Header Logo
SLIC
வணிகம்
Hellmann மற்றும் MAS ஹோல்டிங்ஸ் இலங்கையில் புதிய ஆடை சார் ஏற்றி இறக்ககல் மையத்தைத் தொடங்குகின்றன

May 21, 2026 - 06:22 PM

Hellmann மற்றும் MAS ஹோல்டிங்ஸ் இலங்கையில் புதிய ஆடை சார் ஏற்றி இறக்ககல் மையத்தைத் தொடங்குகின்றன
Mobitel Inner 1278
EDEX Inner

2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Hellmann MAS விநியோகச் சங்கிலியின் (HMSC) கூட்டு முயற்சியின் கீழ், இலங்கையின் கிம்புலாபிட்டியவில் புதிய ஒப்பந்த ஏற்றி இறக்கல் மையம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கம்பஹா மாவட்டத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெறும் 6 கிலோ மீற்றர் தொலைவில் அமையவுள்ளது. இந்த மையம் Hellmann நிறுவனத்தின் தெற்காசிய வலைப்பின்னலில் ஒரு பிரத்யேக ஆடை சார் மையமாக செயல்படும். இந்தத் திட்டம் ஆடைத் துறையில் இலங்கையின் விநியோகச் சங்கிலித் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் புதிய மையம் Hellmann நிறுவனத்தின் Forward 2030 திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது அந்நிறுவனத்தின் உலகளாவிய வலைப்பின்னலில், நீண்டகால வளர்ச்சிக்கான முதன்மைத் தூண்களில் ஒன்றாக ஆடைத் துறை (Fashion Vertical) இருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ஒரு மைய நுழைவாயிலாக இலங்கை திகழ்கிறது. இந்தத் தனித்துவமான அமைவிடம் சர்வதேச வர்த்தகத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது. இதன் மூலம், மாறிவரும் ஆடை விநியோகச் சங்கிலிக்கு (Supply chain) ஏற்ப, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட உயர்தர ஏற்றி இறக்கல் தீர்வுகளை Hellmann நிறுவனத்தால் வழங்க முடியும். 

MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த முதலீடு அதன் மூலோபாய வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய அடியாகும். இது தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடைத் தொழில்நுட்ப நிறுவனம் (Apparel Tech Company) என்ற அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. அந்த நிறுவனம் தற்போது இன்னும் பெரிய இலக்குகளைத் நிர்ணயித்துள்ளது. இது ஆடைத் துறையில் பெரும் மாற்றங்களை முன்னின்று நடத்துவதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. 

ஆடை சார் ஏற்றி இறக்கல்களின் அனைத்துத் தேவைகளையும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையம், 8,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. மேலும், சூரிய சக்தி பெனல்கள் பொருத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான பிராந்திய விநியோகத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இதன் உள்கட்டமைப்பு அமைந்துள்ளது. இது மிக உயர்ந்த செயல்பாட்டுத் தரம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும். 

இந்தத் திட்டம் Hellmann மற்றும் MAS ஹோல்டிங்ஸ் நிறுவனங்களுக்கு இடையே நிலவும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்துகிறது. Hellmann MAS விநியோகச் சங்கிலியின் (HMSC) மூலம், Hellmann நிறுவனத்தின் சர்வதேச ஏற்றி இறக்கல் நிபுணத்துவமும், MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆடை உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி புத்தாக்கங்களும் ஒன்றாக இணைகின்றன. இந்த இணைப்பின் மூலம், தெற்காசியா முழுவதும் உள்ள முன்னணி சர்வதேச ஆடை நிறுவனங்களுக்குத் தேவையான ஆரம்பம் முதல் இறுதி வரையிலான (End-to-end) ஒருங்கிணைந்த விநியோகத் தீர்வுகளை வழங்க முடிகிறது. 

இலங்கை, உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி மற்றும் ஒப்பந்த ஏற்றி இறக்கல் திறன்களை, வேகமான ஆடை விநியோகச் சங்கிலியுடன் ஒருங்கிணைத்து வழங்குகிறது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு இலங்கையை ஒரு நம்பிக்கைக்குரிய பங்காளியாக மாற்றுகிறது. இந்த புதிய பிரத்யேக வசதியின் மூலம், MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடனான எங்களது கூட்டு நிறுவனமான Hellmann MAS விநியோகச் சங்கிலியின் ஒட்டுமொத்த ஆடை சார் ஏற்றி இரக்ககல் திறன்களை நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறோம், என்று Hellmann உலகளாவிய ஏற்றி இறக்கல் நிறுவனத்தின் பிராந்திய செயல்பாட்டு அதிகாரி Patrick Grzywa தெரிவித்துள்ளார். 

இந்த முதலீடானது, இலங்கையை சர்வதேச அளவில் ஒரு போட்டித்தன்மை மிக்க ஆடை உற்பத்தி மையமாக வலுப்படுத்துவதில் MAS நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்று MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு அதிகாரி (COO) மற்றும் Hellmann MAS விநியோகச் சங்கிலியின் நிறுவனத்தின் சபை உறுப்பினர் சக்தி ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், Hellmann நிறுவனத்துடனான எங்களது கூட்டாண்மை மூலம், நாங்கள் வெறும் ஆடை உற்பத்தியுடன் நின்றுவிடாமல், சர்வதேச நிறுவனங்களுக்குத் தேவையான ஆரம்பம் முதல் இறுதி வரையிலான (End-to-end) ஒருங்கிணைந்த விநியோகத் தீர்வுகளை வழங்குகிறோம். இந்த புதிய வசதி, எங்கள் செயல்பாடுகளை வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் மாற்ற உதவுவதோடு, இலங்கையில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு வலுவான ஆடைத் துறை சூழலை உருவாக்கவும் துணையாக அமையும் என்றார். 

Hellmann தொடர்பாக 

Hellmann நிறுவனம் விமானம், கடல், சாலை மற்றும் ரயில் வழிப் போக்குவரத்து மற்றும் ஒப்பந்த ஏற்றி இறக்கல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான விநியோகச் சேவைகளையும் வழங்கும் ஒரு சர்வதேச நிறுவனமாகும். 61 நாடுகளில் சுமார் 12,000 பணியாளர்களுடன் இயங்கும் இந்நிறுவனம், ஆண்டுக்கு 3.8 பில்லியன் யூரோ வருவாயைப் பெறுகிறது. மேலும், ஆண்டுதோறும் 20 மில்லியன் ஏற்றுமதிகளைக் கையாள்கிறது. பல ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ள Hellmann, ஒவ்வொரு வாடிக்கையாளரின் சிக்கலான தேவைகளுக்கும் ஏற்ற நவீன மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை வழங்குகிறது. விநியோகச் சங்கிலியில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் அதிகரிக்க, மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகளை இந்நிறுவனம் பயன்படுத்துகிறது. 

MAS Holdings தொடர்பாக 

MAS ஹோல்டிங்ஸ் ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தியில் தெற்காசியாவின் மிகப்பெரிய வடிவமைப்பு முதல் விநியோகம் வரையிலான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். சுமார் 100,000 பணியாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 13 நாடுகளில் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. தற்போது ஆடைத் துறை மட்டுமின்றி, அணியக்கூடிய தொழில்நுட்பம், பெண்களுக்கான சுகாதாரத் தொழில்நுட்பம், ஏற்றி இறக்கல்கள் மற்றும் ஜவுளி பூங்காக்கள் (Fabric parks) எனப் பல துறைகளில் விரிவடைந்துள்ளது. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, நேர்மையான மற்றும் நிலையான பணிச்சூழல், நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் தயாரிப்புத் தரம் ஆகியவற்றிற்காக MAS நிறுவனம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278