Header Logo

வணிகம்
LankaPay தொழில்நுட்ப புத்தாக்க விருதுகள் 2026 நிகழ்வில் டிஜிட்டல் வங்கிச் சேவையில் உயரிய விருதுகளைப் பெற்று கொமர்ஷல் வங்கி சாதனை படைத்தது

Apr 10, 2026 - 05:37 PM -

0

LankaPay தொழில்நுட்ப புத்தாக்க விருதுகள் 2026 நிகழ்வில் டிஜிட்டல் வங்கிச் சேவையில் உயரிய விருதுகளைப் பெற்று கொமர்ஷல் வங்கி சாதனை படைத்தது

கொமர்ஷல் வங்கியானது டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் நிதி தொழில்நுட்ப புத்தாக்கங்களில் தனது முன்னணித் தலைமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. LankaPay தொழில்நுட்ப புத்தாக்க விருதுகள் 2026 (LankaPay Technnovation Awards 2026) நிகழ்வில் நான்கு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு திறன்காண் விருது ஆகியவை உள்ளடங்கலாக மொத்தம் ஆறு விருதுகளை வென்றுள்ளது. 

இந்த ஆண்டின் விருதுகளில், வங்கியின் சிறப்பான சாதனையாக டிஜிட்டல் கொடுப்பனவுகளில் சிறந்து விளங்கியமை (வங்கிகள்) என்ற பிரிவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மிக விரும்பப்படும் ஒட்டு மொத்த தங்க விருதை பெற்றுள்ளது. இது LankaPay (Pvt) Ltd. எனப்படும் இலங்கையின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பால் வழங்கப்படும், டிஜிட்டல் கொடுப்பனவு செயலாக்கத்தில் மிகச் சிறந்த நிதி நிறுவனத்திற்கு அளிக்கப்படும் உயர்ந்த அங்கீகாரம் ஆகும். 

மேலும், இந்த உயரிய விருதுக்கு மேலதிகமாக கொமர்ஷல் வங்கி சிறந்த டிஜிட்டல் கொடுப்பனவு மூலோபாயத்திற்கான ஆண்டின் நிதி நிறுவனம் என்ற விருதையும் பெற்றுள்ளது. மேலும் ஆண்டின் மிகப் புதுமையான நிதி நிறுவனம் என்ற பிரிவில் தொடர்ந்து நான்காவது முறையாகவும் மற்றும் வாடிக்கையாளர் வசதியில் சிறந்த நிறுவனம் (வங்கிகள்) வகை A பிரிவிலும் தங்க விருதுகளை பெற்றுள்ளது. 

அதேபோல், ஆண்டின் சிறந்த LankaPay அட்டை செயற்படுத்துநர் பிரிவில் வெள்ளி விருதையும், நிதி உட்சேர்க்கையில் சிறந்த நிறுவனம் (வங்கிகள்) வகை A பிரிவில் திறன்காண் (Merit) விருதையும் வங்கி பெற்றுள்ளது. 

இந்த சமீபத்திய விருதுகளைப் பற்றி கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க தெரிவிக்கையில்: எமது உயர்வான டிஜிட்டல் மாற்றத் திட்டம் இப்போது வேகமெடுத்து முன்னேறுகிறது. இது அதன் தொடக்கம் மட்டுமே. முதன்மை விருதைத் தாண்டியும், வகை A-இல் முக்கியமான தங்க விருதுகளைப் பெற்றதில் நாம் பெருமை கொள்கிறோம். இந்த வரலாற்றுச் சாதனையானது எமது திறமையான ஊழியர் குழுவினருக்கும் நம்பிக்கையுடன் தொடர்ந்து ஆதரவு வழங்கும் வாடிக்கையாளர்களுக்கும் சொந்தமானது அவர்களின் இடையறாத ஆதரவுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். 

2026 ஆம் ஆண்டின் விருதுகளில் கொமர்ஷல் வங்கிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், நாட்டின் டிஜிட்டல் வங்கி துறையை மறுபரிமாணப்படுத்த உதவிய முக்கியமான புதுமைகள் மற்றும் பல முதல் முயற்சிகள் நிறைந்த ஒரு ஆண்டை பிரதிபலிக்கிறது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title