Apr 6, 2026 - 01:50 PM -
0
கொமர்ஷல் வங்கியானது இலங்கை மக்களின் தொடர்ச்சியான அன்பு, நம்பிக்கை மற்றும் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், SLIM Kantar மக்கள் விருதுகள் 2026 நிகழ்வில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஆண்டின் சிறந்த மக்களின் தனியார் வங்கிச் சேவை வர்த்தக நாமம் (‘People’s Private Banking Services Brand of the Year’) என்ற விருதைப் பெற்றுள்ளது. இதன் மூலம், வங்கியானது இலங்கையில் மிகவும் பிரபலமான தனியார் துறை வங்கியாக தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (Sri Lanka Institute of Marketing-SLIM) வழங்கும் இந்த விருதுகள், உலகளாவிய ஆய்வு நிறுவனமான முயவெயச மேற்கொண்ட சுயாதீன ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இவ்விருதுகள், நடுவர்கள் குழுவின் முடிவுகளுக்கு பதிலாக நுகர்வோரின் தெரிவை பிரதிபலிப்பதால் தனித்துவம் பெறுகின்றன. நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் விரிவான கருத்துக்கணிப்பு மற்றும் பகுப்பாய்வு செயல்முறையின் மூலம், இலங்கையர்களின் மனதில் மிக அருகில் உள்ள வர்த்தகநாமங்களையும் நபர்களையும் இவ்விருதுகள் கௌரவிக்கின்றன. இது நாட்டின் நிறுவன நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.
கொமர்ஷல் வங்கி இது தொடர்பாக தெரிவிக்கையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடையே வங்கி பெற்றிருக்கும் நிலையான நம்பிக்கையையும் நெருக்கத்தையும் பிரதிபலிக்கிறது. மேலும், அதன் வலுவான வர்த்தகநாம ஈடுபாடும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட மூலோபாயங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இந்த விருது, வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும் திறனையும், தொடர்ந்து சிறந்த சேவையையும் புதுமையான வங்கி அனுபவங்களையும் வழங்கும் வங்கியின் திறனையும் வெளிப்படுத்துகிறது.
இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியும், நாட்டில் அதிக விருதுகள் பெற்ற நிதி நிறுவனமும் ஆகிய கொமர்ஷல் வங்கி நான்கு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. மேலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (SME) கடன் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.வங்கியானது வர்த்தகநாம உருவாக்கத்தில் தொடர்ச்சியான முதலீடுகள் - பயனுள்ள கருப்பொருள் அடிப்படையிலான பிரசாரங்கள், பல மொழிகளை உள்ளடக்கிய தகவல் தொடர்பு முயற்சிகள், மற்றும் வலுவான டிஜிட்டல் இருப்பு ஆகியவற்றின் மூலம், நாடு முழுவதும் உள்ள பல்வகை வாடிக்கையாளர் பிரிவுகளுடன் அர்த்தபூர்வமான தொடர்பை உருவாக்கி வருகிறது.
கொமர்ஷல் வங்கி, தனது நிறுவன இணையதளம் மற்றும் சமூக ஊடக வலையமைப்பு துறையில் முன்னணி அளவிலான ஈடுபாட்டை பெற்று, டிஜிட்டல் தளங்களில் வலுவான ஆதிக்கத்தை தொடர்ந்து பேணியுள்ளது. இதனுடன், தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் திட்டமிட்ட அனுசரணைகள் மற்றும் நேரடி செயல்பாடுகள் மூலம் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஈடுபாட்டிற்கான இந்த முழுமையான அணுகுமுறை, இலங்கையர் நுகர்வோரின் மனதில் ஆழமாக ஒத்திசைவூட்டும் ஒரு வர்த்தக நாமமாக கொமர்ஷல் வங்கியின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
