Header Logo

வணிகம்
மாற்றத்தைத் தூண்டும் செயல்பாடுகளை உருவாக்குதல்: பிரிட்டிஷ் கவுன்சில் இளைஞர் காலநிலை தூதுவர்கள், ‘The Climate Spark’ நிகழ்வில் காலநிலை மாற்றத்தை குறைக்

Apr 8, 2026 - 04:49 PM -

0

மாற்றத்தைத் தூண்டும் செயல்பாடுகளை உருவாக்குதல்: பிரிட்டிஷ் கவுன்சில் இளைஞர் காலநிலை தூதுவர்கள், ‘The Climate Spark’ நிகழ்வில் காலநிலை மாற்றத்தை குறைக்

இளம் பருவத்தினர் காலநிலை மாற்றத்திற்கு சிறந்த தூதுவர்களாக இருக்க முடியுமா? ஆமாம், இதற்கான தரவுகளை இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) சமீபத்திய திட்டங்கள் மூலம் நிரூபித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், 114 காலநிலை செயல் திட்டங்களில் 770 இளைஞர்களை இணைத்து, அவர்களின் நேரடி தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

அதன் சமீபத்திய திட்டமான பல்கலைக்கழக இளைஞர் காலநிலை தூதுவர்கள் [University Youth Climate Ambassadors- (YCA) திட்டத்தில் பங்கேற்றவர்கள், 2026 மார்ச் 19 ஆம்திகதி BMICH-இல் நடைபெற்ற ‘The Climate Spark’: மாற்றத்திற்கான கதைகளை இணைத்தல் [‘The Climate Spark: Connecting Stories for Change’] நிகழ்வில் தமது திட்டங்களை அறிமுகப்படுத்தினர். 2025 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட சமீபத்திய YCA திட்டம், ஆறு பல்கலைக்கழகங்களில் உள்ள 204 இளநிலை மாணவர்களையும் அவர்களுடைய சக மாணவர்களையும் ஈடுபடுத்தியது. அவை: ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், NSBM பசுமை பல்கலைக்கழகம் மற்றும் ருஹுணு பல்கலைக்கழகம் என்பன ஆகும். 

‘The Climate Spark’ நிகழ்வில், பிரிட்டிஷ் கவுன்சிலால் அழைக்கப்பட்ட அரசாங்க தொண்டு நிறுவனங்கள், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் பிற பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலருடன் இளைஞர் காலநிலை தூதுவர்கள் கலந்துகொண்டனர். அங்கு அவர்கள் தங்கள் திட்டச் செயல்பாட்டு கதைகளைப் பகிர்ந்து, ஆரம்ப முடிவுகளைக் காட்சிப்படுத்தி, நிகழ்ச்சியைக் கடந்தும் தங்கள் காலநிலை பயணத்தைத் தொடர தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். 

இந்த திட்டத்தின் மூலம், இளைஞர்கள் காலநிலை நடவடிக்கை, திட்ட முகாமைத்துவம், வலையமைப்பு, தலைமைத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் நடைமுறைப் பயிற்சிகளை பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பணிமனைகளுக்குப் பிறகு, 154 இளைஞர்கள் குழுக்களாக இணைந்து 2025 நவம்பர் முதல் 2026 மார்ச் வரை இலங்கையின் பல பகுதிகளில் 24 காலநிலை நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்தினர். இந்த முயற்சிகளுக்கு 38 வழிகாட்டிகள் ஆதரவளித்ததுடன், YCA திட்டத்தின் செயலாக்க பங்காளர்களான EarthLanka Youth Network மற்றும் Sevanatha Urban Resource Centre ஆகிய அமைப்புகளும் உதவின. 

இந்த திட்டங்கள், காலநிலை மாற்றத்தின் காரணங்களையும் அதன் தாக்கங்களையும் எதிர்கொள்ள, பொது மக்கள் தாங்களே அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க பல்வேறு வழிகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ருஹுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து வருகை புரிந்த இரண்டு குழுக்கள்,தமது பீட சிற்றுண்டி சாலையில் உருவாகும் உணவு கழிவுகளை முறையே உயிர் எரிவாயு (biogas) மற்றும் அதிக புரதம் கொண்ட கோழி உணவாக மாற்றினர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து மூன்று குழுக்கள், கடல் புல்வெளிகளை ஆய்வு செய்து, காலநிலை மாற்றத்தை குறைப்பதில் அவை வகிக்கும் முக்கிய பங்குக் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், சமுத்திர பல்கலைக்கழகத்தின் மற்றொரு குழு, ஈரநில பாதுகாப்பிற்கான புதியசூழலியல் முறைமை பொறியியல் மாதிரியை உருவாக்கியது. அதேபோல், சமுத்திர பல்கலைக்கழகம் மற்றும் ருஹுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இரண்டு குழுக்கள், தங்கள் பீடங்களில் கார்பன் காலடித்தடத்தை கணக்கிட்டு, அதை குறைக்க அல்லது சமநிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

கொழும்பில், ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள், காலநிலை காரணமான பேரழிவுகளில் ஈடுபடும் இளைஞர்களுக்காக உளவியல்-சமூக உணர்வுகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட முழுமையான தொண்டூழியர் கையேட்டினை வெளியிட்டனர். அதே நேரத்தில், NSBM பசுமை பல்கலைக்கழக மாணவர் குழு, காலநிலை மாற்றம் மனிதன்–யானை மோதலின் மையக் காரணமாக எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஒரு குறும்படத்தை தயாரித்தது. 

“எங்கள் இளைஞர் காலநிலை தூதுவர்கள் குறுகிய காலத்திலேயே சாதித்துள்ளவற்றால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம்,” என்று பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான வதிவிடத் தலைவர் Orlando Edwards,தெரிவித்தார். “அவர்களின் திட்டங்கள் மூலம், 1500க்கும் மேற்பட்ட சமூக உறுப்பினர்களை அவர்கள் ஈடுபடுத்தியுள்ளனர்; இந்த திட்டத்தின் எல்லைகளைத் தாண்டியும் தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையான முயற்சிகளை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனையை, எங்கள் பல்கலைக்கழக பங்காளர்களுடனும் அரசாங்க அமைப்புகள், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரும் அடங்கிய விரிவான ஆதரவுத் தளத்துடனும் இணைந்து நாம் கொண்டாடுகிறோம்.” 

‘The Climate Spark’நிகழ்வு Orlando Edwards அவர்களின் தொடக்க உரையுடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகரான Theresa O Mahony அவர்கள், ஐக்கிய இராச்சியம் காலநிலை முன்னோட்டம் குறித்த உரையை வழங்கினார். 

மேலும், நிகழ்வில் நடைபெற்ற ஊடாடும் குழு விவாதத்தில் கலாநிதி.வின்ய ஆரியரட்ண (தலைவர், சர்வோதய சிரமதான இயக்கம்), பேராசிரியர் தரங்க தொறதெனிய (கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் உயிரியல் இரசாயனம் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவு), மற்றும் சஜினி விக்ரமசிங்க (சட்டத்தரணி, ஆய்வாளர் மற்றும் காலநிலை இணைப்பாளர்) ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த குழு விவாதத்தில், இளைஞர் காலநிலை தூதுவர்கள் நேரடியாக கேள்விகளை எழுப்பினர். டிஜிட்டல் செயற்பாட்டியம், கொள்கை அமைப்பாளர்களை ஈடுபடுத்துவது, மற்றும் சமூகங்களை இயக்குவது போன்ற தலைப்புகள் இதில் விவாதிக்கப்பட்டன.

Comments
0

MOST READ

காணொளி
இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

பார்வை ஒரு தடையல்ல!

பார்வை ஒரு தடையல்ல!

title