Header Logo

வணிகம்
DIMO-வின் உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களுக்காக, லீசிங் தீர்வுகள் மூலம் வணிகங்களை வலுப்படுத்துகிறது HNB

May 27, 2026 - 04:23 PM -

0

DIMO-வின் உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களுக்காக, லீசிங் தீர்வுகள் மூலம் வணிகங்களை வலுப்படுத்துகிறது HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, கனரக இயந்திரங்களுக்கான விசேட நிதித் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்காக அண்மையில் DIMO நிறுவனத்துடன் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தக் கூட்டாண்மையின் மூலம், தொழிலதிபர்களும் ஒப்பந்தக்காரர்களும் DIMO நிறுவனத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களுக்கான விசேட லீசிங் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டமானது BOMAG Rollers, Kaeser Compressors, Everdigm Breakers, Gehl Skid Steer Loaders, Car Mix Concrete Mixers மற்றும் Komatsu கட்டுமான இயந்திரங்கள் போன்ற சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக முத்திரைகளை உள்ளடக்கியது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் நாட்டின் கட்டுமானம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

HNB இன் சிரேஷ்ட துணைத் தலைவர் மற்றும் வாடிக்கையாளர் வங்கித் தொழில்துறைப் பிரிவின் தலைவர் காஞ்சன கருணாகம இது குறித்துக் குறிப்பிடுகையில்: 

ஒரு வங்கியாக எமது பங்கு வெறும் நிதி வழங்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்தக் கூட்டாண்மையின் ஊடாக வழங்கப்படும் ஒவ்வொரு இயந்திர லீசிங் வசதியும், ஒரு வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதையும், ஒரு வணிகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதையும், சமூகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதையும் குறிக்கின்றது. ஒப்பந்தக்காரர்கள், இயந்திர இயக்குனர்கள் மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்கள் இவ்வாறான சிறந்த நிதித் தீர்வுகளுடன் நம்பகமான இயந்திரங்களை பெற்றுக்கொள்ளும் போது, எதனையும் கட்டியெழுப்பவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இலங்கையின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கவும் அவர்கள் தன்னம்பிக்கை கொள்கிறார்கள். DIMO உடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இந்த வாய்ப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்ல முடிவதுடன், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்துறைகளுக்கும் எம்மால் ஆதரவளிக்க முடிகிறது. என தெரிவித்தார். 

இந்தக் கூட்டாண்மையானது, பல்வேறு அளவிலான வணிகங்களுக்கு நவீன இயந்திரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, DIMO நிறுவனத்தின் பொறியியல் நிபுணத்துவத்தையும் HNB இன் வலுவான வாடிக்கையாளர் வங்கி மற்றும் லீசிங் சேவைகளையும் ஒன்றிணைக்கிறது. இத்திட்டத்தின் கீழ், HNB விசேட லீசிங் வட்டி விகிதங்களை வழங்குவதுடன், முதலாம் ஆண்டிற்கான வருடாந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் அட்டையையும் (Credit Card) வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலதிகமாக, HNB பொதுக் காப்புறுதி நிறுவனம் (HNB General Insurance) இயந்திரங்களுக்கான காப்புறுதிக் கட்டணங்களில் விசேட தள்ளுபடிகளை வழங்குகிறது, இது வாடிக்கையாளர்கள் நிதி வசதியுடன் தமது உபகரணங்களைப் பாதுகாக்க வழிவகை செய்கிறது. 

இந்தக் கூட்டாண்மை குறித்து DIMO நிறுவனத்தின் குழும முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கஹநாத் பண்டித்தகே கூறுகையில், 

வேலைத் தளங்களுக்கு விநியோகிக்கப்படும் ஒவ்வொரு இயந்திரத்திற்கும் பின்னால் தனது குடும்பம் மற்றும் சமூகம் மீதான பொறுப்புணர்வு, வைராக்கியம் மற்றும் இலட்சியம் கொண்ட ஒரு நபர் இருக்கிறார். DIMO இல், இயந்திரங்களை முன்னேற்றத்திற்கான ஒரு உந்துசக்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இவை அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் மூலம் வணிகங்கள் கட்டியெழுப்பவும், உற்பத்தியை மேற்கொள்ளவும், தொழில்துறைகளை முன்னோக்கி நகர்த்தவும் உதவுவதுடன், நாம் சேவை செய்யும் சமூகங்களின் கனவுகளுக்கும் அபிலாஷைகளுக்கும் வலுசேர்க்கின்றன. HNB உடனான எமது கூட்டாண்மையானது, வாடிக்கையாளர்கள் உலகத்தரம் வாய்ந்த உபகரணங்களை தன்னம்பிக்கையுடன் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நிதி ஆதரவை வழங்குகிறது. வணிகங்கள் சரியான இயந்திரங்கள் மற்றும் சரியான ஆதரவுடன் வலுப்படுத்தப்படும்போது, அது வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதுடன், தொழில்முயற்சிகளை ஊக்குவித்து, இலங்கையிலுள்ள தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகிறது." என தொிவித்தார். 

நம்பகமான வர்த்தக முத்திரைகள், நிதி வசதிகள் மற்றும் செயல்பாட்டு ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைந்த ஒரு முழுமையான இயந்திரக் கொள்வனவு தீர்வை வழங்குவதன் மூலம், HNB மற்றும் DIMO ஆகிய நிறுவனங்கள் இலங்கையிலுள்ள வணிகங்களுக்கான ஒரு வலுவான முன்மாதிரியை (Benchmark) உருவாக்கி வருகின்றன.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title