Header Logo

செய்திகள்
கணக்காய்வு ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் இரகசியம் பேணுவதற்கான சத்தியம்

May 5, 2026 - 06:01 PM -

0

கணக்காய்வு ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் இரகசியம் பேணுவதற்கான சத்தியம்

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் நால்வரும் நேற்று (04) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர். 

முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி காமினி விஜேசிங்க, முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர் தலைமையதிபதி ஜீ.தேவஞானன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்க சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ரத்ன தேசப்பிரிய ஆகியோர் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இவ்வாறு இரகசியத் தன்மையைப் பேணுவதற்கான சத்தியத்தியம் செய்துகொண்டனர். 

2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய அல்லது பாராளுமன்றம் உத்தரவிடும் சந்தர்ப்பத்தில் அல்லது 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் (09) (அ) ஆம் பிரிவு ஆகிய எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலே தவிர, கணக்காய்வு தொடர்பான தகவல்களை அரசாங்க அல்லது தனியார் துறையில் உள்ள எந்தவொரு நபருக்கும், எந்தவொரு முறையிலும் வெளிப்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை அல்லது வெளிப்படுத்தல்களை மேற்கொள்ள மாட்டோம் என இரகசிய தன்மையைப் பேணுவதற்கான சத்தியம் செய்யப்பட்டது. 

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும், கணக்காய்வு தலைமையதிபதியுமான சமுதிகா ஜயரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இதன்போது இணைந்துகொண்டனர்.

Comments
0

MOST READ

காணொளி
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

யாழில் தவெக வெற்றி கொண்டாட்டம்!

யாழில் தவெக வெற்றி கொண்டாட்டம்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 07 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 07 ஆம் நாள் அகழ்வுகள்!

மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி