Header Logo
SLIC
வணிகம்
AAFI இனால் புதிய பணிப்பாளர் சபை நியமனம்

May 21, 2026 - 06:17 PM

AAFI இனால் புதிய பணிப்பாளர் சபை நியமனம்
Mobitel Inner 1278
EDEX Inner

மாற்று நிதி நிறுவனங்களின் சங்கம் (AAFI), 2026/2027 காலப்பகுதிக்கான புதிய பணிப்பாளர் சபையை நியமித்துள்ளது. நடைபெற்ற வருடாந்த பொது ஒன்றுகூடலின் போது இந்த நியமனம் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் மாற்று நிதித் துறையின் தேசிய பிரதிநிதித்துவ அமைப்பாக AAFI திகழ்வதுடன், பரந்த நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பங்காளர்களை ஒன்றிணைக்கின்றது. தொழிற்துறையின் குரலாக AAFI இயங்குவதுடன், கொள்கை சார் உரையாடல்களை முன்னெடுப்பது, ஒழுங்குபடுத்தல் பொருத்தப்பாடுகள் மற்றும் நாடு முழுவதிலும் துறைசார் விருத்தி ஆகியவற்றை மேற்கொள்கிறது. 

ஜனவரி 2026 முதல் இரண்டு வருடங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் கீழ் வரும் பணிப்பாளர் சபை பதவிகளுக்காக பின்வரும் அங்கத்தவர்கள் ஏகமனதாக மீண்டு தெரிவு செய்யப்பட்டனர். 

* திரு. சித்தீக் அக்பர் - தலைவர் * திரு. சுரேஷ் ஆர் ஐ பெரேரா – உப தலைவர் * திருமதி. ரிப்கா சியார்ட் - செயலாளர் * திரு. இல்சாம் அவ்பர் – உதவி செயலாளர் * திரு. பஹார் நயன் – பொருளாளர் * திரு. ஹிஷாம் அலி – உதவி பொருளாளர் 

திரு. சித்தீக் அக்பர், அமானா வங்கியின் தற்போதைய நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவராக திகழ்கிறார். இவர் மீண்டும் தலைவராக சங்கத்தின் அங்கத்தவர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதே போன்று, KPMG இன் வரி மற்றும் ஒழுங்குபடுத்தல் அதிகாரியான திரு. சுரேஷ் பெரேரா சங்கத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், சங்கத்தின் செயலாளராக திருமதி. ரிப்கா சியார்ட் தெரிவு செய்யப்பட்டிருந்தார். NDB இன் இஸ்லாமிய வங்கிச் சேவைகள் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக திகழும் பஹார் நயன், பொருளாளராக நியமிக்கப்பட்டார். HNB இன் பிரதி பொது முகாமையாளர் திரு. ஹிஷாம் அலி, உதவி பொருளாளராக நியமிக்கப்பட்டார். LOLC ஃபினான்ஸ் AFSU பிரதம முகாமையாளர் இல்சாம் அவ்பர் உதவி செயலாளராக நியமிக்கப்பட்டார். 

AAFI பணிப்பாளர் சபையின் வழிகாட்டல்களின் கீழ், இலங்கைக்கு இந்த பிரத்தியேகமான வங்கி மற்றும் நிதியியல் மாதிரியின் முழுமையான ஆற்றலை செம்மையாக்கி வழங்கும் நோக்கத்தின் புதிய அத்தியாயத்தை முன்னெடுத்துச் செல்ல சங்கம் எதிர்பார்க்கிறது. 

AAFI இன் அங்கத்தவர்களில் இலங்கையின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அடங்கியுள்ளன. AAFI இன் அங்கத்தவர்களாக அமானா வங்கி பிஎல்சி, இலங்கை வங்கி பிஎல்சி, ஹற்றன் நஷனல் வங்கி பிஎல்சி, LB ஃபினான்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, Al- Falaah– LOLC பினான்ஸ் பிஎல்சி, LOLC ஜெனரல் இன்சூரன்ஸ் பிஎல்சி, HNB ஜெனரல் இன்சூரன்ஸ் பிஎல்சி, KPMG, கொமர்ஷல் வங்கி - Al Adalah, அமானா டகாஃபுல் பிஎல்சி, MCB வங்கி லிமிடெட், செலான் வங்கி பிஎல்சி, NDB வங்கி பிஎல்சி, NDB இன்வெஸ்ட்மன்ட் வங்கி லிமிடெட் ஆகியன அடங்குகின்றன. 

s அண்மையில் AAFI இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டதுடன், அதனை https://www.aafi.lk/ ஊடாக பார்வையிட முடியும்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278