Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
Kia, Altair Colombo இல் அமைந்த முக்கியமான காட்சியறையுடன் கொழும்பின் வானளாவிய நகரப் பரப்பில் தனது தடத்தை பதிக்கிறது

Apr 8, 2026 - 04:53 PM

Kia, Altair Colombo இல் அமைந்த முக்கியமான காட்சியறையுடன் கொழும்பின் வானளாவிய நகரப் பரப்பில் தனது தடத்தை பதிக்கிறது
Mobitel Inner 1278

முன்னணி கொரிய வாகன வர்த்தக நாமமான Kia, இலங்கையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், கொழும்பில் அமைந்துள்ள பிரபலமான Altair Colombo உயர்மாடி கட்டிடத்தில் புதிய, கவர்ச்சிகரமான காட்சியறையைத் திறந்துள்ளது. இது நாட்டில் வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்திலும் வாடிக்கையாளர் ஈடுபாட்டிலும் முக்கியமான முன்னேற்றமாகும். 

2026 ஏப்ரல் 7ஆம் திகதி ஊடகங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய காட்சியறையானது, Altair வளாகத்தின் Retail 3 பகுதியில் சுமார் 2,700 சதுர அடி பரப்பளவு கொண்ட முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 

கட்டிட வளாகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த காட்சியறையானது, அதிகபட்ச காட்சிப்படுத்தலும் எளிய அணுகலும் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Kia, கொழும்பின் முக்கியமான ஆடம்பர குடியிருப்பு மற்றும் வாழ்க்கை முறை அமைவிடங்களின் ஒன்றின் மையப்பகுதியில் தனது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது. Kia நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகநாம வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த காட்சியறையானது, நவீனமும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சூழலையும் வழங்குகிறது. இது புதுமை, தரம் மற்றும் சேவை சிறப்பில் நிறுவனத்தின் கவனத்தை பிரதிபலிக்கிறது. மேலும், இந்த இடம் வாடிக்கையாளர்கள் வர்த்தகநாமத்தின் தொடர்ந்து வளர்ந்து வரும் தயாரிப்புகளை சர்வதேச தரங்களுக்கு இணையான சூழலில் ஆராயக்கூடிய முழுமையான விற்பனை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய காட்சியறை திறப்பு தொடர்பாக மஹேன் தம்பையா தெரிவிக்கையில்,: இந்த புதிய காட்சியறையானது திறக்கப்பட்டமை கொழும்பில் Kia நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. இது வாடிக்கையாளர்களுடன் நெருக்கத்தை அதிகரிப்பதோடு, வர்த்தகநாமத்துடன் தொடர்பு கொள்ள விரும்பு வோருக்கு வசதியையும் எளிய அணுகலையும் மேம்படுத்துகிறது. மேலும், முக்கிய நகரப் பகுதிகளில் Kia நிறுவனத்தின் இருப்பை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எமது மூலோபாயத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகும். 

புதியகாட்சியறையில் முக்கிய கவனத்தை ஈர்ப்பது, Kia Tasman எனும் புதிய மொடல் ஆகும். இது வர்த்தகநாமத்தின் முதல் டபுள் கேப் பிக்கப் வாகனமாக திகழ்வதுடன் இது திறப்பு விழாவுடன் இணைந்து இலங்கையில் அறிமுகமாகியுள்ளது. Tasman மொடலின் அறிமுகம், பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளின் மாறிவரும் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது தயாரிப்பு வரிசையை பல்வேறு திசைகளில் விரிவுபடுத்தும் Kia நிறுவனத்தின் முயற்சியை வலியுறுத்துகிறது. 

Kia Tasman மொடலுடன் சேர்த்து, Altair காட்சியறைக்கு வருகை தரும் பயணிகள், Kia நிறுவனத்தின் முழுமையான வாகன வரிசையையும்கண்டுணர முடியும். இது பல்வேறு வாகன ஆர்வலர்களிடையே வர்த்தகநாமத்தின் ஈர்ப்பை மேலும் உயர்த்துகிறது. 

1996ஆம் ஆண்டிலிருந்து, Kia Motors Lanka இலங்கையின் வாகனத் துறையில் உலகத் தரமான வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தர முன்னணித் தலைமையுடன் இணைந்ததாக விளங்குகிறது. இந்நிறுவனம், வர்த்தகநாமத்தின் பிரபலமான மொடல்களான Kia Sorento, Kia Sportage, Kia Carnival, Kia Sonet, Kia Seltos, Kia Picanto மற்றும் தற்போது Kia Tasman ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், Kia நிறுவனத்தின் சமீபத்திய மின்சார வாகனங்களான Kia EV3, Kia EV5, Kia EV6 மற்றும் Kia EV9 ஆகியவையும் கிடைக்கின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278