Header Logo

இந்தியா
நாளை முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்!

May 6, 2026 - 12:20 PM -

0

நாளை முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்!

தமிழகத்தின் முதலமைச்சராக நாளை (07) தவெக தலைவர் விஜய் பதவி ஏற்கிறார். 

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒரு கட்சியின் வெற்றிக்கான கதாநாயகனாக எப்போதுமே அக்கட்சி வெளியிடும் தேர்தல் அறிக்கைதான் இருக்கும். அந்த வகையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த தேர்தல் அறிக்கையும் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும், அந்த தேர்தல் அறிக்கையில் எந்த அறிவிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவருடைய முதல் கையெழுத்து இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்நிலையில், முதலமைச்சராக விஜய் ஆட்சி பொறுப்பேற்றதும் 2 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பெண்கள் குறிப்பிட்ட பேருந்திற்காக காத்திருக்கும் நிலை மாறும். 

ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது. தற்போது வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title