May 5, 2026 - 11:36 AM -
0
மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் 77 கிராம் ஐஸ் போதைப்பொருள், 60 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 508,100.00 ரூபா பணம் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
