Header Logo
SLIC
வணிகம்
NCE 2025 நிகழ்வில் தங்க விருதை வென்றுள்ள சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி, ஏற்றுமதி மேன்மைக்கான கௌரவத்தைச் சம்பாதித்துள்ளது

May 20, 2026 - 12:19 PM

NCE 2025 நிகழ்வில் தங்க விருதை வென்றுள்ள சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி, ஏற்றுமதி மேன்மைக்கான கௌரவத்தைச் சம்பாதித்துள்ளது
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ள சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி (Ceylon Cold Stores PLC - CCS), மதிப்புமிக்க NCE ஏற்றுமதி விருதுகள் 2025 நிகழ்வில் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்புகள் துறையில் பெரிய நிறுவனங்கள் பிரிவின் கீழ் தங்க விருதை தனதாக்கியுள்ளது. 2026 பெப்ரவரி 13 அன்று இடம்பெற்ற விருதுகள் வழங்கும் வைபவத்தில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதுடன், 2024/25 நிதியாண்டில் நிறுவனத்தின் மிகச் சிறந்த ஏற்றுமதிப் பெறுபேறுகள் மற்றும் இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை வலுப்படுத்துவதில் அதன் தொடர்ச்சியான பங்களிப்பு ஆகியவற்றுக்காக இந்த அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனங்களில் ஒன்றான சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி, இலங்கையில் உணவு மற்றும் பான வகைத் தொழிற்துறையில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், இலங்கையின் உணவு மற்றும் பானத் துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது. அதன் புகழ்பூத்த வர்த்தகநாமமான எலிபன்ட் ஹவுஸ் சர்வதேச அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. தற்போது மாலைதீவு, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் அடங்கலாக, 16 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருவதுடன், Reliance Consumer Products நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒரு மூலோபாயக் கூட்டாண்மையினூடாக இந்தியாவிலும் தனது அடிச்சுவட்டை வலுப்படுத்தி வருகின்றது. சர்வதேச வளர்ச்சியை நிறுவனம் சிறப்பாக தக்க வைத்துள்ளது. தயாரிப்பு புத்தாக்கம், கடுமையான தர நிர்ணயங்கள், மற்றும் விரிவடைந்து வரும் சர்வதேச விநியோக வலையமைப்புகளில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதைப் பிரதிபலிக்கிறது. 

சர்வதேசரீதியாக போட்டியிடும் திறன் கொண்டதாக இலங்கையின் வர்த்தகநாமங்களைக் கட்டியெழுப்பி, சர்வதேச சந்தைகளுக்கு தொடர்ச்சியாக மதிப்பை வழங்குவதில் சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சியின் நீண்ட கால அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் தெரிவித்தார். 

முக்கியமான பிராந்தியங்களில் சந்தை அடைவுமட்டத்தை விரிவுபடுத்தி, ஏற்றுமதி ஆற்றல்களை மேம்படுத்துவதில் எமது அணிகள் மேற்கொண்ட அயராத உழைப்பின் பிரதிபலிப்பே இவ்விருது”, என்று பதப்படுத்தப்பட்ட உணவுகள் துறைக்கான தலைவரும், ஏற்றுமதிகளுக்கான GMC தலைமை அதிகாரியுமான சதீஷ் ரத்நாயக்க அவர்கள் வலியுறுத்தினார். வெளிநாட்டு கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, பல்வகைப்பட்ட நுகர்வோரின் விருப்புவெறுப்புக்களுக்கு ஏற்ப தயாரிப்புக்களை பிரத்தியேகமானதாக வடிவமைப்பதே நிறுவனத்தின் ஏற்றுமதி மூலோபாயத்தின் மையமாகவுள்ளதாக சர்வதேச சந்தைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரி சுதந்த விக்டோரியா அவர்கள் சுட்டிக்காட்டினார். 

புதிய சந்தைகளில் காலடியெடுத்து வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, உற்பத்தி ஆற்றலை விரிவுபடுத்தி, தனது உலகளாவிய ஏற்றுமதி அடிச்சுவட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக புத்தாக்கமான தயாரிப்பு வடிவங்களை அறிமுகப்படுத்தி, சர்வதேச மட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையில் இலங்கை தனது ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு ஸ்டோர்ஸ் பிஎல்சி அர்ப்பணிப்புடன் செயல்படும்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278