Header Logo

வணிகம்
BYD மற்றும் DENZA வாகனங்களுக்கு ஸ்மார்ட் சார்ஜிங் முறையை ஊக்குவிக்கும் JKCG Auto

Apr 10, 2026 - 11:46 AM -

0

BYD மற்றும் DENZA வாகனங்களுக்கு ஸ்மார்ட் சார்ஜிங் முறையை ஊக்குவிக்கும் JKCG Auto

இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான DENZA ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), மின்சாரப் பயன்பாடு தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய வழிகாட்டல்களுக்கு அமைய, ஸ்மார்ட் சார்ஜிங் (Smart Charging) முறைகளைக் கடைப்பிடிக்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் மின்சாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனாகவும் கையாள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஊக்கப்படுத்துதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இலங்கையில் புதிய சக்தி வாகனங்களுக்கான (NEVs) கேள்வி தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், பெரும்பாலானோர் மாற்றுப் போக்குவரத்துத் தீர்வுகளை நாடத் தொடங்கியுள்ளனர். அதேவேளை, மின்சாரத் தடைகள் குறித்து நாடு கொண்டுள்ள கடந்தகால அனுபவங்கள், இந்த மாற்றக் கட்டத்தை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. 

அண்மையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வும் இத்தேவையை மேலும் உறுதிப்படுத்துகின்றது. எனவே, புதிய சக்தி வாகனங்களின் அதிகரித்துவரும் பயன்பாடானது, பொறுப்பான மின்சாரப் பயன்பாடு மற்றும் போதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் இணைந்ததாக இருப்பதை உறுதி செய்வது மிக அவசியமாகும். 

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் செலவிடும் தொகையுடன் ஒப்பிடுகையில், மின்சார வாகனத்தை சார்ஜிங் செய்வதற்கான செலவு மிகக் குறைவானது என்பதுடன், பராமரிப்புத் தேவைகளும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால், வாகன உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பெருமளவு பணத்தைச் சேமிக்க முடியும். இலங்கை தற்போதைய எரிசக்தி சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அனைத்து BYD மற்றும் DENZA வாகனங்களிலும் உள்ள ஸ்மார்ட் சார்ஜிங் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு JKCG Auto தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறது. இது வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பை அதிகப்படுத்திக்கொள்ள உதவுவதுடன், நாட்டின் மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கும் வலுச்சேர்க்கும். 

JKCG Auto வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 7kW மற்றும் 2.5kW கொள்ளளவு கொண்ட வீட்டிலேயே மின்னேற்றக்கூடிய (At-home chargers) சாதனங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றிலுள்ள ஸ்மார்ட் செட்யூலிங் (Smart scheduling) எனப்படும் புத்திசாலித்தனமான நேரக்கட்டுப்பாட்டு வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் மின்சாரத் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தமக்கு உகந்த நேரங்களில் வாகனங்களை சார்ஜிங் செய்து கொள்ள முடியும். இது மின் பயன்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதுடன், மேலதிக செலவு சேமிப்பையும் வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தருகின்றது. 

இது குறித்து JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “தங்களது BYD மற்றும் DENZA வாகனங்களில் உள்ள ஸ்மார்ட் அல்லது திட்டமிடப்பட்ட சார்ஜிங் (Scheduled charging) போன்ற புத்திசாலித்தனமான தொழில்நுட்ப வசதிகளை எமது வாடிக்கையாளர்கள் முழுமையாகப் பயன்படுத்துமாறு நாம் ஊக்குவிக்கின்றோம். இந்த வசதியின் மூலம், வாகனங்களை மின்சாரத்துடன் இணைத்தவுடன் சார்ஜிங் செய்யத் தொடங்காமல், தமக்குத் தேவையான அல்லது மின்சாரத் தேவை குறைவாக உள்ள ஒரு குறிப்பிட்ட நேரத்தை முன்கூட்டியே நிரல் (Program) செய்து சார்ஜிங் செய்து கொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார். 

“இதன் பொருள் என்னவென்றால், ஒரு வாகனம் இரவு முழுவதும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அது மின் தேவை குறைவாக உள்ள நேரங்களில் (Off-peak hours) மாத்திரமே மின்சாரத்தைப் பயன்படுத்தும். இது மின்சாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன், வாடிக்கையாளர்கள் குறைந்த மின்சாரக் கட்டணத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் நன்மையடையவும் வழிவகுக்கிறது. மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இவ்வேளையில், இத்தகைய சிறிய ஆனால் முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் ரூப்டொப் சோலார் (Rooftop solar) போன்ற தீர்வுகள் இலங்கையின் வலுசக்தி துறையின் உறுதித்தன்மையை வலுப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.” என்று அவர் தெரிவித்தார். 

இந்த ஸ்மார்ட் சார்ஜிங் நடைமுறைகளானது, மின்சாரத் தேவை குறைவாக இருக்கும் காலப்பகுதிகளுடன் வாகன சார்ஜிங்கை ஒருங்கமைக்க உதவுகின்றது. அதேவேளை, வீடுகளில் சூரிய சக்திக் கட்டமைப்புகளைக் (Solar panels) கொண்டுள்ளவர்கள், சூரிய சக்தி தாராளமாகக் கிடைக்கும் நேரங்களில் தமது வாகனங்களை சார்ஜிங் செய்வதன் மூலம் அதன் பலனை உச்சகட்டமாகப் பெற்றுக்கொள்ள முடியும். 

இதன்படி, மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் மாலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணி வரையிலான காலப்பகுதியில் வாகனங்களை சார்ஜிங் செய்வதைத் தவிர்க்குமாறு பயனாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அதற்குப் பதிலாக, மின்சாரத் தேவை குறைவாக இருக்கும் இரவு 10:30 மணி முதல் அதிகாலை 5:30 மணி வரையிலான காலப்பகுதியை சார்ஜிங் செய்வதற்குப் பயன்படுத்துமாறு அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அதேவேளை, வீடுகள் அல்லது அலுவலகங்களில் சூரிய சக்திக் கட்டமைப்புகளைக் (Solar systems) கொண்டுள்ளவர்கள், காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலான சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் காலப்பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமது வாகனங்களை சார்ஜிங் செய்வதை திட்டமிட முடியும். 

நாட்டில் புதிய சக்தி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இலங்கையின் மின்சாரத் தேவைகளும் மாற்றமடைந்து வருகின்றன. இந்தச் சூழலில், நாட்டின் சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, அலுவலகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களிலும்கூட வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கான வசதிகள் தாராளமாகக் கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகும். அதேவேளை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்வதும் நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிக முக்கியமானதாக அமையும். சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதிகளின் தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் விழிப்புணர்வு முயற்சிகள் ஆகியவற்றின் ஊடாக, இந்த மாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை JKCG Auto மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய சக்தி வாகனங்களை நோக்கிய இந்த மாற்றம் நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும், எவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாகவும் அமைவதை உறுதிப்படுத்துவதோடு, இலங்கையின் மாறிவரும் வலுசக்தி தேவைகளுடன் இம்மாற்றம் ஒத்துப்போவதையும் இது உறுதி செய்யும்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title