Header Logo
SLIC
வணிகம்
பிலியந்தலை - பொல்கசோவிடவில் விரைவான வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திறனைக் கொண்ட பிரத்தியேக காணி மேம்பாட்டுத் திட்டமான “The Infinity” ஐ அறிமுகப்படுத்தும

May 25, 2026 - 11:07 AM

பிலியந்தலை - பொல்கசோவிடவில் விரைவான வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திறனைக் கொண்ட பிரத்தியேக காணி மேம்பாட்டுத் திட்டமான “The Infinity” ஐ அறிமுகப்படுத்தும
Mobitel Inner 1278
EDEX Inner

Groundworth (Pvt) Ltd நிறுவனம், கொழும்பின் மிக வேகமாக விரிவடைந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான பிலியந்தலை – பொல்கசோவிடவில் அமைந்துள்ள ஒரு உயர் ரக காணி மேம்பாட்டுத் திட்டமான ‘The Infinity by Groundworth’ இன் அறிமுகத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. The Infinity திட்டமானது நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் குடியிருப்பு நிலப்பரப்பிற்குள் எளிதாக அணுகும் வசதி, சௌகரியம் மற்றும் நீண்டகால மூலதன மதிப்பை ஒன்றிணைக்கிறது. இது நவீன குடியிருப்பு வாழ்க்கை மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட முதலீட்டு வாய்ப்புகளுக்காக மூலோபாய ரீதியாக நிறுவப்பட்டுள்ளது. 

The Infinity ஆனது தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பாதை வலையமைப்பிலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் அமைந்துள்ளதால், கொழும்பு மற்றும் ஏனைய புறநகர் வர்த்தக மையங்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது. இக்காணி மேம்பாட்டுத் திட்டம் கொழும்பு - ஹொரணை வீதியிலிருந்து 500 மீற்றர் தூரத்திலும், கஹதுடுவ பரிமாற்றத்திலிருந்து 1.5 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளதால், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை எளிதாக அணுக முடியும். அது மாத்திரமன்றி, இது பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ ஆகிய நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால், வலுவான உட்கட்டமைப்பு வளர்ச்சியைக் கொண்ட, நடைமுறைக்கேற்ற ஒரு குடியிருப்பு முகவரியாகத் திகழ்கிறது. 

வேதெர பிரதேச வைத்தியசாலை வெறுமனே 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளமை உள்ளிட்ட விடயங்கள், அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான தேவைகளை எளிதில் அணுக வழிவகுக்கிறது. முன்னணி பல்பொருள் அங்காடிகளான கார்கில்ஸ் புட் சிற்றி (1.5 கி.மீ.) மற்றும் கீல்ஸ் (3 கி.மீ.), அத்துடன் உள்ளூர் வங்கிகள், உணவகங்கள் மற்றும் சேவைகளுக்கான வசதிகள் அனைத்தும் இந்த இடத்திலிருந்து மிக எளிதாக அணுக முடிகிறது. இப்பகுதியின் நிறுவப்பட்டுள்ள குடியிருப்பு வலயம், உடனடி கட்டுமான மேம்பாட்டிற்கும் நீண்டகால மதிப்பைத் தக்கவைப்பதற்கும் ஏற்றதாக இதனை மேலும் மேம்படுத்துகிறது. 

The Infinity ஆனது வெறுமனே 19 உயர் ரக காணித் துண்டுகளை மாத்திரமே கொண்டுள்ளதால், நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் அதன் பிரத்தியேகத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. காணித் துண்டுகளின் அளவுகள் 6.35 பேர்ச்சஸ் இலிருந்து ஆரம்பிப்பதால், அவை சிறிய, நவீன குடியிருப்பு கட்டுமானங்களுக்கு மிகவும் பொருத்தமானவை ஆகும். இத்திட்டம் தெளிவான அங்கீகரிக்கப்பட்ட காணிப் பத்திரங்கள், நன்கு மேம்படுத்தப்பட்ட 20 அடி அகல வீதிக்கான அணுகல் மற்றும் வேகமாக மதிப்பு உயர்ந்து வரும் ஒரு புறநகர்ப் பகுதிக்குள் அமைதியான சூழல் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஒரு பேர்ச்சஸ் காணியின் விலை ரூ. 1.2 மில்லியனிலிருந்து ஆரம்பிப்பதுடன், அதிக கேள்வியுள்ள ஒரு வளர்ச்சியடையும் வலயத்திற்குள் இத்திட்டத்தை போட்டித்தன்மை வாய்ந்ததாக நிலைநிறுத்துகிறது. 

இந்த அறிமுகம் குறித்து Groundworth நிறுவனத்தின் இணை நிறுவுனர் கசுன் அந்திரஹென்னதி (Kasun Andrahennadi) கருத்துத் தெரிவிக்கையில், வலுவான திறனைக் கொண்ட காணிகளை அடையாளம் காண்பதிலான எமது தொடர்ச்சியான கவனமானது, The Infinity திட்டத்தில் பிரதிபலிக்கிறது. அதிகரித்து வரும் குடியிருப்புக்கான கேள்வி மற்றும் உட்கட்டமைப்பு விரிவாக்கம் காரணமாக பிலியந்தலை – பொல்கசோவிட பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. உடனடியான வாழ்க்கை முறை வசதி மற்றும் நீண்டகால முதலீட்டு வளர்ச்சி ஆகிய இரண்டையும் வழங்குவதன் மூலம் கொள்வனவாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு வாய்ப்பை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.” என்றார். 

கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை பரிமாற்றத்தைச் சூழவுள்ள, அதிகரித்து வரும் நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் சிறந்த போக்குவரத்து இணைப்பைக் கொண்ட குடியிருப்பு காணிகளுக்கான அதிக கேள்வி காரணமாக, பிலியந்தலை - பொல்கசோவிட பகுதியானது தொடர்ச்சியாக சிறந்த நில மதிப்பு உயர்வடையும் திறனைக் காட்டுகிறது. ஒரு வரையறுக்கப்பட்ட மற்றும் கவனமாகத் தெரிவு செய்யப்பட்ட சலுகையுடனான, இந்த வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள The Infinity சிறந்த தயார் நிலையில் உள்ளது. வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான காணித் துண்டுகள் மாத்திரமே உள்ள நிலையில், காணிகளை நேரில் பார்வையிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278