Header Logo

வணிகம்
அபெர்டீன் ஹோல்டிங்ஸ் மூன்று தசாப்த கால முன்னேற்றத்திற்கு காரணமானவர்களை கௌரவித்து, தனது 30வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது

Apr 6, 2026 - 01:41 PM -

0

அபெர்டீன் ஹோல்டிங்ஸ் மூன்று தசாப்த கால முன்னேற்றத்திற்கு காரணமானவர்களை கௌரவித்து, தனது 30வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது

அபெர்டீன் ஹோல்டிங்ஸ் தலைவர் சத்தார் காசிம் 30 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள அபெர்டீன் ஹோல்டிங்ஸ் (Aberdeen Holdings) நிறுவனம் 1995 மார்ச்சில் ஸ்தாபிக்கப்பட்டு, பன்முகத்தன்மையுடன், வளர்ச்சி அடைந்த நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களாக உறுதுணையாக நின்றவர்களையும் நினைவு கூர்கிறது. தற்போது அபெர்டீன் ஹோல்டிங்ஸ் 18-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன், ஏழு துறைகளில் 1,800-க்கும் அதிகமான ஊழியர்களுடன், ஒரு பெரிய குழுமமாக உருவெடுத்துள்ளது இந்த நிறுவனமானது அளவிலும் நீண்டகால நிலைத்தன்மையிலும் பெற்றுள்ள சாதனைகள் குறிப்பிடத்தக்கவை என்றாலும், நிறுவனத்தின் உண்மையான பலமானது அதன் வளர்ச்சியில் மட்டும் தங்கியில்லாது பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களினை சார்ந்துள்ளமையே ஆகும் என்று அபெர்டீன் நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவிக்கிறது. 

அபெர்டீன் ஹோல்டிங்ஸ் நிறுவனமானது இந்த பாரம்பரியத்தை கௌரவிக்கும் நோக்கில், “Decades of Dedication” என்ற முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊழியர்களை பாராட்டும் ஒரு திட்டமாகும். 550க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சேவையை நிறைவு செய்துள்ளனர்; அவர்களில் பலர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பங்களித்து வருகின்றனர். அவர்களின் அனுபவமும் நிறுவனத்திற்குள் உருவான அறிவும் செயல்திறன் மேம்பாடு, தலைமையியல் வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் தொடர்ந்து முக்கிய பங்காற்றுகின்றன. 

இந்த முக்கிய கட்டத்தைப் பற்றி நிறுவனத்தின் தலைவர் சத்தார் காசிம் தெரிவிக்கையில்:“முப்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஏற்பட்ட வளர்ச்சி என்பது ஒரே ஒரு தருணத்தினாலோ அல்லது ஒரே ஒரு தலைவரினாலோ கிடைத்த சாதனை அல்ல. நிறுவனத்தில் நம்பிக்கை வைத்து, அதனுடன் சேர்ந்து அர்ப்பணிப்புடன் பணி புரிந்த ஊழியர்களின் தொடர்ச்சியான சேவையின் அடிப்படையில் அதுகட்டியெழுப்பப்பட்டது. ‘பல தசாப்த கால அர்ப்பணிப்பு’ என்பது, அபெர்டீன் ஹோல்டிங்ஸின் அடித்தளத்தை உருவாக்கிய அந்த நபர்களின் அர்ப்பணிப்பை பாராட்டுவதற்கான முயற்சியாகும்.” இந்தத் திட்டமானது, ஊழியர்களின் நீண்ட கால உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் வெண்கலம் முதல் வெள்ளி, தங்கம், பிளாட்டினம், ரூபி, எமரால்ட் மற்றும் வைரம் வரையிலான அடுக்குநிலை மைல்கற்கள் மூலம் ஊழியர்களைக் கௌரவிக்கிறது. இது அவர்களின் பணி அனுபவத்தையும், விசுவாசத்தையும், நீண்டகாலப் பங்களிப்பையும், நிறுவனக் கலாசாரத்தையும் வலுப்படுத்துகிறது. 

இதுகுறித்து காசிம் மேலும் தெரிவிக்கையில்:“எமது ஊழியர்களே இந்தக் குழுமத்தின் மதிப்பு , ஒழுக்கம் மற்றும் பொறுமைத்தன்மை ஆகியவற்றை தாங்கி நிற்கிறார்கள்.அபெர்டீன் தனது நான்காவது தசாப்தத்தில்காலடி எடுத்து வைக்கும் இந்த நேரத்தில், இதன் தொடர்ச்சிதான் எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கும். 

அபெர்டீன் ஹோல்டிங்ஸ் எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் நிலையில், நிலையான வெற்றி என்பது விரிவாக்கம் மற்றும் செயல்திறன் மட்டுமல்லாமல், நீடித்த உறவுகளிலும் அடிப்படையாக உள்ளது என்பதை அந்த குழுமம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அதன் ஒவ்வொரு கட்டத்திலும் ஊழியர்களே மையமாக இருப்பதை வலியுறுத்துகிறது.


MOST READ

காணொளி
மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

title