் நாம் நம்பி்க்கை கொண்டுள்ளோம். Digital Workers, Human Outcomes எனும் வாசகமானது, நிறுவனங்கள் எவ்வாறு வளர்ச்சியடையும் என்பதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது: அதாவது, AI ஐ ஒரு பக்கவாட்டு உதவியாக மாத்திரம் கருதாமல், டிஜிட்டல் பணியாளர்களைக் குழுக்களுடனும் அடிப்படைச் செயற்பாடுகளுடனும் நேரடியாக ஒன்றிணைப்பதன் மூலம், வேலைகளை முன்னெடுக்கும் ஒரு நம்பகமான அங்கமாக இது அமையும்.” என்றார்.
Vector Agents தற்போது பிரதான துறைகளில் நான்கு வகையான பணி-சார்ந்த டிஜிட்டல் ஊழியர்களை வழங்குகின்றது. விற்பனைத் துறைக்காக Lilian, நிதித் துறைக்காக Bradley, வாடிக்கையாளர் வெற்றிக்காக Rhea மற்றும் மனிதவள மேலாண்மைக்காக (Blake) ஆகியன இதில் அடங்கும். இவை ஒவ்வொன்றும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படவும், நிறுவனத்திற்கே உரித்தான விசேட நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளவும், மனிதக் குழுக்களுடன் இணைந்து நம்பகத்தன்மையுடன் பணிகளை முன்னெடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது நிறுவனங்களின் உற்பத்தித்திறன், வெளியீடுகள் மற்றும் செயற்பாட்டுத் திறனை மென்மேலும் வலுப்படுத்துகின்றது.
Vector Agents இன் முதலாவது பகிரங்கமாக கிடைக்கக்கூடிய டிஜிட்டல் ஊழியர்களாக Lilian மற்றும் Rhea ஆகியன காணப்படுகின்றன. Lilian ஒரு AI SDR ஆகும். இது நூற்றுக்கணக்கான தரவுப் புள்ளிகள் மற்றும் நோக்க சமிக்ஞைகளைப் பயன்படுத்தி உங்கள் ICP ஐ வரையறுக்கும். அத்துடன், ஒவ்வொரு கணக்கையும் ஆராய்ந்து Prospect intelligence ஐ உருவாக்குவதுடன், மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட தேடல்களை வாரத்தின் 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கும். மறுபுறம், Rhea ஒரு Always-on Customer Success Agent ஆகும். இது உங்கள் தயாரிப்புகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொண்டு, வாடிக்கையாளர் கோரிக்கைகளை உடனுக்குடன் கையாள்வதுடன், சிக்கலான விடயங்களை முழுமையான பின்னணித் தகவல்களுடன் உரை, படம் மற்றும் குரல் வழிமூலம் 80-ற்கும் மேற்பட்ட மொழிகளில் அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்கிறது. இதன் மூலம் ஆதரவுச் செயற்பாடுகளின் ஒரு நம்பகமான முன்னணிப் பணியாளராக இது செயற்படுகின்றது.
Vector Agents, பிரதான வணிகத் துறைகளில் மனிதக் குழுக்களுடன் இணைந்து செயற்படக்கூடிய AI திறன் கொண்ட டிஜிட்டல் ஊழியர்களை உருவாக்குகின்றது.
விற்பனை மற்றும் நிதித் துறை முதல் வாடிக்கையாளர் வெற்றி மற்றும் மனிதவள மேலாண்மை வரை, Vector Agents இன் டிஜிட்டல் ஊழியர்கள் நிறுவனங்கள் தங்களது பணிகளை மிகவும் நம்பகத்தன்மையுடனும், சீரான முறையிலும் மற்றும் பாரிய அளவிலும் முன்னெடுக்க உதவுகின்றனர். இதன் மூலம் Digital Workers, Human Outcomes எனும் இலக்கை இது எட்டுகின்றது.
