Header Logo
SLIC
வணிகம்
ரிட்ஸ்பரி தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாகவும் மக்கள் அபிமானத்தை வென்ற சொக்லட் வர்த்தக நாமமாக தெரிவு

May 26, 2026 - 05:40 PM

ரிட்ஸ்பரி தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாகவும் மக்கள் அபிமானத்தை வென்ற சொக்லட் வர்த்தக நாமமாக தெரிவு
Mobitel Inner 1278
EDEX Inner

சிபிஎல் புட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட்டின் முதல் தர சொக்லட் வர்த்தக நாமமாக ரிட்ஸ்பரி, SLIM-Kantar மக்கள் அபிமான விருதுகள் 2026 இல், மக்கள் அபிமானத்தை வென்ற சொக்லட் வர்த்தக நாமம் எனும் கௌரவிப்பைப் பெற்றுள்ளது. இந்த பெருமைக்குரிய கௌரவிப்பை பெற்றுக் கொண்ட தொடர்ச்சியான இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. இந்த நிகழ்வு Monarch Imperial இல் அண்மையில் நடைபெற்றது. Kantar உடன் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் SLIM-Kantar மக்கள் அபிமான விருதுகளினூடாக, நுகர்வோரின் கருத்துக்களின் அடிப்படையில் வர்த்தக நாமங்கள் கௌரவிக்கப்படுகின்றன. நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு செயன்முறையினூடாக விருதுகள் தீர்மானிக்கப்படுவதுடன், இலங்கை மக்களின் குரல்களின் உண்மையான பிரதிபலிப்பாக அமைந்துள்ளன. 

நாடு முழுவதையும் சேர்ந்த நுகர்வோருடன் கொண்டுள்ள உறுதியான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் ரிட்ஸ்பரி தொடர்ச்சியான விருதையும் வெற்றியையும் அடைந்துள்ளது. உயர் தரம் வாய்ந்த சொக்லட் மற்றும் கொக்கோ தயாரிப்பு இனிப்பு பண்டங்களை வழங்குவதில் வர்த்தக நாமம் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதுடன், சமூகங்களுடன் அர்த்தமுள்ள வகையில் ஈடுபாட்டை பேணுவது மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் இளம் திறமைசாலிகளை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துவதையும் வெளிப்படுத்தியுள்ளது. 

நிலுக்சா பெஸ்டியன்ஸ் பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல், CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட் கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் மக்கள் அபிமானம் பெற்ற சொக்லட் வர்த்தக நாமமாக கௌரவிப்பைப் பெற்றுள்ளமை எமக்கு பெரும் கௌரவமாகும். குறிப்பாக, இந்த விருதினூடாக, இலங்கை மக்களின் குரல் மற்றும் நம்பிக்கை பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் அறிமுகத்தைத் தொடர்ந்து, இரண்டு வருடங்களிலும் இந்த விருதைப் பெற்றுக் கொண்டமையானது, எமது வாடிக்கையாளர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளும் உறுதியான பந்தத்திற்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.” என்றார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சிறந்ததை பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை ரிட்ஸ்பரியைச் சேர்ந்த நாம் உறுதி செய்துள்ளதுடன், தரம், பெறுமதி மற்றும் சகல தருணங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும் தயாரிப்புகளை பெற்றுக் கொடுப்பதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார். 

இனிப்புப் பண்டங்கள் உற்பத்தி என்பதற்கு அப்பாற்பட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் ரிட்ஸ்பரி தனது கீர்த்தி நாமத்தை கட்டியெழுப்பியுள்ளது. பாடசாலை மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் முதல் தேசிய மட்ட போட்டிகள் வரை, வர்த்தக நாமத்தின் அர்ப்பணிப்பினூடாக, எதிர்கால தலைமுறைகளுக்கு வலுவூட்டும் பரந்த நோக்கு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் மக்கள் அபிமானம் பெற்ற சொக்லட் வர்த்தக நாம விருதை வெற்றியீட்டியமை ரிட்ஸ்பரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. நுகர்வோரின் நம்பிக்கை மற்றும் தெரிவு நேரடியான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. தரம், புத்தாக்கம் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் ரிட்ஸ்பரி காண்பிக்கும் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது. 

இந்த பிந்திய கௌரவிப்பானது, ஏற்கனவே நிறுவனம் பெற்றுக் கொண்ட இலங்கை தேசிய தர விருது (SLNQA) 2023 – உற்பத்தி பாரிய பிரிவில் மற்றும் SLS 1509:2015, ISO 9001:2015, ISO 22000:2018, FSSC 22000 Version 6, மற்றும் BRCGS ஆகிய பல விருதுகளுடன், ரிட்ஸ்பரி தொடர்ந்தும் இலங்கையின் அதிகம் அபிமானம் பெற்ற சொக்லட் வர்த்தக நாமங்களில் ஒன்று எனும் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், சகல பிரிவுகளையும் சேர்ந்த நுகர்வோருக்கு மகிழ்ச்சி மற்றும் பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கும் உறுதி மொழியை பேணுகிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278