Header Logo

செய்திகள்
வடக்கில் போக்குவரத்து விதிகளை மீறிய மூவர் கைது!

May 23, 2026 - 07:59 PM -

0

வடக்கில் போக்குவரத்து விதிகளை மீறிய மூவர் கைது!

வட மாகாணத்தில் இடம்பெற்ற நினைவு நிகழ்வொன்றிற்கு சமாந்தரமாக, போக்குவரத்து விதிகளை மீறி வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புத் தலைக்கவசங்கள் இன்றி மோட்டார் சைக்கிள்களில் சென்ற இந்த நபர்கள் குறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் புத்தூர் சந்தியில் இருந்து கொடிகாமம் ஊடாக கிளிநொச்சி நோக்கிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளைக் கொண்டு உரிமையாளர்களைத் தேடி கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் கடந்த 18ஆம் திகதி விஸ்வமடு சந்தியில் ஒன்றிணைந்து முல்லைத்தீவு வீதியூடாக முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றமை கண்டறியப்பட்டது.

இத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்று (23) காலை சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களைச் செலுத்தியமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாது பயணித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title