Header Logo
SLIC
வணிகம்
E. B. Creasy & Co., PLC – BIC & DENTA தொழிற்சாலை பெண்கள்-தலைமைத்துவ நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் வெற்றியாளராக தெரிவு

May 25, 2026 - 12:31 PM

E. B. Creasy & Co., PLC – BIC & DENTA தொழிற்சாலை பெண்கள்-தலைமைத்துவ நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் வெற்றியாளராக தெரிவு
Mobitel Inner 1278
EDEX Inner

E. B. Creasy & Co., PLC – BIC & DENTA தொழிற்சாலை, அண்மையில் நடைபெற்ற பெண்களினால் வழிநடத்தப்படும் நிலைபேறான திட்டங்களுக்கான பாராட்டு விருதுகள் 2026 நிகழ்வில் வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாணந்துறையிலுள்ள The Barnhouse ஹோட்டலில், பொறுப்புமிக்க பாதுகாப்பு முன்முயற்சியின் கீழ் வழங்கப்பட்ட இவ்விருதானது, இந்நிறுவனத்தின் Awesi திட்டத்தைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. 

இத்திட்டமானது பணியிடப் பாதுகாப்பு, புதுமை மற்றும் நிலைபேறான தன்மை ஆகியவற்றில் ஏற்படுத்திய நிரூபிக்கப்பட்ட சாதகமான தாக்கத்தின் காரணமாக, இந்த ஆண்டின் பெண்களினால் வழிநடத்தப்பட்ட மிகச்சிறந்த 10 திட்டங்களில் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டு இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 

தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் நிறைவேற்று அதிகாரி ஷனிகா அமரசேகர மற்றும் எரிசக்தி மற்றும் நிலைபேறான பிரிவின் நிறைவேற்று அதிகாரி திலக்ஷி நவோத்யா ஆகியோரின் கூட்டுத் தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தப்பட்ட Awesi திட்டம், உள்ளடக்கமான தொழிற்துறை அபிவிருத்திக்குரிய ஒரு முன்மாதிரியான மற்றும் ஏனையவர்களாலும் பின்பற்றத்தக்க சிறந்த மாதிரியாக விளங்கியமைக்காக இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 

Lanka Responsible Care Council (LRCC) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருதுவழங்கும் விழா, இரசாயனத் துறையில் பாதுகாப்பான, பொறுப்புமிக்க மற்றும் நிலைபேறான நடைமுறைகளை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரித்துக் கௌரவிக்கின்றது. இந்த சாதனை மைல்கல், E. B. Creasy & Co., PLC – BIC and Denta தொழிற்சாலை, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் பணியிட நிலைபேறான தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278