Header Logo

செய்திகள்
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜீவன்!

May 6, 2026 - 04:38 PM -

0

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜீவன்!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இன்று (06) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர், இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

இதன்போது, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தும் சில விடயங்கள் குறித்தும் விஜய்யின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்தார். 

அதன்படி, கச்சத்தீவை மீட்பதை காட்டிலும் பல்வேறு விடயங்கள் குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என கோருகிறோம். 

அதேநேரம் நீண்டகாலமாக இரண்டு நாடுகளிலும் உள்ள தமிழ் மீனவர்களுக்கு இடையிலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளதால், அதனை சமூகமாக தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் விஜய் இலங்கை வருவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை போலவே விஜய்யும் தமிழ் நாட்டில் புதிய ஆட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர். 

இருப்பினும் விஜய் நடித்து விட்டு அரசியலுக்கு வந்துள்ளார், தற்போதைய ஆட்சியாளர்கள் அரசியலுக்கு வந்து நடிக்கின்றனர் எனவும் ஜீவன் தொண்டமான் கூறினார்.

Comments
0

MOST READ

காணொளி
மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!