Header Logo

வணிகம்
LankaPay/JCB அட்டைகளுக்கு 3D Secure அங்கீகாரத்தை செயல்படுத்திய முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி மாறியது

Apr 8, 2026 - 05:08 PM -

0

LankaPay/JCB அட்டைகளுக்கு 3D Secure அங்கீகாரத்தை செயல்படுத்திய முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி மாறியது

கொமர்ஷல் வங்கியானது, தனது டிஜிட்டல் கொடுப்பனவுச் செயற்பாடுகளில் தலைமை வகிப்பதை மேலும் வலுப்படுத்தும் வகையில் LankaPay/JCB தேசிய அட்டை திட்டத்தின் கீழ் e- commerce பரிவர்த்தனைகளுக்கு 3D Secure (3DS) அங்கீகாரத்தை செயல்படுத்திய இலங்கையின் முதலாவது வங்கியாக மாறியுள்ளது. இது அட்டையின் பாதுகாப்பையும் உலகளாவிய பயன்பாட்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துகிறது. 

இந்த முக்கிய சாதனையானது, LankaPay/JCB அட்டையை முழுமையாக செயல்படும் e-commerce கருவியாக மாற்றி, அட்டைதாரர்கள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வர்த்தகர்களிடம் பாதுகாப்பாக கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கிறது. வங்கியின் வலுவான 3DS ஆதரவு கொண்ட அட்டைத் தொகுப்பில் இந்த புதிய சேர்க்கையானது, தேசிய அட்டை திட்ட பயனாளர்களுக்கும் கொமர்ஷல் வங்கியின் சர்வதேச அட்டை சேவைகளில் வழங்கப்படும் அதே உயர்நிலை அங்கீகாரம் மற்றும் மோசடிக்கெதிரான பாதுகாப்பு கிடைக்க உறுதி செய்கிறது. உலகளாவிய அட்டை வர்த்தக நாமங்களுக்காக 3DS அங்கீகாரத்தை அறிமுகப்படுத்திய இலங்கையின் முதலாவது வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி திகழ்கிறது. இந்த முன்னேற்றமானது, குறைந்த சர்வதேச கட்டணங்களால் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு LankaPay/JCB அட்டையை விரும்பும் இலங்கை நுகர்வோருக்கு மிகவும் முக்கியமானதாகும். புதிய வசதி, குறைந்த செலவு, உலகளாவிய அணுகல் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தரநிலைகளை ஒருங்கிணைத்து, தேசிய அட்டை திட்டத்தை டிஜிட்டல் வர்த்தகத்தில் புதிய முக்கியத்துவ நிலைக்கு உயர்த்துகிறது. 

இந்த சாதனையைப் பற்றி கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்க, இந்த முயற்சி இலங்கையின் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமையை முன்னேற்றுவதில் ஒரு தேசிய நிதி நிறுவனமாக வங்கியின் பொறுப்பை பிரதிபலிப்பதாகக் கூறினார். கொமர்ஷல் வங்கியானது, தொழில்நுட்ப விடயங்களில் தலைமைத்துவத்தை வகிப்பதை ஒரு விருப்பமாக அல்லாது, எமது முக்கிய வர்த்தகத்தின் அங்கமாகவே பார்க்கிறோம். எமது சர்வதேச அட்டை சேவைகளில் உலகத் தரநிலைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நிலையில், அதே சமயம் இலங்கையின் தேசிய கட்டண திட்டங்களையும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம். LankaPay/JCB அட்டைக்கு 3D Secure அங்கீகாரத்தை செயல்படுத்துவது, உள்நாட்டு அட்டைதாரர்களுக்கு பாதுகாப்பான, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் உலகின் சிறந்த தரத்துக்கு இணையான கொடுப்பனவுத் தீர்வுகளை வழங்கும் முக்கியமான முன்னேற்றமாகும், என்று அவர் தெரிவித்தார். 

LankaPay நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. சன்ன டி சில்வா, இந்த அறிமுகத்தை இலங்கையின் தேசிய அட்டை திட்டத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதுவதாக கூறினார். இந்த புதிய திறன், மேம்பட்ட பாதுகாப்பையும் உலகளாவிய பயன்பாட்டையும் இணைத்து, தேசிய அட்டையின் மதிப்பை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துகிறது. கொமர்ஷல் வங்கியுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டதன் மூலம், LankaPay அட்டைதாரர்கள் இப்போது உலகின் எங்கிருந்தும் இணையதள பரிவர்த்தனைகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்துள்ளோம். இது இலங்கையின் தேசிய கொடுப்பனவு கட்டமைப்பிற்கான பெருமையான ஒரு முக்கிய சாதனையாகும், என்று அவர் கூறினார். 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

பார்வை ஒரு தடையல்ல!

பார்வை ஒரு தடையல்ல!

title