Header Logo

வணிகம்
செலான் வங்கி சிவனொளிபாத மலையின் ‘சமனலசிறி ஹரித வந்தனா’ திட்டத்துடன் கைகோர்க்கிறது

Apr 6, 2026 - 02:51 PM -

0

செலான் வங்கி சிவனொளிபாத மலையின் ‘சமனலசிறி ஹரித வந்தனா’ திட்டத்துடன் கைகோர்க்கிறது

சிவனொளிபாத மலையின் இயற்கை அழகை மீட்டெடுக்கும் நோக்கில் ‘Clean Sri Lanka’ தேசிய முயற்சியின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘சமனலசிறி ஹரித வந்தனா’ திட்டத்துடன் செலான் வங்கி அண்மையில் கைகோர்த்துள்ளது. 

சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரப் பொறுப்புகளை ஒருங்கிணைக்கும் இம் முயற்சி, நாட்டின் பாரம்பரியத்தை எதிர்கால தலைமுறைகளுக்காக பாதுகாக்கும் அன்புடன் அரவணைக்கும் வங்கியின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது. 

இந் நடவடிக்கையின் போது செலான் வங்கி, பக்தர்கள் புனித மலைக்கு ஏறப் பயன்படுத்தும் மூன்று முக்கிய யாத்திரைப் பாதைகளிலும் குவிந்திருந்த பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற உதவியது. மேலும் தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பணிகளை இலகுவாக்கும் நோக்கில் 3,000 கையுறைகளையும் வழங்கியது. 

இம் முயற்சியில் வங்கியின் பங்களிப்பு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த செலான் வங்கியின் பிரதம நிதி அதிகாரி ஷனுக ஜயரத்ன, “நாட்டின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அழகைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 

மகத்தான வரலாற்று மற்றும் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தை பாதுகாக்கும் சமனலசிறி ஹரித வந்தனா திட்டத்தின் நோக்கங்களையும் அதன் குறிக்கோள்களையும் நாங்கள் மதிக்கிறோம். இந்த முன்முயற்சியுடனான இணைவு, சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலைத்தன்மை முயற்சிகளை ஊக்குவிக்க உதவும் அதேவேளை, எமது மதப் பாரம்பரியத்தை பாதுகாக்கும் எங்கள் அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.” என்றார். 

சிவனொளிபாத மலையை பாதுகாப்பதன் சுற்றுச்சூழல் மற்றும் சமூக முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத் திட்டம், பரந்த அளவிலான தூய்மைப்படுத்தல் முயற்சியாகவும் விரிவான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் தற்போதைய கட்டத்தில் பொது நிறுவனங்கள், தனியார் துறை அமைப்புகள் மற்றும் தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 3,000 பங்கேற்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


MOST READ

காணொளி
மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

title