Apr 6, 2026 - 02:34 PM -
0
அண்மையில் முடிவடைந்த 2025 ம் ஆண்டிற்காக, தனித்துவமான வழியில் தனது ஊழியர்களுக்கு அங்கீகாரமளிக்கும் சிறப்பான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ள ஹட்ச் நிறுவனம், தனது மகத்தான பயணத்தில் முக்கியமான சாதனை மைற்கல் ஒன்றினை நிலைநாட்டியுள்ளது. பல்வேறு பணிப்பிரிவுகளுக்கு இடையில் சிறப்பான ஒத்துழைப்புடன் ஒருமித்த உழைப்பிற்கு அங்கீகாரமளிப்பதற்கு நிறுவனம் முக்கியத்துவம் அளிப்பதே Pinnacle Awards விருதுகள் நிகழ்வின் மையமாக அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு பணிப்பிரிவும் தனித்தனியாக செயற்படுகின்ற மற்றும் தனிப்பட்ட அங்கீகாரம் என்ற பாரம்பரியமான வழிமுறைகளிலிருந்து விடுபட்டு தனித்துவம் வாய்ந்த அணுகுமுறையை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
நாட்டில் மிகச் சிறந்த நிகழ்வுகள் பலவற்றை ஏற்பாடு செய்வதில் பெயர் பெற்று விளங்கும், புகழ்பெற்ற மொனார்க் இம்பீரியல் நிகழ்வு மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் 2025 ம் ஆண்டில் ஹட்ச் நிறுவனத்தின் அசாதாரண வளர்ச்சிக்கு சிறப்பாக வித்திட்டுள்ளவர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தின் அனைத்துப் பணிப்பிரிவுகளையும் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தலைமைத்துவ அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
தொழிற்துறையின் தற்போதைய நிலைக்குச் சவால்விடும் வகையில், மிக வலிமைமிக்க வளர்ச்சிப் பாதையில் ஹட்ச் நிறுவனம் பயணித்துள்ளது. நிறுவனரீதியான கலாச்சாரம், புத்தாக்கத்தைத் தூண்டுதல், பணிப்பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, கூட்டுப் பெறுபேற்றுத்திறன், வலுவூட்டல், நிறுவனவாரியான மீள்திறன், மற்றும் ஊழியர்களின் ஆத்மதிருப்தி ஆகியவற்றை இந்நிறுவனம் முற்றாக மாற்றியமைத்துள்ளது. இதன் பலனாக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டிலும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவாக்க இந்நிறுவனத்தால் முடிந்துள்ளது. இச்சாதனை நிலைநாட்டிய ஒரேயொரு தொலைதொடர்பாடல்கள் சேவை நிறுவனமாக அது மாறியுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
புத்தாக்கம், செயல்முறை மேம்பாடு, செயல்படுத்தல், ஐக்கியம், வாடிக்கையாளர் மீதான நற்பலன், டிஜிட்டல் பரிணாம மாற்றம், கலாச்சார நற்பேறு, மதிப்பு உருவாக்கம், மற்றும் மிகச் சிறந்த செயற்திட்டம் என மிகவும் ஆர்வமூட்டும் வகையில் பல்வேறு விருது அங்கீகாரங்கள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன. நீண்டகால நோக்குடனான சிந்தனையை வெளிக்காண்பித்து, புதிய வாய்ப்பு வழிமுறைகளை முன்னெடுப்பதை ஊக்குவித்து, நிறுவனத்தின் வழக்கமான அடிப்படைக்கும் அப்பால் புதிய வாய்ப்புக்களுக்கு வழிவகுத்துள்ள அணிக்கு அங்கீகாரமளிக்கும் வகையில் வழங்கப்பட்ட New Horizon Award என்ற விருது இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. இதற்கான பரிந்துரையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அனைத்துப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் சமவாய்ப்பளித்து, நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, வெளிப்படையான நடுவப்பணி நடைமுறையொன்றின் மூலமாக இறுதிப்போட்டியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.
அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு அப்பால், ஹட்ச் சமூகத்தைக் கட்டியெழுப்பியுள்ள ஐக்கியம், பெருமை, மற்றும் பன்முகப்பட்ட திறமைசாலிகளின் கொண்டாட்டமாக இம்மாலைப்பொழுது மாறியது. துடிதுடிப்பான பொழுதுபோக்கு நிகழ்வுகள் இந்நிகழ்வில் அடங்கியிருந்ததுடன், தமது தொழில்ரீதியான பணிப்பொறுப்புக்களுக்கு அப்பால் தமது சொந்த படைப்பாற்றல் திறமைகளை காண்பிப்பதற்கும் அணிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. சாதனை மற்றும் கொண்டாட்டம் ஆகியன இணைந்த சூழலொன்றை இந்நிகழ்வு தோற்றுவித்தது. பணியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சாதனைப் பகிர்வுகளை பிரதிபலித்து, ஹட்ச் நிறுவனத்தின் கலாச்சாரத்தை வரையறுக்கின்ற கூட்டு வளர்ச்சியைக் கொண்டாடும் தருணமாக Pinnacle Awards விருதுகள் நிகழ்வு மாறியது.
ஹட்ச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சௌமித்ர குப்தா அவர்கள் இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஹட்ச் Pinnacle Awards நிகழ்வானது வெறுமனே அங்கீகாரம் என்பதற்கும் அப்பாற்பட்டது. எமது வெற்றிக்குப் பின்னால் அதனை முன்னெடுத்துச் செல்லும் உந்துசக்தியாக எமது பணியாளர்களே உள்ளனர் என்ற எமது நம்பிக்கையை இந்நிகழ்வு பிரதிபலிக்கின்றது. தமது வழக்கமான பணிப்பொறுப்புக்களுக்கும் அப்பாற்பட்டு மிகச் சிறப்பாக உழைத்துள்ள பணியாளர்களின் சாதனைகளை அங்கீகரித்துக் கொண்டாடுவதன் மூலமாக, மகத்துவத்திற்கு மதிப்பளிக்கப்படுகின்ற, பெறுபேற்றுத்திறன் போற்றப்படுகின்ற, மற்றும் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் உரிய அங்கீகாரமளிக்கப்படுகின்ற கலாச்சாரமொன்றை நாம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். எமது பணியாளர்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி எமக்குப் பெருமையைச் சேர்ப்பித்துள்ளனர். இந்த பெருமையுடன் நாம் ஓய்ந்து விடல் ஆகாது. இன்னும் மகத்தான வெற்றிக்கான இலட்சியம் மற்றும் வேட்கைக்கான உந்துசக்தியாக இதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.”
2025 ம் ஆண்டில் ‘Great HR Awards’ மற்றும் ‘Best Employer Brands’ ஆகிய அங்கீகாரங்களையும் ஹட்ச் நிறுவனம் சம்பாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பணியாளர்களின் மேன்மை தொடர்பில் ஹட்ச் நிறுவனம் முன்னெடுத்து வருகின்ற திருப்புமுனைமிக்க முயற்சிகள் அதன் Global Fortune 500 தாய்நிறுவனமான CK Hutchison Holdings நிறுவனத்தின் நிலைபேற்றியல் சார்ந்த இலக்குகளுடன் ஆழமாக வேரூன்றியுள்ள அதன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.
