May 5, 2026 - 03:46 PM -
0
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, வெலிசர அதிவிசேட பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளரான ‘தெமட்டகொட சமிந்த’என்ற சமிந்த ரவி ஜயநாத் என்பவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
