May 23, 2026 - 10:23 PM -
0
மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ('இந்துக்களின் போர்') இன்றைய தினம் சமநிலையில் நிறைவடைந்தது.
நேற்றைய தினம் ஆரம்பமான இப்போட்டி இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாவகச்சேரி இந்து கல்லூரி, முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்து கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைக் குவித்தது. அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி இந்து கல்லூரி அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்து கல்லூரி அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் போட்டி நிறைவுக்கு வந்தது. மூன்றாவது ஆண்டாக இடம்பெற்ற இப்போட்டி, கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இம்முறையும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. போட்டி நிறைவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் இரு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், விருந்தினர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
--

