Header Logo

வணிகம்
John Keells Properties நிறுவனத்தின் VAUXHALL DSTRCT செயற்திட்டம் வெறும் இரண்டு வாரங்களில் 200 அடுக்குமனைகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது

Apr 9, 2026 - 11:03 AM -

0

John Keells Properties நிறுவனத்தின் VAUXHALL DSTRCT செயற்திட்டம் வெறும் இரண்டு வாரங்களில் 200 அடுக்குமனைகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது

John Keells Properties நிறுவனத்தின் (John Keells Properties - JKP) சமீபத்தைய குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமான Vauxhall DSTRCT ஆரம்பிக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களில் 200 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கொழும்பின் ஆதனச் சந்தையில் மிகவும் முக்கியமான ஒரு சாதனை மைற்கல்லாக இது மாறியுள்ளதுடன், மாநகரத்தில் குடியிருப்புத் துறையில் நிலவும் பலத்த கேள்விக்கான புதிய தராதரமாகவும் காணப்படுகின்றது. 

கொழும்பின் மையப்பகுதியில் உள்ள வொக்சோல் வீதியில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Vauxhall DSTRCT, உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் வலுவான கவனத்தை ஈர்த்துள்ளது. இது இலங்கையில் நகர்ப்புற குடியிருப்புச் சந்தை மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. மேலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படுகின்ற செயற்திட்டங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் சிறந்த மதிப்பு உள்ளதை எடுத்துக்காட்டும் அதேசமயம், நாட்டின் முதன்மையான ஆதன நிர்மாணிப்பு நிறுவனம் என்ற வகையில் John Keells Properties மீது சந்தையில் நிலவுகின்ற வலுவான நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றது. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு தலைமை அதிகாரியும், John Keells Holdings PLC நிறுவனத்தின் இணைத் தலைவருமான நதீம் ஷம்ஸ் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “நாம் நிர்மாணித்து வருகின்ற Vauxhall DSTRCT செயற்திட்டத்திற்குக் கிடைத்துள்ள பலத்த வரவேற்பு, வாழ்வில் சௌகரியத்தையும், வலுவான முதலீட்டு வாய்ப்புக்களையும் வழங்குகின்ற வகையில் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வடிவமைக்கப்படுகின்ற நிர்மாணச் செயற்திட்டங்களை நோக்கி கொள்வனவாளர்களின் கவனம் திரும்பியுள்ளதை தெளிவாகக் காண்பிக்கின்றது. 

சந்தையில் எமது செயற்திட்டங்களின் தரம், விலை, மற்றும் ஒட்டுமொத்த சிறப்பிற்கு வலுவான சான்றாக இந்த உத்வேகம் காணப்படுகின்றது.” கொழும்பில் மிகச் சிறந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இடத்தில், 1.5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இச்செயற்திட்டம், 749 அடுக்குமனைகளுடன், வானளவில் எழுந்து நிற்கும் 60 மாடிகளைக் கொண்டுள்ளது. இதில் 1, 2, 3, மற்றும் 4 படுக்கை அறைகளைக் கொண்ட அடுக்குமனைகள் அடங்கியுள்ளன. கொழும்பின் மையத்தில் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Vauxhall DSTRCT நிர்மாணச் செயற்திட்டம், இலகுவான போக்குவரத்து, திறன்மிக்க வாழ்வியல் ஏற்பாடு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. 

மாநகரத்தில் ஏற்கனவே பல்வேறு நிர்மாணச் செயற்திட்டங்களை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ள John Keells Properties, திறன்மிக்க வடிவமைப்பு, சௌகரியமான அமைவிடங்கள், மற்றும் திறன் தொழில்நுட்பத்திற்கு இடமளிக்கும் வாழ்வு ஆகியவற்றுடன் இத்துறையில் புத்தாக்கத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. டிஜிட்டல் தீர்வுகளின் இடைவிடாத ஒருங்கிணைப்பின் நன்மைகளையும் Vauxhall DSTRCT செயற்திட்டத்தின் குடியிருப்பாளர்கள் பெற்றுப் பயனடைய முடியும். இதுவரை 200 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகள் விற்பனையாகியுள்ள நிலையில், கொழும்பில் பலத்த கேள்விமிக்க புதிய குடியிருப்புச் செயற்திட்டங்களில் ஒன்று என்ற உத்வேகத்துடன் Vauxhall DSTRCT தொடர்ந்தும் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. கேந்திர முக்கியத்துவம் அமைவிடங்கள் மற்றும் நீண்ட கால மதிப்பு ஆகியவற்றின் வலுவான இணைப்பைக் கொண்ட செயற்திட்டங்களை வழங்குவதில் John Keells Properties நிறுவனத்தின் கடந்தகால வரலாற்றையும் இது வலுவாக நிரூபிக்கின்றது. 

Vauxhall DSTRCT இருக்கும் போது வேறு தெரிவு நமக்கு எதற்கு? 

கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக கொழும்பின் வான்பரப்பில் தலைநிமிர்ந்து நிற்கும் பல நிர்மாணச் செயற்திட்டங்களைப் பூர்த்தி செய்துள்ள John Keells Properties நிறுவனம் பாரிய திருப்புமுனையொன்றை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. Crescat City ல் அமைந்துள்ள Emperor மற்றும் Monarch, OnThree20, 7th Sense, TRI-ZEN, City of Dreams Sri Lanka–Cinnamon Life, Viman உள்ளிட்ட நாட்டில் உள்ள புகழ்பூத்த நிர்மாணச் செயற்திட்டங்கள் பலவற்றையும், பிரத்தியேகமான ஆதனச் செயற்திட்டமான கண்டியிலுள்ள Victoria Golf Resort செயற்திட்டத்தையும் நிர்மாணித்து இலங்கையின் நவீன குடியிருப்புத்துறையை வளர்ச்சி காணச் செய்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேற்குறிப்பிட்ட நிர்மாணச் செயற்திட்டங்கள் மூலமாக, வடிவமைப்பு, வாழ்வியல் சௌகரியத்திற்கான ஒருங்கிணைப்பு, மற்றும் சமகாலத்து நகர்ப்புற வாழ்க்கைமுறை ஆகியவற்றின் புதிய தராதரங்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி, இலங்கையில் உயர்மட்ட குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டங்களின் தராதரத்தை நிலைநாட்டி வருகின்றது. 

Vauxhall DSTRCT தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, www.johnkeellsproperties.com என்ற இணையத்தளத்தை நாடுங்கள் அல்லது +94 711 638 638 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக John Keells Properties நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Comments
0

MOST READ

காணொளி
அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

title