Header Logo

வணிகம்
Prime Group இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் Prime – Melwa Port City இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி. சமன் மஹாவத்த நியமனம்

May 25, 2026 - 01:33 PM -

0

Prime Group இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் Prime – Melwa Port City இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி. சமன் மஹாவத்த நியமனம்

Prime Group இன் இரு முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாயப் பிரிவுகளின் தலைமைத்துவத்தை வலிமைப்படுத்தும் வகையில், Prime Constructions (Pvt) Ltd (PCL) இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் Melwa Port City (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி. சமன் மஹாவத்த நியமிக்கப்பட்டுள்ளார். 

கட்டுமானம் மற்றும் அபிவிருத்தித் துறைகளில் மூன்று தசாப்த கால புகழ்பெற்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள கலாநிதி மஹாவத்த, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பல பிரம்மாண்ட திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய சிறந்த பின்னணியைக் கொண்டவராவார். Maga Engineering (Pvt) Ltd நிறுவனத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணத்துவக் குழுக்களை வெற்றிகரமாக வழிநடத்தியதுடன், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களைச் திறம்பட நெறிப்படுத்தி, தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் பரந்த அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த சிரேஷ்ட தலைமைத்துவப் பதவிகள் அவரது தொழில்முறைப் பயணத்தில் உள்ளடங்கியுள்ளன. 

இந்த நியமனத்தின் ஊடாக, Prime Group, தனது வளர்ச்சி, புதுமை மற்றும் தலைமைத்துவத்திற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், Prime Constructions மற்றும் Prime – Melwa Port City ஆகியவற்றை, இலங்கையின் கட்டுமானக் கட்டமைப்பு மற்றும் உலகளாவிய ரியல் எஸ்டேட் துறையின் எதிர்காலத்தை புதிய பரிமாணத்தில் வடிவமைக்கும் வலிமையான சக்திகளாக இந்த மாற்றம் முன்னிறுத்துகின்றது. 

Prime Group இன் இணைத் தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், 

“கலாநிதி மஹாவத்தவின் இந்த நியமனம், கட்டுமானம் மற்றும் அபிவிருத்தித் திட்டப்பணிகளில் Prime Group இன் ஆளுமையை மேலும் வலுப்படுத்துவதற்கான எமது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. அவரது சிறப்பான கல்விசார் தகைமைகள், தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் இத்துறையில் அவர் கொண்டுள்ள நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவ திறன்கள் ஆகியவை, Prime Constructions மற்றும் Prime – Melwa Port City ஆகியவற்றை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அவரின் வழிகாட்டலுடன், எமது வளர்ச்சியை விரைவுபடுத்தவும், புதுமைகளை முயற்சி செய்யவும், அத்துடன் இலங்கையின் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் புதிய இலக்குகளை நிலைநாட்டவும் முடியும் என்ற முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது.” என்றார். 

கல்வி மற்றும் தொழில்முறை ரீதியாக, கலாநிதி மஹாவத்த அவர்கள் கட்டுமான முகாமைத்துவத் துறையில் கலாநிதி (PhD) பட்டத்தையும், சிவில் பொறியியல், அளவையியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய துறைகளில் மூன்று First‑Class Honours Degrees ஐயும் பெற்றுள்ளார். அத்துடன் திட்ட முகாமைத்துவம், கட்டுமானச் சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் - நிதி ஆகிய துறைகளில் மூன்று முதுமாணிப் பட்டங்களையும் கொண்டு, மிகச்சிறந்த தகைமைப் பட்டியலை அவர் பேணுகிறார். 

கலாநிதி மஹாவத்த, ஒரு அங்கீகாரம் பெற்ற சான்றளிக்கப்பட்ட அளவையாளர், சிவில் பொறியியலாளர், PMP சான்றிதழ் பெற்ற திட்ட முகாமையாளர், சிக்ஸ் சிக்மா நிபுணர் மற்றும் பசுமைக் கட்டுமான அங்கீகாரம் பெற்ற தொழில்முறை வல்லுநர் ஆவார். தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான 16 புகழ்பெற்ற தொழில்முறை நிறுவனங்களில் அவர் கொண்டுள்ள அங்கத்துவங்களும் உயர்தரத் அங்கத்துவங்களும் அவரது ஆளுமைக்குச் சான்றாக விளங்குகின்றன. திட்ட முகாமைத்துவம், அபிவிருத்தி மற்றும் முதலீட்டு மதிப்பீடு, கட்டுமானச் சாத்தியக்கூறுகள் மற்றும் மதிப்புப் பொறியியல் அத்துடன் நிலையான கட்டுமானம் மற்றும் பசுமைத் தணிக்கை ஆகிய துறைகளில் அவர் கொண்டுள்ள பரந்த நிபுணத்துவமானது, நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் அவரை ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியுள்ளது. 

தனது தொழில்முறைப் பயணத்தின் மைல்கல்கள் மற்றும் சாதனைகளுக்கு அப்பால், கலாநிதி மஹாவத்த, கல்வித்துறை, தொழில்முறை நடைமுறைகள் மற்றும் சமூக சேவை ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். இலங்கைக்கு அவர் ஆற்றிய நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் சேவைகளுக்காக தேசிய ரீதியில் பரந்த பாராட்டுக்களையும் அங்கீகாரத்தையும் அவர் பெற்றுள்ளார். 

Prime Group நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவான Prime Constructions (Pvt) Ltd, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது. இன்று, இந்நிறுவனம் இலங்கையின் கட்டுமானத் துறையில் ஒரு முன்னணி சக்தியாக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு வெறும் இரண்டரை ஆண்டுகளுக்குள், அதன் செயல்பாட்டு வலிமை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், மிகவும் மதிப்புமிக்க CIDA C1 தர அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இவ்வளவு குறுகிய காலப்பகுதிக்குள் C1 தர நிலையை அடைந்தமையானது ஒரு சாதனை மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 

இதற்கு மேலதிகமாக, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரக் கட்டுப்பாடுகள், வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், Prime Constructions நிறுவனம் ISO 9001:2015 சான்றிதழையும் பெற்றுள்ளது. Prime Group இன் பலமான நிதி ஸ்திரத்தன்மையின் பின்னணியுடன், தொழில்நுட்பத் திறனையும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட செயல்பாட்டையும் ஒன்றிணைத்து, இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல பிரம்மாண்ட திட்டங்களை Prime Constructions தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றது.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title