Header Logo

இந்தியா
நிறுத்தி வைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா வேட்புமனு!

Apr 7, 2026 - 01:32 PM -

0

நிறுத்தி வைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா வேட்புமனு!

234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23 ஆம் திகதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் 4 ஆம் திகதி நடைபெற உள்ளது. அதற்குமுன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகியது. வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்று (06) உடன் நிறைவடைந்த நிலையில், இன்று (07) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. 

தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களைத் திரும்பபெற நாளை மறுநாள் (09) கடைசி நாளாகும். 

இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. 

தேர்தல் பார்வையாளர் வரும் வரை ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து இருந்தார். 

பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டதால் ஆதவ் அர்ஜுனா மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பொது பார்வையாளர் முன்பு மனு மீண்டும் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title