May 23, 2026 - 02:53 PM -
0
கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபுகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் மகா வெசாக் பெரஹரா காரணமாக, இன்றைய தினம் (23) போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார், சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கந்தானை, ஹபுகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த மகா வெசாக் பெரஹரா இன்று இரவு 7:00 மணிக்கு வீதி உலா ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெரஹரா விகாரையிலிருந்து புறப்பட்டு கந்தானை நகர மத்தியினூடாக கம்பஹா - கந்தானை வீதி மற்றும் கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதிகளில் வீதி உலா வந்து மீண்டும் விகாரையை சென்றடையவுள்ளது.
இந்த பெரஹரா கம்பஹா - கந்தானை வீதியின் ராகம வெவ சந்தியிலிருந்து நீர்கொழும்பு வீதியின் கணேமுல்ல சந்தி வரை இரவு 7:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை பயணிக்கவுள்ளது.
மேலும், கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை கணேமுல்ல சந்தியிலிருந்து ஆனியாகந்த வைத்தியசாலை சந்தி வரை இரவு 10:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 1:00 மணி வரை பெரஹரா பயணிக்கவுள்ளது.
இதற்கமைய, பெரஹரா கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் காலப்பகுதியில், கணேமுல்ல சந்தியிலிருந்து ஆனியாகந்த வைத்தியசாலை வரை கொழும்பு நோக்கிய திசையிலான இரு வழித்தடங்களும் (Lanes) மூடப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த வீதிப் பகுதி மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், அவ்வீதியினூடாக பயணிக்கும் சாரதிகள் சாத்தியமான வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

