Header Logo

வணிகம்
நிலைபேறான மாதவிடாய் ஆரோக்கியத்திற்கான சூழல்தொகுதி அடிப்படையிலான அணுகுமுறையை மேம்படுத்துவதன் மூலம் #BleedGood இன் 5 வருடத்தை கொண்டாடும் Selyn

May 27, 2026 - 05:00 PM -

0

நிலைபேறான மாதவிடாய் ஆரோக்கியத்திற்கான சூழல்தொகுதி அடிப்படையிலான அணுகுமுறையை மேம்படுத்துவதன் மூலம் #BleedGood இன் 5 வருடத்தை கொண்டாடும் Selyn

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, Selyn குழுமம் தமது செயற்பாடுகளுடன் தொடர்புடைய சமூகங்களின் யதார்த்தமான விடயங்களுக்கு உதவுதன் மூலம் தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டில் ஒரு சிறிய கைத்தறி நிறுவனமாக நிறுவப்பட்டதிலிருந்து, நெறிமுறைசார் உற்பத்தி, சில்லறை விற்பனை, ஏற்றுமதி, நிலைபேறான தயாரிப்பின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்முகப்படுத்தப்பட்ட நியாய வணிக நிறுவனமாக Selyn வளர்ச்சி அடைந்துள்ளது. 

தம்மைச் சுற்றியுள்ள சமூகங்கள் வளச்சியுறும்போது மாத்திரமே வணிக நிறுவனங்களும் நிலைபேறான முறையில் வளர முடியும் எனும் நீண்டகால நம்பிக்கை, இந்த பரிணாம வளர்ச்சியின் மையமாக இருந்து வருகிறது. இது குறித்து Selyn குழுமத்தின் நிறுவுனர் சாண்ட்ரா வந்துரகல தெரிவிக்கையில், “சமூகங்கள் வளர்ந்தால் மாத்திரமே வணிகங்களும் வளர முடியும் எனும் எளிமையான ஆனால் அடிப்படையான தத்துவத்தின் மீதே Selyn கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சிந்தனையானது, அர்த்தமுள்ள தாக்கதத்தையும் நிலைபேறான வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும், புத்தாக்க கண்டுபிடிப்புகளை புகுத்தவும், பன்முகப்படுத்தவும் எமது திறனைத் தொடர்ச்சியாக வடிவமைத்துள்ளது. இதே தத்துவமே #BleedGood இன் தோற்றத்திற்கும் வழிவகுத்தது. இது இன்று கண்ணியம், நிலைபேறான தன்மை மற்றும் நீண்டகால சமூகப் பொருத்தப்பாட்டை மையமாகக் கொண்ட ஒரு பரந்த சூழல் கட்டமைப்பை மையப்படுத்திய அதன் ஒரு அங்கமாக உருவெடுத்துள்ளது.” என்றார். 

கொவிட்-19 தொற்று காலத்தில், Selyn நிறுவனம் தனது செயற்பாட்டு வலையமைப்புடன் தொடர்புடைய சமூகங்களிடையே மாதவிடாய் குறித்த தெளிவின்மை மற்றும் மாதவிடாய் குறித்த சுகாதார பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கண்டறிந்தது. ஆரம்பத்தில் ஒரு சமூக சவாலாகத் தோன்றிய இது, மாதவிடாய் விழிப்புணர்வு, பிழையான எண்ணங்கள், அது குறித்த பொருட்களுக்கான அணுகல், கட்டுப்படியான விலை, நிலைபேறான தன்மை மற்றும் நீண்டகால நடத்தை மாற்றம் ஆகியன தொடர்பில் காணப்பட்ட பரந்த இடைவெளிகளை வெளிக் கொண்டு வந்தது. 

இப்பிரச்சினையை குறுகிய கால நன்கொடைகள் மூலம் மட்டும் அணுகுவதற்குப் பதிலாக, Selyn தனது தற்போதைய உற்பத்தி அறிவு, நிலைபேறான தன்மை அனுபவம், சமூக வலையமைப்புகள் மற்றும் நெறிமுறை ரீதியான உற்பத்தித் திறன்களைப் பயன்படுத்தி மீள் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் ஆரோக்கிய தீர்வுகளை உருவாக்க தொடங்கியுள்ளது. ஆயினும், பெண்கள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சமூகப் பங்குதாரர்களுடனான தொடர்ச்சியான ஈடுபாடானது, இவ்வாறான தயாரிப்புகளை வழங்குவது மாத்திரம் நீண்டகால மாற்றத்தை உருவாக்காது எனும் உண்மையை வெளிப்படுத்தியது. இந்த நுண்ணறிவே காலப்போக்கில் #BleedGood ஆக உருவெடுப்பதற்கான அடித்தளமாக அமைந்தது. இது தற்போது பெண்களின் கண்ணியம் மற்றும் சுகவாழ்வு தொடர்பான இக்குழுமத்தின் சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் தளமாகவும், சூழல் கூட்டாளராகவும் விளங்கும் Selyn அறக்கட்டளையின் (Selyn Foundation) கீழ் நிலைபேறான மாதவிடாய் ஆரோக்கியத்திற்கான ஒரு மூலோபாய சூழல் கூட்டாளராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஐந்து வருடங்களில், #BleedGood ஆனது விழிப்புணர்வு, மாதவிடாய் ஆரோக்கிய கல்வி, நடத்தை மாற்றம், ஆலோசனை, கூட்டாண்மை, அமுலாக்கம் மற்றும் நிலைபேறான தயாரிப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை நீண்டகாலத்திற்கான, முறையான அணுகுமுறைக்குள் ஒன்றிணைக்கும் பரந்த சூழல் சார்ந்த ஒரு திட்டமாக வளர்ந்துள்ளது. நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனிதாபிமான முகவர் நிலையங்கள், சுகாதார சேவை பங்குதாரர்கள், இளைஞர் அமைப்புகள், அபிவிருத்திச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சூழல் கூட்டாளர்களுடனான ஒத்துழைப்பின் மூலம், இந்த திட்டமானது சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் முழுவதும் சரியான தகவலறிந்த, கண்ணியமான மற்றும் நிலைபேறான மாதவிடாய் ஆரோக்கிய நடைமுறைகளை ஆதரிக்க உழைக்கிறது. 

Selyn நிலைபேறான மாதவிடாய் ஆரோக்கிய வர்த்தகநாமமான FemmeCare, இந்த சூழல் கட்டமைப்பிலிருந்து உருவான ஒன்று என்பதுடன், தற்போது நிலைபேறான மாதவிடாய் ஆரோக்கிய தீர்வுகளுக்கான குழுமத்தின் புத்தாக்க கண்டுபிடிப்பு தளமாக செயற்படுகிறது. தொடர்ச்சியான பயனர் ஈடுபாடு, களத்தில் பெறப்படும் நுண்ணறிவு மற்றும் தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம், நுகர்வோர் மற்றும் நிறுவனங்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு பதிலளிக்கும் அதே வேளையில், தயாரிப்பு பயன்பாடு, அணுகல், ஆறுதல் மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் ஆகியவற்றை FemmeCare தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது. 

இன்று, இந்த கட்டமைப்பானது தயாரிப்புகளுக்கு அப்பால் விரிவடைந்து, தரநிலைகள் ஈடுபாடு, பணியிடத்தில் அனைவரையும் உள்ளீர்த்தல், வாதிடுதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மீள் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் தயாரிப்புத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பான விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் உலகளாவிய கூட்டணியான மீள் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் தயாரிப்பு உற்பத்தியாளர்கள் கூட்டணியின் (Reusable Menstrual Product Manufacturers Alliance - RMPMA) ஒரு ஸ்தாபக உறுப்பினராக FemmeCare திகழ்கிறது; அதே நேரத்தில் Selyn அறக்கட்டளை Period Positive Workplace (PPW) (மாதவிடாய்க்கு சாதகமான பணியிடம்) எனும் அங்கீகாரத் திட்டத்திற்கான இலங்கை பங்காளியாகச் செயற்படுகிறது. FemmeCare நிறுவனம் மீள் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் தயாரிப்புகளுக்கான தரநிலைகளை உருவாக்குவதற்கு ஆதரவாக இலங்கை தரக்கட்டளை நிறுவனத்துடன் (SLSI) இணைந்து செயற்படுவதுடன், மாதவிடாய் தயாரிப்புகளுக்கான உலகளாவிய தரநிலைகளை நோக்கி தற்போது பணியாற்றி வரும் ISO தொழில்நுட்பக் குழு 338 இற்கும் பங்களிப்புச் செய்து வருகிறது. 

கடந்த ஐந்து வருடங்களில், இந்த பரந்த கட்டமைப்பானது, நிலப்பரப்புகளில் கொட்டப்படும் சுமார் 21,600 கிலோ மாதவிடாய் கழிவுகளைத் தவிர்க்கவும், 16,000 இற்கும் மேற்பட்ட மீள் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் தயாரிப்புகளை விநியோகிக்கவும், மாதவிடாய் ஆரோக்கிய கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் 9,500 இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளைச் சென்றடையவும் உதவியுள்ளது. மிக முக்கியமாக, இந்த முயற்சியானது நிலைபேறான தன்மை, சமூக ஈடுபாடு, கூட்டாண்மை, நடத்தை மாற்றம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை ஒரே நீண்டகாலக் கட்டமைப்பிற்குள் இணைக்கும் ஒரு அளவிடக்கூடிய கட்டமைப்பு மாதிரிக்கு (Scalable ecosystem model) பங்களித்துள்ளது. இன்று, இந்த கட்டமைப்பானது சமூகங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனிதாபிமான முகவர் நிலையங்கள், சூழல் செயற்பாட்டாளர்கள் மற்றும் அமுலாக்க கூட்டாளர்களின் ஒத்துழைப்பு மூலம் பரந்துபட்ட முறையில் இயங்கி வருகிறது. கூட்டாண்மை மற்றும் முறையான சிந்தனை எவ்வாறு நீண்டகால சமூக தாக்கத்தையும் நிறுவன நெகிழ்வுத் தன்மையையும் வலுப்படுத்தும் என்பதையும் இது நிரூபிக்கிறது. 

இது குறித்து, Selyn குழுமத்தின் பிரதம வளர்ச்சி அதிகாரி (Chief Growth Officer) செலினா பீரிஸ் கருத்து வெளியிடுகையில், “நிலைபேறான வளர்ச்சியின் எதிர்காலம் என்பது சமூகங்கள், கூட்டாண்மைகள், புத்தாக்கங்கள் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகள் ஆகியன, நீண்டகால மதிப்பை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படும் சூழல் கட்டமைப்புகளை உருவாக்குவதில் உள்ளது. கண்ணியம், நிலைபேறான தன்மை மற்றும் வணிகப் புத்தாக்கம் ஆகியன தனித்தனியாக இருக்க வேண்டிய அவசியமில்லை எனும் எமது நம்பிக்கையை #BleedGood பிரதிபலிக்கிறது. நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட நோக்கத்தின் மூலம் அணுகும்போது அவை ஒன்றையொன்று வலுப்படுத்திக் கொள்ள முடியும்.” என்றார். 

#BleedGood தனது ஐந்தாவது ஆண்டை கொண்டாடும் இவ்வேளையில், இந்த முயற்சியானது ஒரு வழக்கமான விழிப்புணர்வுத் திட்டத்திற்கு அப்பால் பரவலடைந்து, நிலைபேறான மாதவிடாய் ஆரோக்கியம், கண்ணியம் மற்றும் நீண்டகால நடத்தை மாற்றத்தை ஆதரிக்கும் ஒரு பரந்த கட்டமைப்புத் தளமாகத் தொடர்ந்து வளர்ந்து வருகின்ற அதே நேரத்தில், பெண்களுக்கும் சமூகங்களுக்கும், அனைவரையும் உள்ளடக்கிய, தகவலறிந்த மற்றும் நெகிழ்ச்சியான எதிர்காலத்திற்குப் பங்களிக்கிறது. 

Selyn Group பற்றி 

1991 இல் நிறுவப்பட்ட Selyn குழுமம், நியாயமான வணிக சான்றிதழ் (Fair Trade-certified) பெற்ற இலங்கையின் ஒரேயொரு கைவினைப்பொருள் நிறுவனமாகும். அத்துடன் இது ஒரு சிறிய கைத்தறி நிறுவனத்திலிருந்து நெறிமுறை ரீதியான உற்பத்தி, நிலைபேறான தயாரிப்புக்கான புத்தாக்க கண்டுபிடிப்புகள், சில்லறை விற்பனை, ஏற்றுமதி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றில் செயற்படும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட சமூக வணிகமாக வளர்ந்துள்ளது. Selyn அறக்கட்டளை, #BleedGood மற்றும் FemmeCare ஆகியவற்றின் மூலம், Selyn நிறுவனம் நிலைபேறான தன்மை, புத்தாக்கம், கண்ணியம் மற்றும் நீண்டகால சமூக தாக்கத்தை இணைக்கும் சூழல் சார்ந்த கட்டமைப்பு மாதிரிகளைத் தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறது.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title