Apr 8, 2026 - 04:14 PM -
0
சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) நிறுவனம், இலங்கை பட்டய தொழில்சார் முகாமையாளர்கள் (Institute of Chartered Professional Managers of Sri Lanka - CPM Sri Lanka) நிறுவனம் நடத்திய 2026ஆம் ஆண்டுக்கான சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் நிகழ்வில், நாட்டின் சிறந்த முகாமைத்துவம் கொண்ட நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்டு ஒட்டு மொத்த தங்க விருதை பெற்றதுடன் மேலும் நாங்கு முக்கியமான விருதுகளையும் பெற்றது.
மேலும், சியெட் களனி உற்பத்தித் துறை (டயர் மற்றும் இறப்பர் பிரிவில் துறை விருதிற்கான வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டது. இதற்கு மேலதிகமாக, விருது விழாவில் சிறந்த நாற்பது நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றதுடன், சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் சிறப்பு விருதையும் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, சியெட் களனி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிருவாக அதிகாரியுமான ரவி டட்லானி அவர்கள் தலைமைத்துவ சிறப்பு விருதைப் பெற்றார். இது நிறுவனத்தின் வலுவான தலைமைத்துவத்தையும், அதன் மூலோபாய நோக்கினையும் வலியுறுத்துகிறது.
இந்த விருதுகள் தொடர்பாக சியெட் களனி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிருவாக அதிகாரியுமான ரவி டட்லானி தெரிவிக்கையில்: இலங்கையில் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் நிறுவனமாகத் தெரிவு செய்யப்படுவது ஒரு அபூர்வமான பெருமை மட்டுமல்ல, சவாலான காலங்களில் பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பிற்கான பாராட்டும் ஆகும். இந்த அங்கீகாரம், நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்த தர முகாமைத்துவ நடைமுறைகளை ஊழியர்கள் அனைவரின் பங்கேற்புடன் தொடர்ந்து செயல்படுத்தியதற்கான பிரதிபலிப்பாகும்.
அவர் மேலும் தெரிவிக்கையில், QBM தத்துவம் சியெட் களனி நிறுவனத்தை வாடிக்கையாளரை மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாற்ற உதவியதுடன், வலுவான செயல்பாட்டு மற்றும் நிதி செயல்திறனையும் வழங்கியுள்ளது. மேலும், டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஊழியர் ஈடுபாட்டால் ஆதரிக்கப்படும் தொடர்ச்சியான மேம்பாடு, நிறுவனத்தின் மூலோபாயத்தின் மையமாக தொடர்ந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சியெட் களனி நிறுவனம் இந்த ஆண்டில் பெற்ற அங்கீகாரமானது, அதன் தர அடிப்படையிலான முகாமைத்துவ (QBM) தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த தத்துவம், வாடிக்கையாளர் திருப்தியை நிறுவனத்தின் செயல்பாடுகளின் மையமாக வைத்திருக்கிறது; அதேசமயம் தரம், செயல்முறைகள் மற்றும் மனிதவளத்தை நிறுவனத்தின் மொத்த வர்த்தக இலக்குகளுடன் ஒருங்கிணைக்கிறது. விருதுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய முயற்சிகளில் ஒன்றாக, வாடிக்கையாளர் முறைப்பாட்டு தீர்வு செயல்முறையை மாற்றியமைத்து, ஒரு நாளுக்குள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
பிராண்ட் ஃபினான்ஸினால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாகவும், 2025 ஆம் ஆண்டில் LMD ஆல் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாகவும் தரவரிசைப் படுத்தப்பட்ட சியெட் ஆனது, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வர்த்தகநாமமாகும், ஆண்டுதோறும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சியெட் களனியானது சந்தைத் தலைமைத்துவத்தை அடைவதற்கு தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் திறன் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் துணைபுரிகின்றன. நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் பயணிகள் கார்கள், வேன்கள், SUVகள், வர்த்தக வாகனங்கள் (பயாஸ்-பிளை மற்றும் ரேடியல்), மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாய வாகனங்களுக்கான நியூமேடிக் டயர்கள் அடங்கும்.
சியெட் களனியானது இலங்கையின் வாகன டயர் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்வதைத் தவிர, அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டு முயற்சியானது இலங்கையில் ரூ. 8.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்ததற்கு முன்பு, அடுத்த 18 மாதங்களுக்கு மேலும் ரூ. 4.5 பில்லியனை முதலீடு செய்தது, இதன் மூலம் நிறுவனமானது உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு நம்பகமான பங்காளியாகவும் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது.
