Header Logo
SLIC
வணிகம்
கொழும்பு 03 இல் புதிதாக திறக்கப்பட்ட The BLAC இயற்கை, சுவை மற்றும் படைப்பாற்றல் ஒன்றாக சந்திக்கின்றன

May 20, 2026 - 11:11 AM

கொழும்பு 03 இல் புதிதாக திறக்கப்பட்ட The BLAC இயற்கை, சுவை மற்றும் படைப்பாற்றல் ஒன்றாக சந்திக்கின்றன
Mobitel Inner 1278
EDEX Inner

இயற்கை சார்ந்த சிற்றுண்டிச்சாலை கருத்தாக்கத்தின் இருப்பிடமாக திகழும் The BLAC, தற்போது கொழும்பு 3 இல் தனது இரண்டாவது கிளையை திறந்து வைத்து கொண்டாடுகிறது. கொழும்பின் மிகப் புகழ்பெற்ற மற்றும் சுறுசுறுப்பான பகுதிகளில் ஒன்றின் மையத்தில் அமைந்துள்ள இந்த புதிய இடமானது, நகரின் வளர்ந்து வரும் படைப்பாற்றல் சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மனஅழுத்தத்தை குறைத்து, படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவும் இயற்கையை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் சக்தியையும் இது உணர்த்துவதாக உள்ளது. 

பசுமையான தாவரங்களின் நிழலில், வெளியில் அமர்ந்து உண்ணும் ஒரு நிதானமான ஞாயிறு காலை உணவு ஆக இருந்தாலும், முழுமையாக வசதிகளுடன் கூடிய பணிப்பாளர் சபை குழு கூட்டமாக இருந்தாலும், வாழ்க்கை முறை நிகழ்வொன்றினை படமாக்க ஒரு நுட்பமான இடமாக இருந்தாலும், உடை அலங்காரப் புகைப்படம் எடுத்தலுக்குரிய கவர்ச்சிகரமான பின்னணியாக இருந்தாலும், நேர்த்தியான உட்புற அமைப்பில் ஒரு சிறப்பு காதல் இரவாக இருந்தாலும் அல்லது ஒரு தனிப்பட்ட ஓய்வறையில் நடைபெறும் நெருக்கமான குடும்பக் கொண்டாட்டமாக இருந்தாலும் — The BLAC எல்லோருக்கும் ஏற்ற இடமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய The BLAC இன் தரமான உணவு அனுபவத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. வாரத்தின் ஏழு நாட்களிலும் காபி, காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவற்றை வழங்கும் விரிவான உணவு மெனுவை கொண்டுள்ளது. இதில் முக்கியமான உணவுகளாக யாழ்ப்பாணகறி கொத்து மற்றும் Chu Chee இறால் இடம்பெறுகின்றன. மேலும், பானங்களில் கண்டிப்பாக சுவைக்க வேண்டியவையாக கரமல், மக்கியாத்தோ மற்றும் சொக்கிலேட் ஷேக் ஆகியவைஅடங்குகின்றன. 

“எமது கொழும்பு 03 கிளை திறப்பின் மூலம், எமது தனித்துவமான சிறப்பு காபி மற்றும் சுவையான உணவுகளை மேலும் பரந்த வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய முடிவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று The BLAC நிறுவனத்தின் ஸ்தாபகர் கவுஷல் மெண்டிஸ் தெரிவித்தார். “இங்கு, உணவு அனுபவத்தை மேலும் உயர்த்துவதோடு, வாடிக்கையாளர்கள் தமது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தக்கூடிய பல்நோக்கு வாழ்க்கை முறை இடத்தையும் வழங்குவதே எமது நோக்கமாகும்.” 

ஒவ்வொரு மூலையும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கிளையானது, எளிமையான ஆனால் கவர்ச்சிகரமான உள் உணவகப் பகுதியையும், பசுமை நிறைந்த வெளிப்புற அமர்வு இடங்களையும் கொண்டுள்ளது. திறந்த வெளி தோட்டச் சிற்றுண்டிச்சாலை, நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகிய அமைதியான இயற்கை சூழலை வழங்குகிறது. அதேபோல், மேல்தளத்தில் கண்ணாடி அமைப்புடன் காணப்படும் கண்ணாடிக் குடில், பகலில் இயற்கை ஒளியால் ஒளிர்ந்து, இரவில் நட்சத்திர ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான சூழலை உருவாக்குகிறது. 

இந்த இடம் முழுமையாக உபகரணங்களுடன் கூடிய பணிப்பாளர் குழு அறையை வழங்குகிறது, இது வர்த்தகக் கூட்டங்கள், பயிற்சிப்பட்டறைகள், விளக்கக்காட்சிகள் போன்றவற்றிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நெருக்கமான கொண்டாட்டங்கள் மற்றும் உணவு அனுபவங்களுக்கு தனிப்பட்ட இடமாக பயன்படும் தனியறையும் உள்ளது. மேலும், புகைப்படம், வீடியோ பதிவு மற்றும் வர்த்தகநாம உள்ளடக்க தயாரிப்பிற்கு சிறந்ததாக இருக்கும் படப்பிடிப்பிற்கு தயாரான சூழலை வழங்கும் உள்ளடக்கப் பரப்பும் இதில் அடங்கியுள்ளது. 

பகத்தல வீதியில் அமைந்துள்ள தனது புதிய கிளையின் மூலம், The BLAC பாரம்பரியசிற்றுண்டிச்சாலை கலாசாரத்திலிருந்து விலகி, அனைவருக்கும் ஏற்ற, நுட்பமானதோடு எளிதில் அணுகக்கூடிய மற்றும் மாற்றத்திற்குத் தகுந்த சூழலை உருவாக்க முயல்கிறது. ஒரே அழகான, இயற்கையை மையமாகக் கொண்ட இடத்தில், வசதி, தொடர்பு மற்றும் படைப்பாற்றல் சுதந்திரத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278