May 20, 2026 - 01:47 PM -
0
இந்தியாவின் கிராமப்புற பின்னணியில் இருந்து உருவானதும், பின்லாந்தின் ஒழுங்குமுறை மற்றும் உரிமை சார்ந்த பண்பாட்டால் வடிவமைக்கப்பட்டதுமான சுனில் குமார் சிங் அவர்களின் பார்வை, ZKTOR நிறுவனத்தின் தெற்காசிய விரிவாக்கத்திற்கு தனித்துவமான அடித்தளத்தை வழங்குகிறது. இந்நிலையில், இலங்கை இந்த பிராந்திய வளர்ச்சி திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்து வருகிறது.
Softa Technologies நிறுவனம் உருவாக்கிய ZKTOR தளம், இந்தியா, நேபாள், இலங்கை மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட Beta பயனர்களை பெற்றுள்ளது. Gen Z தலைமுறை மற்றும் பெண்கள் அதிகளவில் பயன்படுத்துவது, இந்த தளத்தின் ஆரம்ப கட்ட நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, தனியார் உரிமை, மரியாதை மற்றும் பயனர் கட்டுப்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த இந்திய சமூக ஊடக தளம், தெற்காசிய பயனர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
இந்த வளர்ச்சியின் மையத்தில் Softa நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் குமார் சிங் உள்ளார். இந்தியாவின் கிராமப்புற அடையாளத்துடன் இணைந்து, இருபது ஆண்டுகளுக்கும் மேலான பின்லாந்து அனுபவம், அவரின் சிந்தனைக்கு ஒழுங்குமுறையும் உரிமை சார்ந்த அணுகுமுறையும் வழங்கியுள்ளது. இதனால் ZKTOR ஒரு குறுகிய கால பயன்பாட்டு செயலியாக அல்லாது, நீண்டகால நோக்குடன் உருவாக்கப்பட்ட தளமாக முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை கண்காணிப்பாளர்களால் பார்க்கப்படுகிறது. பயனர் பாதுகாப்பு, செலவு கட்டுப்பாடு மற்றும் பிராந்தியத்திற்கான பொருத்தம் ஆகியவை இங்கு முக்கிய மூலோபாய அம்சங்களாக கருதப்படுகின்றன.
சிங் அவர்களின் அடிப்படை கருத்து தெளிவானது: பயனர்களைப் பாதுகாக்க தேவையான தொழில்நுட்பங்கள் சந்தையில் இருக்கின்றன. அவற்றை இயல்புநிலையாக (default) அமல்படுத்தும் மனப்பாங்கே குறைவாக இருந்தது. இதற்கான பதிலாகவே ZKTOR உருவாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் புரிந்து கொள்ளாத சிக்கலான தனியார் உரிமை விதிமுறைகள் மற்றும் தரவு ஒப்பந்தங்களில் அவர்களை தள்ளும் முறைமையை இது மாற்றுகிறது. Zero Knowledge Server Architecture, URL இல்லாத மீடியா அமைப்பு, நடத்தை கண்காணிப்பு (behavior tracking) இல்லாமை மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட encryption போன்ற அம்சங்கள், தரவு பாதுகாப்பை இயல்புநிலையாகக் (default) கொண்ட தளத்தை உருவாக்குகின்றன. செயற்கை நுண்ணறிவு, deep fake, தரவுகள் பிழையாக பயன்படுத்தப்படுதல் ஆகிய இணைய பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்கும் சூழலில், இந்த அணுகுமுறை தளத்திற்கு தெளிவான நோக்கத்தை வழங்குகிறது.
ஸ்தாபகர் சார்ந்த சுயாதீனமான அணுகுமுறையும் ZKTOR ற்கு மேலதிக நம்பகத்தன்மையை அளிக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளி நிதி ஆதாரங்களைத் தவிர்த்து, நிறுவனத்தை அரசியல் அல்லது நிறுவன அழுத்தங்களிலிருந்து விலக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், குறைந்த செலவில் உயர் தர தொழில்நுட்பத்தை உருவாக்கும் ISRO போன்ற மாதிரியை Softa பின்பற்றுகிறது. கட்டுப்பாடு, பொறியியல் ஒழுக்கம் மற்றும் தெளிவான நோக்கத்துடன் உயர்தர தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்பதனை அதன் மூலம் வெளிப்படுத்துகிறது. இது விரைவான செலவீடு மூலம் கவனத்தை ஈர்ப்பதை விட, நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது என்ற ஒரு வித்தியாசமான நோக்கை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.
ZKTOR நிறுவனத்தின் பரந்த சூழல் அமைப்பும் இந்த நோக்கத்தை வலுப்படுத்துகிறது. Subkuz தளம் உள்நாட்டு செய்திகள் மற்றும் வெளிநாட்டு சமூகங்களை இணைக்கிறது. Ezowm உள்நாட்டு வணிகத்தை முன்னிறுத்துகிறது. Hola AI பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு அடுக்காக செயல்படுகிறது மற்றும் ZHAN உள்நாட்டு வணிகங்கள், creators, சேவை வழங்குனர்கள் மற்றும் அருகிலுள்ள பயனர்களை (audience) வெளிப்படையான, ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முறை மூலம் இணைக்கிறது. முறையான விதத்தில் இது செயல்படுத்தப்பட்டால் இவ் அமைப்பு, சமூக பங்கேற்பையும் உள்நாட்டு பொருளாதாரத்தையும் ஒன்றிணைக்கும் திறன் கொண்டதாகும்.
இலங்கைக்கான தாக்கம் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமானதாகும். சிறந்த மற்றும் நம்பகமான ஓர் டிஜிட்டல் தளம் குடும்ப நம்பிக்கையை உயர்த்துவதோடு பெண்களின் பங்கேற்பையும் இளைஞர்களின் செயற்பாட்டையும் அதிகரிக்கக்கூடும். அத்துடன் அது உள்நாட்டு நம்பிக்கையையும் உயர்த்தும். ZKTOR தொடர்ந்து வளர்ச்சி அடைந்தால், செயல்பாடுகள், மார்க்கெட்டிங், creator செயற்பாடு, உள்நாட்டு பிரச்சாரங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகளில் இலங்கை இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உருவாகும்.
பூடான், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு beta விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ZKTOR நிறுவனம் தெற்காசியாவின் அடுத்த கட்ட டிஜிட்டல் வளர்ச்சியை உருவாக்கக்கூடிய ஸ்தாபக நம்பிக்கையின் மீது வழிநடத்தப்படும் ஓர் கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப மாதிரியாக மாறி வருகிறது.
