Header Logo

வணிகம்
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை தனது புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் தன்னார்வ App ஆகியவற்றின் அறிமுகத்துடன் 21 வருட பூர்த்தியை கொண்டாடியது

Apr 6, 2026 - 02:37 PM -

0

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை தனது புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் தன்னார்வ App ஆகியவற்றின் அறிமுகத்துடன் 21 வருட பூர்த்தியை கொண்டாடியது

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு செயற்பாடுகளுக்கான அமைப்பான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, தனது 21ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் 2026 மார்ச் 28 ஆம் திகதி புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் புதிய தன்னார்வ App ஆகியவற்றை அறிமுகம் செய்திருந்தது. 

புதுப்பிக்கப்பட்ட இணையத்தளத்தை ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி கிரிஷான் பாலேந்திரா அறிமுகம் செய்திருந்தார். இந்நிகழ்வில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக குழு அங்கத்தவர்கள், சமூக பொறுப்பு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை செயற்திட்ட சம்பியன்கள், பிரிவு சமூகப் பொறுப்பு செயற்பாடுகள் ஒழுங்கிணைப்பாளர்கள், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அணியினர் மற்றும் இணைந்த நிலைய செயற்பாடுகள் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இணையத்தள அறிமுகம் தொடர்பாக கிரிஷான் பாலேந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “பயனாளிகள் மற்றும் பங்காளர்களின் குரல்களை வலுப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த வழிசெலுத்தலையும் (navigation) இலகுவாக்கும் வகையில் மீள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள இணையத்தளத்தின் அம்சங்களைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது எமது பல்வேறுபட்ட பங்குதாரர்களுடன் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை கொண்டுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது. அதேவேளை, புதிய volunteer app, துடிப்புமிக்க மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட இடைமுகத்தின் ஊடாக எமது 15,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களை சென்றடையும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், குழும ரீதியிலான தன்னார்வத் தொண்டு தரவுத் திரட்டல் மற்றும் அது தொடர்பான அறிக்கையிடலை மிக முக்கியமாக மேம்படுத்தும். இந்த இரு கண்டுபிடிப்புகளும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் 21 ஆவது ஆண்டினை அடையாளப்படுத்தும் அர்த்தமுள்ள வழிமுறைகளாக அமைவதுடன், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை எவ்வாறான மூலோபாய ரீதியான பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.” என்றார். 

2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கையின் முன்னணி சமூக பொறுப்பு செயலமைப்பான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, கடந்த 21 வருடங்களில், கூட்டாண்மை பொறுப்புச் செயற்பாடுகளில் உறுதியான செயலணியாக வளர்ச்சியடைந்துள்ளது. பல்துறைசார் வழிமுறைகளினூடாக சமூக அபிவிருத்தியில் கூட்டாண்மை நிறுவனங்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை மேற்கொள்ள முடியும் என்பதை வெளிப்படுத்தியிருந்தது. 2016 ஆம் ஆண்டு முதல் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் இணையத்தளம், “எதிர்காலத்திற்காக தேசத்திற்கு வலுவூட்டல்” எனும் ஜோன் கீல்ஸ் சமூக பொறுப்பு செயற்பாடுகளின் நோக்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பரந்தளவு செயற்பாடுகள் பற்றிய தகவல்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஒரு மூலமாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக, இணையத்தளமானது ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் முதன்மைத் தளமாகவும், அதன் பல்வேறுபட்ட பங்குதாரர்கள், வேலைவாய்ப்பு அல்லது பயிற்சிக் கால வாய்ப்புகளை தேடுவோர் மற்றும் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு தொடர்பான ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு தகவல் களஞ்சியமாகவும் பரிணமித்துள்ளது. இது சமூகப் பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றில் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை கொண்டுள்ள உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகின்றது. இந்த மீள்வடிவமைக்கப்பட்ட இணையத்தளமானது, இந்த பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் பயணம் மற்றும் சாதனைகளைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையிலான நவீன, பயனாளர்-நட்பு இடைமுகத்தையும் வழங்குகின்றது. 

தன்னார்வ App மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க ஒரு சாதனமாக, ஜோன் கீல்ஸ் IT யின் தொழில்னுட்ப ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தன்னார்வ செயற்பாட்டாளர்களை வினைத்திறனான வகையில் ஈடுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட பின்தொடர்கை, கண்காணிப்பு மற்றும் தகவல்களை பகிர்தல் போன்றன செயற்படுத்தப்பட்டு, இந்த அப்ளிகேஷனினூடாக, தன்னார்வ செயற்பாட்டாளர்களின் பங்கேற்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறன் ஆகியன உறுதி செய்யப்படுகின்றன. தற்போது பரிசோதனை மட்டத்தில் அமைந்திருப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் முழுமையாக செயற்படுத்தப்படும். 

சமூக பொறுப்பு செயற்பாடுகள் பிரிவின் தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் கோட்பாடானது, நலன்புரித் திட்டங்களை விட அதிகாரமளித்தல், மூலோபாய மற்றும் நீண்டகாலக் கவனம் மற்றும் பல்தரப்பு பங்குதாரர்களை உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது தேசிய முன்னுரிமைகள், நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தக் கொள்கைகள் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டில், குழுமத்தின் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) முன்னுரிமைகளின் கீழான சமூக அபிலாஷைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையிலும், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் தலையீடுகள் மற்றும் தாக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் எமது கவனத்திற்குரிய துறைகளை ஆறிலிருந்து நான்காக மட்டுப்படுத்தினோம். புதிய இணையத்தளம் இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது. நாம் இணையத்தள வழிசெலுத்தலை எளிமைப்படுத்தியுள்ளதுடன், மக்களை மையப்படுத்திய அணுகுமுறையையும் கையாண்டுள்ளோம். அதேவேளை, புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் தன்னார்வ செயற்பாட்டாளர்களுக்கான App ஒன்றை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது தன்னார்வலர்களை அழைப்பது முதல் அவர்களைக் கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல் வரை குழும ரீதியிலான தன்னார்வத் தொண்டு ஈடுபாடுகளை சீரமைக்கவும் டிஜிட்டல் மயமாக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், தன்னார்வலர்களுக்கான பிரத்யேக வலைப்பதிவு, குழுமத்தின் வலிமைமிக்க தன்னார்வ சக்தியைத் திரட்டுவதில் ஒரு புரட்சிகரமான படியாக அமைவதுடன், நாம் சேவையாற்றும் சமூகங்களுக்கு மேலதிக தாக்கத்தை வழங்க தொழில்நுட்பத்தை நோக்கத்துடன் இணைக்கின்றது.” என்றார். 

இணையத்தளத்தை www.johnkeellsfoundation.com எனும் வலைத்தளத்தில் பார்வையிட முடியும்.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

title